வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஒரே குஷிதான் போங்கள் ? தொண்டர்கள் வேலை செய்ய! மக்கள் ஒட்டு போட! மாறன் பிறதேர்ஸ் பதவியும் பணமும் பெற ?

தயாநிதி திருட்டை அம்பலம் ஆக்கிய  அதிகாரி மதிவாணனின் ஒய்வுதியத்தை  நிறுத்திய BSLN , தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சட்டவிரோதமாக தனது சென்னை வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தது குறித்து சி.பி.ஐ. செய்யும் விசாரணை எதுவரை போகும்? தற்போதைய மத்திய அரசில் அதிக தூரம் போகாது என்பதற்கு ஆதாரமாக, இந்த ஊழலை அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல். அதிகாரியின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மக்கள் பணத்தில் கம்பனி நடத்திய மாறன் சகோதரர்களின் சட்டவிரோத இணைப்பு பற்றிய தகவலை வெளியிட்டதற்காக அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.
இந்திய மக்கள் ஒரு பக்கத்திலும், மாறன் குடும்பமும் மத்திய அரசும் எதிர் பக்கத்திலும் நிற்கும் இந்தப் போராட்டத்தில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரியின் பெயர் மதிவாணன். இவர் துணைக் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்ததில், அக்கட்சி தமிழகத்தில் பெற்ற எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு தி.மு.க. தயவு தேவைப்பட்டது. அதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர் பதவிகளை கொண்டு ‘எதுவும் செய்யலாம்’ என்ற நிலை ஏற்பட்டது.

மக்கள் ஓட்டுபோட, தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற, அமைச்சர் பதவி மட்டும் ஒரே குடும்பத்துக்கு போக முடியுமென்றால், அதில் வரும் சம்பாத்தியம் மக்களுக்கோ, தி.மு.க. தொண்டனுக்கோ போக முடியுமா? அதுவும், ஒரே குடும்பத்துக்குள்ளே சுற்றி வந்தது.
தி.மு.க.வின் இந்த லட்சியக் கோட்பாட்டின்படி தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி குழுமத்திற்காக சட்டவிரோதமாக தொலைத் தொடர்பு துறையை பயன்படுத்தி வந்தார். சன் டி.வி. வெற்றி பெற்ற நிறுவனம் என்று வெளியே பேச்சு உள்ளது. அந்த நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகளுக்கே காசு கொடுத்தது பொதுமக்கள்தான் என்பதை வெளியே தெரிய வைத்தவர், மதிவாணன்.
மாறன்களின் திருட்டை மதிவாணன், கிட்டத்தட்ட 3 வருடங்களாக பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடையே பிரசாரமே செய்து வந்தார். அவரை சும்மா விடலாமா? வைத்தார்கள் ஆப்பு!
கடந்த ஜூன் மாதம் மதிவாணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நிறுத்தி வைத்து விட்டது பி.எஸ்.என்.எல். நிர்வாகம்.
கூறப்பட்ட காரணம் என்ன? “உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்” என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆம். ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அமைச்சரின் கீழ், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உயரதிகாரிகளின் திருட்டை அம்பலப்படுத்திய மதிவாணன், ஒழுங்காக பணிபுரிந்து, நியாயமாக சம்பாதித்த ஓய்வூதியத்தை நிறுத்தியுள்ளது, மத்திய அரசு.
இதுகுறித்து மதிவாணன் கூறுகையில், “எனது ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தது எனக்கு அதிர்ச்சி தரவில்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனத்தின் ரூ. 440 கோடி இழப்புக்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்திய திருப்தி எனக்கு உள்ளது” என்கிறார். பென்ஷன் இழந்தாலும், மேன்மக்கள், மேன்மக்கள்தான்!
சரி. மதிமாறனுக்கு அதில் திருப்தி. சராசரி இந்தியனுக்கு எதில் திருப்தி? இதோ இதில்தான்:
“தயாநிதியும், கலாநிதியும் தங்கள் சம்சாரங்களுடன் போன் பேசுவதற்குகூட, நாமதான் பைசா கொடுத்து உதவினோம்” viruvirupu.com

கருத்துகள் இல்லை: