வியாழன், 3 அக்டோபர், 2013

தயாநிதியின் பெயரை ஏன் கின்னசுக்கு சிபார்சு செய்யகூடாது ? 323 இலவச இணைப்பாச்சே!

தயாநிதிக்கு வருகிறது சி.பி.ஐ. சம்மன்: ஒன்றா, ரெண்டா, 323 இலவச இணைப்பாச்சே! தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. தயாநிதி இந்த தொலைபேசி இணைப்புகளை இனாமாக பெற்று, தமது சகோதரர் கலாநிதியின் சன் டி.வி. உபயோகத்துக்கு கொடுத்திருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சருமான தயாநிதி செய்த இந்தக் குற்றம் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள், தயாநிதியின் வீட்டில் சோதனை நடத்தியபோது, முறைகேடாக 323 தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்பட்ட விஷயம் தெரியவந்தது. அந்த இணைப்புகள் தயாநிதியின் போட் ஹவுஸ் வீட்டிலிருந்து, அவரது சகோதரர் கலாநிதினுக்கு சொந்தமான சன் டிவி நிறுவனத்திற்கு பூமிக்கு அடியில் ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் கொண்டு செல்லப்பட்ட விபரத்தையும் சி.பி.ஐ. தெரிந்துகொண்டது.
தயாநிதியின் வீட்டில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்பு, அவரின் பெயரில் இல்லாமல், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் – சென்னை தொலைபேசி இணைப்பகம் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருந்தது.
இலவசம்தானே என்ற வகையில், தாராளமான பாவனையில் இந்த இணைப்புகள் இருந்தன. உதாரணமாக, மார்ச் 2007-ல் 1 மாதத்தில் மட்டும், 4.8 மில்லியன் யூனிட் பாவனை செய்யப்பட்டு இருந்தது.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது சி.பி.ஐ. அத்துடன், இந்த முறைகேட்டில் தயாநிதிக்கு துணை புரிந்துள்ளதாக, பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மானந்தன் மற்றும் முன்னாள் துணை பொது மேலாளர் எம்.பி.வேலுசாமி ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில்தான் தயாநிதிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படவுள்ளது என சி.பி.ஐ. வட்டாரங்களில் கூறப்படுகிறது viruvirupu.com

கருத்துகள் இல்லை: