சனி, 5 அக்டோபர், 2013

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குகிறார்?

 ராஞ்சி: பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரும் சிக்குகிறார். தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 1995-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். நிதீஷ்குமாருக்கு எதிரான தகவலின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: