நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.
அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை நேற்று சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மந்திரி கிரண் வாலியா, 'சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது' என்று கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த ஆண்டு 13 வயது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு முதலாளி குடும்பத்தினர் தாய்லாந்து சுற்றுலா சென்றதும், பூட்டிய வீட்டினுள் பல நாட்கள் தனியாக தவித்த அந்த சிறுமியை போலீசார் மீட்டதும் நினைவிருக்கலாம். malaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக