
வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:
"ஹிந்துத்துவா' தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம்.
கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி. என்னே இவரது ஞானோதயம் ? ஆண்டாண்டு காலமாக அம்பேத்காரும் பெரியாரும் உரக்க சொன்னதை வெறும் தேர்தல் ஸ்டாண்டுக்கு மட்டும் உபயோக்கும் மோடியின் கபட நாடகம் படு கேவலமானது ,
இதே போன்ற கருத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னர் கூறியபோது, நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக