
இதை மிக சுலபமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல்களில், மோடியின் திருச்சி மாநாட்டுக்கு முக்கியத்துவம் தராததில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அதை மோடியும் உணர்ந்தே இருக்கிறார் என்பது, அவரது பேச்சில் புலப்பட்டது. ஹைதராபாத் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்த மோடி, திருச்சியில், அ.தி.மு.க. ஆட்சி பற்றி நல்ல விதமாக ஏதும் கூறவில்லை.
மற்றொரு விஷயத்தையும் கவனியுங்கள்.
திருச்சி மாநாட்டில், மத்திய அரசின் ஊழல் விவகாரங்களை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசில் முன்பு பார்ட்னராக இருந்த தி.மு.க.வை சீண்டவில்லை. நாளைக்கே தேவை ஏற்பட்டால், பா.ஜ.க., தி.மு.க.வை தேடிச் செல்லலாம் என்பது போன்ற ஒரு தோற்றம் இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்குள் ‘செல்வாக்கு’ உள்ள இளைய தலைமுறையினர் (பச்சையாக சொன்னால், கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த சிலர்) தி.மு.க.வை மோடியை நோக்கி திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்களது முயற்சி வெற்றி பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
தே.மு.தி.க.வும் தற்போது, பா.ஜ.க. பக்கம் ஆர்வமாக பார்க்க தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். திருச்சி மாநாட்டின் வெற்றி, விஜயகாந்துக்கு பா.ஜ.க. மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் வைகோவுக்கு இருந்தது. அ.தி.மு.க. தனித்து போட்டியிட செய்யும் ஏற்பாடுகளை பார்த்த வைகோ, இப்போது 3-வது அணி பற்றிய யோசனையில் உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திருச்சியில் பா.ஜ.க. மாநாடு நடந்தபோது அந்த ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்த வைகோ, தனக்கு அருகே இருந்தவர்களிடம் தமது மகிழ்ச்சியை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டாராம். அதன் அர்த்தம், கூட்டணி பற்றிய ம.தி.மு.க.வின் குட்-புக்கில் தற்போது உள்ள கட்சி, பா.ஜ.க. என்பதுதான்.
ஆனால், பா.ஜ.க. பக்கம் தி.மு.க. பார்வையை திருப்பினால், வைகோ என்ன முடிவு எடுப்பாரோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக