வெள்ளி, 4 அக்டோபர், 2013

சீனா : கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர் ! பொது இடங்களில் மூக்கை நோண்டாதீர் !


பீஜிங்:சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர். அப்போது, நீச்சல் குளங்கள், ஓட்டல்கள், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பல புகார்கள் எழுந்தன. இதனால் சீனாவுக்கும், மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீன சுற்றுலா துறைக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் எகிப்து நாட்டுக்கு சென்ற சீன பயணி ஒருவர், அந்நாட்டின் புராதன சிலை ஒன்றை சிதைத்து விட்டதாக பரபரப்பாக புகார் வந்தது. இதற்கு சீன உயர் அதிகாரி வாங் யாங் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். ‘சீன சுற்றுலா பயணிகளின் விரும்பத்தகாத நடத்தையால், சீன மக்களின் மதிப்பு உலக நாடுகளின் மத்தியில் குறைகிறது. எனவே, வெளிநாடுகளில் சீன மக்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி சமீபத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்தது. பேசாம சீனா பயலுவளை நம்ப போலீசில் சேர்த்தாநாமளும் உருப்பட்டுவோம்ல 
அதில் கூறியிருப்பதாவது: பொது கழிப்பிடங்களுக்கு செல்லும் பயணிகள் அங்கே நீண்ட நேரம் இருக்க கூடாது. கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள். முறைப்படி பயன்படுத்துங்கள். பொது இடங்களில் மற்றவர்களுக்கு அருவெறுப்பு ஏற்படும் வகையில் மூக்கை நோண்டாதீர்கள். பற்களில் சிக்கி கொண்டிருக்கும் உணவு துகள்களை விரல்களால் எடுக்க முயற்சிக்காதீர்கள். அதற்கான குச்சியை பயன்படுத்துங்கள். ஓட்டல்களுக்கு சென்றால் சூப் குடிக்கும் போதும், நூடுல்ஸ் சாப்பிடும் போதும், அதிக சத்தம் வரும் வகையில் சர்ரென்று உறிஞ்சாதீர்கள்.

நீச்சல் குளங்களில் குளிக்கும் போது சிறுநீர் கழிக்காதீர்கள். விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள். இதுபோன்ற பல அறிவுரைகளை சுற்றுலா பயணிகளுக்கு சீன அரசு வெளியிட்டுள்ளது - See more .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: