திங்கள், 7 ஜனவரி, 2013

அழகிரி அறிவிப்பு: துரை தயாநிதி Delhi அரசியலுக்கு வருகிறார்!

போங்கய்யா.. நீங்களும், லோக்கல் பாலிட்டிக்ஸூம்...“என்னுடைய மகன் துரை தயாநிதியும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்” என்று கூறியுள்ள அஞ்சாநெஞ்சர், “அவர் விரும்பினால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார்” என்றும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி வாரமிருமுறை வெளியாகும் இதழுக்கு அளித்த பேட்டியில், “துரை தயாநிதி தீவிர அரசியலில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. அவரை நிம்மதியாய் தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். எனவே அவர் அரசியலில் தீவிரம் காட்டப்போகிறார்” என்று கூறியுள்ளார்.

போங்கய்யா.. நீங்களும், லோக்கல் பாலிட்டிக்ஸூம்…
மேலும், “அவர் விரும்பினால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார்” என்றும் கூறியுள்ளார்.

என்னதான் மு.க.அழகிரி தி.மு.க.-வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக உள்ள போதிலும், ஆக்டிவ் அரசியலைப் பொறுத்தவரை அவர், மாநில அரசியலுக்குள் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சருமாக உள்ளார். அந்த வழியில் துரை தயாநிதியையும் டில்லி பக்கம் கொண்டு போவது சேஃப் என்று அவர் நினைக்கிறார் என்று புரிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த துரை தயாநிதி, “எங்க தாத்தாவைப் பார்த்துதான் எனக்கு கரை வேட்டி கட்டும் ஆசையே வந்தது. அப்பா விரும்பியது போல் நடப்பேன். அப்பா என்னை எம்.பி. தேர்தலில் நிற்கச் சொன்னாலும் நிற்பேன்” என்றார்.
“மத்திய அமைச்சராக சொன்னாலும் ஓகேதான்” என்றும் ஒரு வார்த்தை சேர்த்து சொல்லியிருக்கலாமே! நம்ம கட்சிதானே! viruviruppu.com

கருத்துகள் இல்லை: