வியாழன், 10 ஜனவரி, 2013

தாராபுரம் கடலை வியாபாரியின் அமெரிக்க பத்திரங்கள் போலி? நெட்டில் டவுன்லோடு செய்தார்?

Viruvirupu
லண்டனைச் சேர்ந்த ‘பார்க்லேஸ்’ வங்கி, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, அமெரிக்க பத்திரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. மொத்தம் ரூ.27,500 கோடி பெறுமதியாக அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) அவரிடம் இருந்து வருமாகவரி துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
கடலை வியாபாரி ராமலிங்கம் வைத்திருந்ததாக இவர்கள் கைப்பற்றிய அமெரிக்க பத்திரங்கள் இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை என்றும், பார்க்லேஸ் வங்கி தகவல் தெரிவித்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் ராமலிங்கத்திடம் முதல் கட்ட விசாரணையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரை நாளை மீண்டும் விசாரணை நடத்த சம்மன் கொடுத்து உள்ளனர். பத்திரங்கள் நிஜமானவைதான் என்றே ராமலிங்கம் இன்னமும் கூறுகிறார்.
இதில் பதில் தெரியாத கேள்விகள் பல உள்ளன. பத்திரம் போலி என்றால், தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு, மத்திய ரசாயனத் துறை அலுவலகத்துக்கு ராமலிங்கம் அனுப்பி வைத்த 2,500 கோடி ரூபாய் தொகை செக் விவகாரம் என்ன? அது, இந்திய ரூபாவில், இந்திய வங்கி செக்.
அதையும் இணையத்தில் டவுன் லோடு செய்தாருங்களா?

கருத்துகள் இல்லை: