சனி, 2 ஜூன், 2012

காஷ்மீர் ஜிஹாத் கிளர்ச்சியை கைவிட்டு இந்தியா திரும்ப விருப்பு

இந்திய ஆட்சி எதிர்த்து சண்டையிடும் நோக்கில் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரத்திலிருந்து எல்லை கடந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் காஷ்மீருக்குள் சென்றிருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர், தாங்கள் ஆயுதக் கிளர்ச்சியை கைவிட்டு இந்தியா திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளதன் காரணம் என்ன?



காஷ்மீரப் பள்ளத்தாக்கு இந்திய ஆளுகையின் கீழ் இருப்பதை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதம் ஏந்தச் சென்ற கிளர்ச்சிக்காரர்களில் பலர் "காஷ்மீர் ஜிஹாத்" என்று தாங்கள் கூறும் இந்த இயக்கம் இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.


"பாகிஸ்தான் அரசு உதவவில்லை"தொடர்புடைய பக்கங்கள்தாய் மண் திரும்பும் காஷ்மீரிகள்தொடர்புடைய விடயங்கள்போர்
தங்களுடைய செயற்பாடுகளுக்கு பொருள் ரீதியான ஒத்தாசையும் உதவிகளும் வழங்குவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொண்டு வருகிறது என இவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் பக்கத்தில் இருந்துவரும் காஷ்மீரி ஆயுதக் கிளர்ச்சிக்காரர்கள் மூவாயிரம் நான்காயிரம் பேர் தமது எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளனர்.

முகம்மது அஹ்ஸான் முன்னாள் கிளர்ச்சிக்காரர் ஒருவர், தற்போது அவர் முஸாஃபராபாத்திலிருந்து கிளம்பி இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தன் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்.

"இதற்கும் மேலும் இங்கே இருந்து புண்ணியம் இல்லை. ஜிஹாத் எல்லாம் முடிந்துவிட்டது. இங்கே எங்களை வறுமை வாட்ட ஆரம்பித்துவிட்டது. அப்படியிருக்கும்போது ஊர் பேர் தெரியாத பரதேசி போல பிச்சை எடுக்கிறதை விட சொந்த ஊருக்கு போய் சொந்த பந்தங்களோட கூழோ கஞ்சியோ குடிச்சு காலத்தை தள்ளிடலாம்."

முன்னாள் கிளர்ச்சிக்காரர் முகம்மது அஹ்ஸான்


நேபாளம் வழியாய்...தனக்கும் தனது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட் வாங்கும் அளவுக்கு தான் பணம் சேர்த்துவிட்டதாக அவர் தெரிவித்தார். காத்மாண்டு போனால் அங்கிருந்து எல்லை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்து ஸ்ரீநகர் சென்றுவிட இவர் திட்டம் வைத்துள்ளார்.

ஆனால் இவரைப் போல நேபாளம் வழியாக இந்தியா செல்லும் அளவுக்கு வசதியோ வழிவகைகளோ தமக்கு இல்லை என இங்கு வேறுபல முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

காஷ்மீரத்தை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஸ்ரீநகர் திரும்புவதையே இவர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் ஏனென்றால் அதுவே விரைவான வழியாகவும் பயணச் செலவு குறைவான வழியாகவும் இருக்கும்.

ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு எல்லை வழியாக முறைப்படி பயணிப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இரண்டு பக்கத்திலும் இராணுவம் குவிக்கப்பட்டு அதிகம் கண்காணிக்கப்படும் ஒரு இடம் என்பதால் சட்டவிரோதமாக எல்லையை ஊடுருவது என்பதற்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ஏற்கனவே இந்தியா திரும்பியவர்கள்கடந்த ஜனவரியில் இருந்து பார்க்கையில் சுமார் ஐநூறு போராளிகள் இவ்விதமாக இந்தியா திரும்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இங்கிருந்து கிளம்பி இந்தியக் காஷ்மீருக்குள் சென்று சேர்ந்தவர்கள், இந்திய அதிகாரிகள் வழங்கிய பொதுமன்னிப்பால் பலனடைந்திருக்கிறார்கள் என இங்கிருக்கின்ற முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே இந்தியப் பக்கத்துக்கு திரும்பியவர்களில் சிலர், சொந்த மண்ணிலும் தமக்கு போதிய வாழ்வாதார வாய்ப்பு இல்லாதது கண்டு அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறுகின்றனர். பிழைப்பு நடத்தவும் மறுவாழ்வு பெறவும் பெருங்கஷ்டமாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: