வெள்ளி, 1 ஜூன், 2012

Advani:பா.ஜ., மீது மக்கள் அதிருப்தி


thangairaja - Dammam,சவுதி அரேபியா
e
அத்வானி அவர்களே இப்படி புலம்ப வேண்டிய நிலையிலிருந்தால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பினை தெரிந்து கொள்ளலாம். அத்வானி எதிர்பார்ப்பதை போல பிஜேபி ஆர் எஸ் எஸ் நிர்பந்தமில்லாத சுய சார்பு தன்மையுடன் செயல் பட வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் மோடியை முன்னிலை படுத்துவதை நிறுத்துவதோடு அத்வானியையும் பிரதமர் வேட்பாளர் பட்டியலிலிருந்து வெளியேற்றி விட்டு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் ஒருவரை முன்னிலை படுத்தினால் வாய்ப்பு பிரகாசமாகும். அதற்கான வாய்ப்பு இல்லாததால் மீண்டும் காங்கிரசுக்கே ஜெயம்... வசப்படும்.
புதுடில்லி: ""பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்,'' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவரான அத்வானியே கூறியுள் ளார்.
இது தொடர்பாக அத்வானி, தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: பல்வேறு ஊழல்கள் காரணமாக, மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது, மக்கள் இப்போது கடும் கோபத்தில் உள்ளனர். அதேநேரத்தில், மக்களின் கோபத் தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி முற்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களை பா.ஜ., கட்சியில் சேர்த்ததன் மூலம், பா.ஜ., கட்சியின் ஊழலுக்கு எதிரான பிரசாரம் தடைபட்டுள்ளது. பா.ஜ., கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. பல்வேறு ஊழல்களுக்காக ஊடகங்கள் எல் லாம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளன. மக்களின் கருத்தைத்தான் ஊடகங்கள் இப்படி பிரதிபலிக்கின்றன என்பதை, நானும் ஒரு முன்னாள் பத்திரிகையாளன் என்ற முறையில் உணர்கிறேன். இந்த நாட்களில் பா.ஜ., கட்சி மகிழ்ச்சியான நிலையில் இல்லை. உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள், ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகாவில் கட்சியினர் நடந்து கொண்ட விதம், அதை மேலிடத் தலைவர்கள் கையாண்ட முறை போன்றவை எல்லாம், கட்சியின் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை சீர்குலைத்து விட்டன. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் கட்சி எம்.பி.,க்களின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: