செவ்வாய், 29 மே, 2012

மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை (வயது 81) இன்று (29.5.20120 மாலை காலமானார்.கம்யூனிஸ்ட்வாதியாகவும்,  பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர் சோலை ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்து விலகினார். திமுக தலைவர் கலைஞருடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார்.  அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை. நக்கீரன் வாரமிருமுறை இதழ் உட்பட பல்வேறு இதழ்களில்  தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார ண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்ட சோலை,  சென்னையில் வசித்து வந்தார்.
உடல்நலக்குறைவால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   அங்கு சிகிச்சை >பலனின்றி இன்று மாலை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரது இல்லத்தில் காலமானார்.சோலையின் உடல் அவரது இல்லத்தில் (11, தொல்காப்பியர் தெரு,  சீனிவாசா நகர், புதுப் பெருங்களத்தூர், சென்னை - 600063 இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.ளை (30.5.2012) குரோம்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப் படுகிறது.

கருத்துகள் இல்லை: