இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என தனக்குள் பல முகங்களை கொண்டுள்ளவர் சந்தோஷ் சிவன். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள சந்தோஷ் சிவன், ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘உருமி’.
இந்தியாவின் 15-ம் நூற்றாண்டின் வரலாற்றை தனது சிறந்த ஒளிப்பதிவின் மூலம் கண்முன்னே கொண்டுவந்து பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ள சந்தோஷ் சிவன் American society of cinematographers என்ற அமெரிக்காவின் ஒளிப்பதிவாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவை ‘வாஸ்கோடகாமா’ கண்டுபிடித்ததாக கூறப்படும் செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இந்தியாவிற்கு வந்ததன் உண்மையான நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் அது தொடர்பான பல உண்மைகளை விளக்கியுள்ளேன். இது போன்ற சில வரலாற்றுக் குறிப்புகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது" என்று கூறினார் சந்தோஷ் சிவன்.
கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தாமல் வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களை இயக்கிவரும் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தின் கதை இலங்கை பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.
சந்தோஷ்
சிவன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும்
துப்பாக்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக