ஞாயிறு, 27 மே, 2012

இரு அதிமுகவினர் டிஸ்மிஸ் நடராஜன் வீட்டு திருமணத்திற்கு சென்றது கட்சி கட்டுப்பாடை மீறும் செயல்

Viruvirupu கடந்த 23, 25-ம் தேதிகளில் நடைபெற்ற நடராஜன் குடும்ப திருமணங்களில் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் தலையைக் காட்டிவிட்டு வந்த அ.தி.மு.க. புள்ளிகள், தலையில் துண்டு போட்டுக் கொண்டு நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
முதல் கட்டமாக இருவர் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மாரியம்மன் கோவில் ஊராட்சித் தலைவர் தனசேகர், தஞ்சை நகராட்சி, 26-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.


அ.தி.மு.க.-வில் இருந்து இருவர் மட்டுமா திருமணத்துக்கு சென்றனர்?
அ.தி.மு.க.-வில் பெரிதோ, சிறிதோ, ஏதாவது பதவி வகிக்கும் மொத்தம் 11 பேர் இரு தினங்களிலும் நடந்த திருமணத்துக்கு சென்றனர் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கார்டனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 11 பேரில், அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத தனசேகர், ராஜேஸ்வரன் ஆகிய இருவரையும் அம்மா எப்படி பிக் பண்ணினார் என்பதை, அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கட்சி நீக்க அறிவிப்பில், குறிப்பிட்ட இரு நபர்களும் நடராஜன் குடும்ப திருமணங்களுக்கு சென்றதால், கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. “கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்” என்றுதான் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தஞ்சை அ.தி.மு.க.-வில் உள்ளவர்களுக்கு, இவர்கள் ‘கட்சியின் கண்ணியத்தை’ மாசு படுத்தியது நடராஜன் இல்ல திருமணத்தில் என்று தெரியும். எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிக்கையில் சொல்ல முடியாதல்லவா?
Two down; Nine to go என்றுள்ள நிலையில், மற்றைய 9 பேரும் எப்போது கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
அ.தி.மு.க.-வின் உள்விவகாரம் அறிந்த ஒருவர், “9 பேரும் நீக்கப்படுவார்கள் என்றும் அடித்து சொல்ல முடியாது. காரணம், இதில் வேறு சில விவகாரங்களும் உள்ளன. கட்சியில் இருந்து திருமண விழாவில் கலந்துகொண்ட ஒருவர், நிச்சயமாக உளவுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்ட ஆள் என்பது தெரியும். வேறு இருவர், தினகரனுக்கு நெருக்கமானவர்கள் (பினாமிகள் என்றும் சொல்லலாம்)” என்றார்.
தினகரனே விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், அவரது ஆட்கள் கலந்து கொண்டது கொஞ்சம் நெருடலான விஷயம். தமது ஆட்களை திருமணத்துக்கு அனுப்பினால், அம்மாவுக்கு கோபம் வரும் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும்.
அப்படியிருந்தும் அவர்கள் இருவரும் ஏன் சென்றார்கள்? அதில்கூட ஏதாவது உள் விவகாரம் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை: