செவ்வாய், 29 மே, 2012

CBI: ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்


Srinath - Seattle,யூ.எஸ்.ஏ

அதாவது ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது தந்தை ராஜசேகர ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த வரை ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. கொள்ளை என்பதே அறியாமல் இருந்திருந்தனர். ஆனால், இவரது தந்தை மண்டையைப் போட்டவுடனும், ஜெகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் தகிடுதத்தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக ஏழைகளின் சொத்தைக் கொள்ளையடித்து நாட்டு மக்களை பஞ்சத்தில் தவிக்கவிட்டு விட்டார் என்று சிபிஐ தனது விசாரணையின் மூலம் ஒரு மிகப் பெரும் உண்மையை வெளியில் கொண்டுவந்து நாட்டு மக்களைப் பஞ்சத்தில் இருந்து மீட்டு விட்டதற்காக ஒரு ஜே போடலாம். சும்மா சொல்லக் கூடாது. மத்திய அரசாங்க அதிகாரிகள் வெவரமாத்தான் இருக்குறாங்க. அதெல்லாம் சரி. போபர்ஸ் பீரங்கி, 2G , காங்கிரஸ் கட்சித் தலைவியின் கறுப்புப் பண விசாரணைகள் எவ்வளவு தூரம் போய்க்கொண்டு இருக்கு. அடத் தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. இவனுங்கள நம்பி 120 கோடி ஜனங்க இருக்குறாங்க பாரு. அவனுகள சொல்லணும்.
ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் மூன்று நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் இரவு, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன், நேற்று ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சி.பி.ஐ., வழக்கறிஞர் அசோக் பான் மேலும் கூறியதாவது:ஜெகன் மோகன் லஞ்சமாகவும், பிற முறைகேடான வழிகளிலும் பெற்ற பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
பணம் சுருட்டல்:ஜெகன் மோகனிடம், கடந்த 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ.,யினர் தன்னை துன்புறுத்துவதாக, ஜெகன் மோகன் நீண்ட காலம் போலியாக நடிக்க முடியாது. சி.பி.ஐ., தன்னை பழிவாங்குவதாகவும் அவர் சொல்ல முடியாது. அவர் ஏழை மக்களின் ஏராளமான பணத்தைச் சுருட்டியுள்ளார். அவர் எப்படி பணத்தைச் சுருட்டினார் என்பதை, நாங்கள் மக்களுக்குத் தெரிவிப்போம். இங்கிருந்து முறைகேடான வழியில் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தனக்கு சொந்தமான கம்பெனிகளில் முதலீடு செய்த அவரின் தந்திரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு அவர், பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாது.

விசாரணை அவசியம்:ஜெகனுக்கு சொந்தமான கம்பெனிகளில், 1,234 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவரும் தனக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளைச் சேர்ந்துள்ளார். தன் தந்தையின் பதவிக் காலத்தில் ஜெகன் செய்த முறைகேடுகள் என்ன என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், ஜெகனை 14 நாட்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சி.பி.ஐ., வழக்கறிஞர் கூறினார்.சட்ட விரோதம்ஜெகன் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஜெகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு விசாரணையில் உள்ள நிலையில், அவரை கைது செய்தது சட்ட விரோதம்

.இது, சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆந்திராவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஜெகன் மோகன் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். சி.பி.ஐ., அனுப்பிய நோட்டீசுக்கு ஆட்பட்டு, அந்த விசாரணை அமைப்பின் அதிகாரிகள் முன் ஆஜரான நபரை கைது செய்யக்கூடாது.ஜெகனுக்கு எதிரான வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் இந்த வழக்கின் விசாரணையில் ஒரு போதும் குறுக்கிடவில்லை மற்றும் சாட்சிகளை மிரட்டவும் இல்லை.இவ்வாறு ஜெகன் வழக்கறிஞர் கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனை ஜூன் 11ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மகனுக்கு பதில் தாய் பிரசாரம்:ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஆந்திராவில் அடுத்த மாதம் 12ம் தேதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ஜெகனின் தாயார் விஜயம்மா பிரசாரம் செய்வார். இது தொடர்பான முடிவு, நேற்று அவசரமாகக் கூடிய, ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரும் 30ம் தேதி முதல் விஜயம்மா பிரசாரம் செய்வார்.
ஜெகன் மோகனின் கைதை

கண்டித்து விஜயம்மாவும், அவரின் உறவினர்களும், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள லோட்டஸ் பாண்ட் இல்லத்தின் முன், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருப்பதால், விஜயம்மாவை உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், தன் மகனின் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே காரணம் என்று விஜயம்மா குற்றம் சாட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை: