சனி, 2 ஜூன், 2012

ஆ. ராசா- சொந்த தொகுதிக்கு செல்ல மனுத்தாக்கல்?

 Raja Will Seek Permission Go Nilgiris
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தமது சொந்த தொகுதியான நீலகிரிக்கு செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளையொட்டி அவரை சந்திக்க சென்னை செல்ல ஆ.ராசா அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் ராசா மனுத்தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் அடுத்த வாரம் தமது மக்களவைத் தொகுதியான நீலகிரிக்கு செல்ல அனுமதி கோரி ஆ. ராசா மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்துக்கு ஜூன் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை என்பதால் ஜூன் 8ம் தேதிக்கு முன்பாக ராசா தமது மனுவைத் தாக்கல் செய்யக் கூடும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிறையில் இருந்த ஆ. ராசாவுக்கு மே 15ம் தேதி ஜாமீன் கிடைத்தது. முன் அனுமதி இல்லாமல் டெல்லியை விட்டு அவர் செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆ.ராசா ஜாமீனில் வந்தது முதல் அவரது நீலகிரி மக்களவை தொகுதி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் டெல்லியில் முகாமிட்டு அவரை சந்தித்து வருகின்றனர்.

இதனால் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் தமது தொகுதிக்கு செல்ல ஆ.ராசா அனுமதி கோர உள்ளார் என்கின்றது ராசாவின் வட்டாரம்

கருத்துகள் இல்லை: