சனி, 13 நவம்பர், 2010

TNA .நாவற்குழு சம்பவம் ரி:.ன் ஏக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ்

வரப்போகின்ற வடமாகாண சபைத்தேர்தலில் அரசாங்கத்துடன் கூட்டுசேருகின்ற கட்சிகள் அனைத்தும் தோல்விகாணப்போவது நிச்சயம். நாவற்குழியில் சிங்கள மக்கள் பலவந்தமாக குடியேறிய சம்பவம் வடக்கு மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையின்மையை தோற்றுவித்துள்ளது. இதனால்தான் என்னவே டக்ளஸ் விழுந்தடித்துக்கொண்டு ஜனாதிபதியிடம் போய் முறையிட்டிருக்கிறார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு உயிர்கொடுப்பதில் அரசாங்கம் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறது. நாவற்குழி சம்பவங்கள் போன்று ஏடாகூடமாக எதையாவது செய்துவிட்டு தமிழ்க்கூட்டமைப்பிற்கு குளுக்கொஸ் ஏத்தி விடுகிறது.  டக்ளஸ் போன்றவர்கள்தான் பாவம். மக்கள் ஆதரவைக் கவருவதற்காக சிறு சிறு திட்டங்களைச் செய்து சப்போட் எடுக்க நினைக்கும்போதெல்லாம் நாவற்குழி சம்பவம் மாதிரி ஏதாவது வந்து எல்லாத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறது.
60ஆண்டு காலமாக தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசு தொடர்பாகவும் சிங்கள மக்கள் பற்றியும் தமிழர்களிடையே வளர்த்துவிட்ட  எதிர்ப்பு அரசியலை இலகுவில் மாற்ற முடியாது.  அப்படியே தமிழ்மக்களிடையே சிறிது மனமாற்றங்கள் ஏற்பட்டாலும் நாவற்குழி போன்ற நடவடிக்கைகள் இந்த மனமாற்றங்களை இல்லாமல் செய்து விடுகின்றன. தமிழ் அரசியல் வாதிகளுக்கு இவை வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.
வடக்கின் வசந்தத்தை ஏற்படுத்த அரசு முயற்சி செய்யும் போது இந்தமாதிரியான செயற்பாடுகள் குறித்து கவனம் வேண்டும். இலங்கையில் பிறந்த எந்தவொரு பிரஜையும் எங்கு வாழ உரிமையுண்டு. ஆனால் அதற்கான ஒழுங்கு பேணப்பட வேண்டும். யுத்தத்தால் சீரிழிந்து அல்லல்படும் தமிழ்மக்களே இன்னும் ஒழுங்காக குடியமரவில்லை. அதற்கிடையில் சிங்கள மக்கள் வந்து திடீர்படீர் என வந்து நின்றால் தமிழ்மக்களிடையே சந்தேகம் தோன்றாமல் விடுமா?. 83க்கு முன்னர் சிங்கள மக்கள் தமிழ்மக்களுடன் வடக்கில் ஐக்கியமாக வாழ்ந்தார்கள். அப்போது அவர் தீடிரென்று வந்து குடியேறவில்லை. அப்படித்தான் இனி வரும்காலங்களில் சிங்க மக்கள் தமிழ்மக்களுடன் வந்து படிப்படியாக சேர்ந்து வாழ வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் கோடி கோடியாக செலவழித்து வடக்கின் வசந்தத்தை நிறைவேற்ற முற்பட்டாலும் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல முடியாது.

கருத்துகள் இல்லை: