வியாழன், 11 நவம்பர், 2010

புற்றுநோய் செல் அழிக்கும் பப்பாளி இலைச்சாறு



உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடிநீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக் கட்டிகளின் செல் களைக் கொன்று அதன் வளர்ச்சி யைக் குறைக்கிறது என புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக் கட்டிகளின் வளர் ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக் கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக் கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலை வடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: