டாடா ஹவுசிங் நிறுவனம் சென்னை அருகே 960 வீடுகளுடன் புதிய குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
படப்பை அருகே கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
இது குறித்து டாடா ஹவுசிங் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளதாவது:
கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் திட்டம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், படப்பை நகரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், ஓரகடம் ஜங்ஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு வந்து செல்ல நெடுஞ்சாலை உள்ளது. முனிசிபாலிட்டிக்கு சொந்தமான ஏரி இந்த திட்டத்தின் லேண்ட்மார்க்காக உள்ளது. வீடுகள் ஒவ்வொன்றும் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் ஏரி பார்வையுடன் அமைந்துள்ளன.
6 ரெசிடென்சியல் அடுக்குமாடி கட்டடங்களாக அமையும் இந்த திட்டத்தில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறை கொண்ட 570 சதுர அடியில் 504 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 984/1139 சதுர அடியில் 304 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 1,406 சதுர அடியில் 152 வீடுகளும் உள்ளன.
பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் இந்த குடியிருப்புடன் சேர்த்து அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வசதியுடன் இந்த வீடுகள் அமைந்துள்ளன.
இவ்வாறு டாடா ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக