இது தொடர்பாக கவன சிறப்பு ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன் ( அ.தி.மு.க.,) விடியல் சேகர் ( காங்.,), ஜி.கே.மணி(பா.ம.க.,), டில்லி பாபு (மார்க்., கம்யூ., ) ஆகியோர் எழுந்து பேசினர். இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி பதில் அளித்து பேசுகையில் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது. மின் மீட்டரும் பொருத்தப்பட மாட்டாது. என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு.,கூறுகையில் ; போக்குவரத்து துறையில் பெண்கள் டிரைவராகவும், கன்டெக்டரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
முதல்வர் கருணாநிதி பேச்சு விவரம் : தொடர்ந்து பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
இலவச மின்சாரம் தொடர்பாக சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அரசியல் ஆதாயத்திற்காக சில அரசியல் கட்சியினர் கூறியதை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் மறியல் என அறிவித்ததால்தான் 196 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆட்சியாளர்கள்: உறுப்பினர்கள் கோரிக்கையின்படி நேற்று கைது செய்யப்பட்ட 196 விவசாயிகளும் விடுதலை செய்யப்படுவர். கடந்த ஆட்சியாளர்கள், போராட்டக்காரர்களை எப்படி அடக்கினர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் , எப்போதும் இலவச மின்சார திட்டம்ரத்தாகாது. ஏனெனில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கள்தான். நாங்கள் பெற்ற பிள்ளையை நாங்களே கழுத்தை நெரித்து விட மாட்டோம். பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி முடிவு எடுக்கப்படும் . இவ்வாறு முதல்வர் பேசினார்.
இலவச சர்க்கரை பொங்கல் பை : முதல்வர் கருணாநிதி இன்று விதி 110 ன்கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் இலவச பொங்கல்பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதன்படி அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும். பச்சரிசி, வெல்லம் மற்றும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் இருக்கும். கடந்த ஆண்டும் இது போல் இலவச பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மணி - சென்னை,இந்தியா
2010-11-11 15:39:49 IST
அரை பைசா மின்கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின்மீது துப்பாக்கி சூடு நடத்தி 3 உயிர்களைப் பறித்த கருணாநிதி, இதுவும் பேசுவார், இன்னமும் பேசுவார்!...
Panther பெரியசாமி - கோவை,இந்தியா
2010-11-11 15:38:12 IST
மஞ்சள் துண்டார்க்கு தேர்தல் காய்ச்சல் வந்திடிச்சி... அதன் பயம் வந்து இப்படி உளறிக்கொண்டு இருக்கிறார்......
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-11 14:03:07 IST
மின்சாரம் என்பதே இல்லாத ஒன்றாய் போனது நம் தமிழகத்தில்..இதில் "இலவசம்' என்ன.? மின் மீட்டர் பொருத்தினால் என்ன அல்லது பொருத்தாமல் போனால்தான் என்ன? இலவச மின்சாரத்தை அறிமுகம் செய்தாராம் அது இவர் பெற்ற பிள்ளையாம். நினைவுள்ளதா முதல்வர் அவர்களே..மின் கட்டண உயர்வில் ஒரே ஒரு பைசா குறைக்க சொல்லிய "விவசாய" தொழிலார்களை "துப்பாக்கி" சூடு நடத்தி..ஏழு விவசாயிகளை "கொன்றுவிட்டு" துப்பாக்கியை கொண்டு சுட்டால் "குண்டு" வராமல் "பூவா" வந்த விழும் என்று விளக்கம் சொன்ன மாமேதையே" அந்த விளக்கத்தால் சூடு பட்ட காரணத்தால்தான் "இலவச மின்சார'நிறுத்தப்படும் என்கிற பயத்தால்தான் "போராட்டத்தை" அறிவித்தார்கள். அந்த போராட்டமும் இல்லை என்றால் நீர் அதற்கோர் விளக்கம் சொல்லி உமது "அதி மேதாவி"த்தனத்தை வெளிப்படுத்துவீர்கள்..புரிந்ததா?...
ர.சௌந்தர் ராஜன் - கேரளா,இந்தியா
2010-11-11 13:58:22 IST
இலவசம் ரத்தாகுமா!!!. விட்டுருவோமா என்ன? யாரு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில இலவசத்த கொடுத்து கொண்டே இருக்கணும் புரிஞ்சுக்கோங்கோ!!! இது கலைஞர் திட்டமில்ல. கைவிடாம வோட்ட போட்டுருங்கோ....
Punnakku pandi - India,இந்தியா
2010-11-11 13:42:44 IST
எல்லா விலை வாசிய ஏத்திட்டு இலவச மின்சாரம் tharanam...
கோவிந்த் - Chennai,இந்தியா
2010-11-11 13:12:05 IST
சும்மா இந்த மாதிரி வசனம் எழுதறத இந்த மஞ்ச துண்டு எப்ப தான் நிறுத்துமோ தெரியல.. தான் ஒரு வசனகர்த்தா என்பதை தான் இது நமக்கு ஞாபகபடுத்துகிறார் ..தமிழ் நாடு மின்சார வாரியம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது ..மேலும் மின்சார வாரியத்திற்கு ஒரு வங்கியும் லோன் தர முன் வராததால் வாரியத்தில் பொருட்கள் - கம்பி, டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றை அடகு வைத்தாவது லோன் கொடுங்கள் என்று மின்சார வாரியம் கேட்டுள்ளது ..இந்த மாதிரி மொக்க கவிதை படிக்கும் இந்த ஆசாமி மின்சார வாரியத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார் ...வெத்து வெட்டு...
ராஜ் - சென்னை,இந்தியா
2010-11-11 12:59:52 IST
They will not do that. Because they are running the Govt with the Sward of "FREE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக