வெள்ளி, 12 நவம்பர், 2010

சென்னை விமான நிலையத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் இலங்கையை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது


500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இலங்கையை சேர்ந்த அண்ணன்-தம்பி இருவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பணம் மாற்றும் மையம் உள்ளது. நேற்று பகல் 2 மணிக்கு 2 வாலிபர்கள் அங்கு சென்று ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அமெரிக்க டாலர்களாக மாற்றிக் கேட்டனர்.அவர்கள் தந்த பணத்தின் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அதுகுறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று நடத்திய விசாரணையின்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். அவர்களிடம் இருந்த பணத்தை வாங்கிப் பார்த்தபோது அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ரூ.21 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த கள்ளநோட்டுகளை போலீசார் கைப்பற்றினார்கள். இலங்கையை சேர்ந்த அந்த இரு வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அதில் அவர்கள் இருவரும் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 31), அவரது தம்பி நஸீர் (29) என தெரியவந்தது. கொழும்பில் வர்த்தகம் செய்துவரும் அவர்கள் சென்னையில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை வாங்கி விற்று வந்தனர். அண்ணன்-தம்பிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களுக்கு கள்ள நோட்டுகளை தந்தது யார்? சென்னையில் வந்து அதை டாலர்களாக மாற்ற முயன்றது ஏன்? என்று விமான நிலைய போலீசாரும், தனிப்பிரிவு (கிï பிராஞ்ச்) போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: