புதன், 10 நவம்பர், 2010

புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய நால்வருக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்


யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட சிங்களவர் நால்வரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுக்கு பொருளாதார ரீதியிலான ஆதரவினை கைது செய்யப்பட்டவர்கள் வழங்கியுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை அறிக்கையினை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர்களுக்கு எவ்வாறான தண்டனை வழங்குவது என நீதிமன்றில் எதிர்காலத்தில் அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: