இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு ஆதரவளித்து வந்தது. தாம் தொடர்ந்தும் எதிர்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துவந்த நிலையில் இன்று அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் இணையவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு அமைச்சுப்பதிவியும் ஒரு பிரதி அமைச்சுப்பதவியும் வழங்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக