புதன், 8 ஜூன், 2016

Non Stop கூரியர்.. சதுரங்க வேட்டையை மிஞ்சிய மோசடி... கோடிக்கணக்கில் சுர்ட்டிய சையத் அன்வர்

"இனிமே இதுதான்... இதுமட்டும்தான்... நான் ஸ்டாப் கூரியர்... நான் ஸ்டாப் கூரியர். வாடிப்பட்டியோ, வாடிகன் சிட்டியோ மிஸ்டுகால் கொடுத்தால் போதும்... கூரியர் இலக்கை சென்று சேரும். குறித்த நேரத்தில் சென்று சேரும். இது நம்ம கூரியர்...''’ பிரபல நடிகை தேவயானி இப்படி டி.வி. விளம்பரத்தில் வந்து "‘நீங்களும் பிராஞ்ச்சஸை தொடங்கி செயல்பட வேண் டுமா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்'’என்று நான்ஸ்டாப்பாக கூவி அழைத்தால், பிசினஸ் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்தியா முழுக்க கிளை பரப்பிக்கொண் டிருக்கும் சென்னை வடபழனியை (7, சிவன் கோயில் தெரு) தலைமையிடமாகக் கொண்ட "நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ'’ கம்பெனியின் ஏஜென்சியாக செயல்பட டோல்ஃப்ரீ நம்பருக்கு தொடர்புகொண்டவர் களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், நக்கீரனுக்கும் காவல்துறைக்கும் புகார்களாய் குவிய... விசாரிக்கத் தொடங்கினால் "சதுரங்க வேட்டை'’ சினிமா வையே ஓவர்டேக் செய்கிறது இந்தக் கூரியர் நிறுவனத்தின் ஓனர் சையத் அன்வரின் சீட்டிங் வேட்டை. 

கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட் காட் ... நெடிசன்ஸ் ஒபினியன்ஸ்

‘இறைவி’ படம் எடுத்த கார்த்திக் சுப்பராஜுக்கு தடை ரெட்கார்ட் போடப்பட்டது குறித்த டிவிட்கள் நிறைய தென்பட்டது. அதேபோல் ‘இந்தப் படத்தில் என்ன இருக்குன்னு அவருக்கு தடை போட்டீங்க’ என நெகடிவ் கேள்விகளும் இருந்தது. வார மத்தி என்பதால், டைம்லைன் கொஞ்சம் தேமேதான். ஏதாவது மந்திரி சபை மாற்றம்செய்து முதல்வர்தான் நெட்டிசன்களை பிஸியாக்கிவிட வேண்டும்.  minnambalam.com/

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2015 இல் பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு (W.P.No. 4422/2015) தொடுத்திருந்தோம். இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் 30, மே 2016 அன்று தமிழக அரசு கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.

அதிமுக.,வில் மாஜிக்களின் கட்சி பதவிகள் பறிப்பு

புதிய அதிமுக நிர்வாகிகள் :
அ.தி.மு.க., அவைத்தலைவர் - மதுசூதன்
அ.தி.மு.க., பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை
அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன்
அ.தி.மு.க., தலைமை செயலாளர் - எடப்பாடி பழனிச்சாமி
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் - தமிழ்மகன் உசேன்
சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் - ஜஸ்டின் செல்வராஜ்
ஜெயலலிதா பேரவை செயலாளர் - அமைச்சர் உதயகுமார்
தேர்தல் பிரிவு செயலாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் - சின்னசாமி
அ.தி.மு.க., மருத்துவ அணி செயலாளர் - டாக்டர் வேணுகோபால்

சென்னை : அதிமுக.,வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பலரது கட்சி பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. மாஜி அமைச்சர் பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோருக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.   இதனால் தமிழ்னாட்டுக்கு என்ன நன்மை. அதே டயர் தொட்டுக் கும்பிடும், அம்மா என்று கன்று போல் பிளிரும், சட்டசபையில் அம்மா எழுந்தால்/ பேசினால் மேஜை தட்டும், அதே 45% கமிஷன் அடிக்கும்..

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் துறைகள் மாற்றம்

சாந்தா ஷீலாநாயர் - முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி
கே.என்.வெங்கட்ரமணன்- முதல்வரின் முதன்மை செயலாளர்
ஷிவ்தாஸ் மீனா-இரண்டாவது முதன்மை செயலாளர்
எஸ்.விஜயகுமார்- மூன்றாவது முதன்மை செயலாளர்
ஏ.ராமலிங்கம்-நான்காவது முதன்மை செயலாளர்
பிரதீப் யாதவ்- கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர்
ககன் தீப் சிங் பேடி- விவசாய உற்பத்தி ஆணையர், அரசு செயலர். கால்நடை பராமரிப்பு, பால் மீன்வளத்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு
ஹன்ஸ்ராஜ் வர்மா- ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர்.
அதுல்யா மிஸ்ரா- சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளர்.

விடுதலை சிறுத்தைகளின் மோதிர சின்னம் பார்பதற்கு பெல்ட் சின்னம் மாதிரியே...ஆயிரக்கணக்கான வாக்குகள் வீண்!

எண்பத்தேழு வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்டவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த தோல்வி அவரையும், அவருடைய அருமையான தோழர்களையும் நிச்சயம் அதிர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும். ஆயினும் அந்தப் பாதிப்பை உதறிவிட்டு, நான்கு நாட்கள் தங்கி மக்களுக்கு நன்றி கூறுவதற்காக 2-6-16 அன்று  சிதம்பரத்திற்கு வந்தார் தொல்.திருமாவளவன். சிதம்பரம் நடேசன் நகரில் உள்ள தொண்டர் வீட்டில் தங்கினார். தொகுதிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த அவரை சந்தித்தோம்.

செவ்வாய், 7 ஜூன், 2016

வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு....கோயில் திருவிழாவில்....காரணம் ‘சாதி’!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர்.
இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் எடுக்க முனைந்த வன்னியர்களை, நாயுடுக்கள் தடுத்துள்ளனர். தங்கள் சாதியைவிட வன்னியர்கள் கீழானவர்கள் என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆண்ட பரம்பரை எனக் கூறிக்கொள்ளும் வன்னியர்களும் ‘தீண்டாமை’ அன்பவிக்கிறார்கள் என்கிற விவாதம் சமூக் வலைத்தளங்களில் நிகழ்ந்து வருகிறது.

அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!

காலை ஐந்து மணியிலிருந்து லைன்ல குடும்பத்தோட வந்து தேவுடு காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே அள்ளிக்கொடுக்கத் தயாரா இருந்தாலும், ‘ரெக்கமண்டேஷன் எதும் இருக்கா…?’ னு கேட்பாங்க. எதுக்கு…?மூணு வயசு குழந்தைய ‘இன்டெர்நேஷனல்’ ஸ்கூலில் எல்.கே.ஜி சேர்க்க. ஆனா எங்கேயாவது அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா? ஒரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு மக்கள் அலைமோதிய கண்கொள்ளாக் காட்சி நடந்தேறிய இடம், மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.

அறிவாலய விசாரணையில் ஐவர்?

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வில் மறுசீரமைப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. ‘ ஒன் மேன் ஆர்மி என்ற பெயரில் ஸ்டாலின் பயணத்தை வடிவமைத்தவர்களின் குளறுபடிகளும் தோல்விக்குக் காரணம்’ என்கின்றனர் தி.மு.க.வின் சீனியர்கள்.

தி.மு.க.வின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மரபுகளை மாற்றி பிரசாரம் செய்ததில், ஓ.எம்.ஜி என்று சொல்லப்பட்ட ஒன் மேன் குரூப் அணிக்குப் பெரும் பங்கு உண்டு. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையில் தேர்தல் களத்தில் புகுந்து விளையாடியது இந்த டீம். ‘ நமக்கு நாமே பயணம்’, ‘முடியட்டும் விடியட்டும்’ என்ற பெயரில் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஓ.எம்.ஜி பெரும்பங்கு வகித்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ” மோடியின் வெற்றிக்குக் காரணமான விளம்பர யுக்தியை இந்தத் தேர்தலில் செயல்படுத்திப் பார்க்கத்தான், ஓ.எம்.ஜி என்ற தனி குரூப்பைக் கொண்டு வந்தார் ஸ்டாலின்.

வீரப்பன் யானைகளை பாதுகாத்தானா? சொல்லப்படாத உண்மைகள்!

இந்தப் புவியில் மனிதனைப் போல் கொடூரக்காரர்கள் யாரும் இல்லை. மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான்... ஏன் பழி வாங்குவான் மற்றும் நேர்மையற்ற செயலை செய்வான். மனிதன் யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான். யானையை கொடுமைப்படுத்தி பணம் காண்பான்... ஏன் அதன் முடி, தந்தம் என அனைத்தையும் விற்பான்.. உண்மையில் மனிதனைப் போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை...வீரப்பன்!
 அது 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில்  2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது. அதில், வீரப்பன் அவர்களுக்கு சொன்ன ஒரு கதையை குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் கதை உண்மையில் வீரப்பனின் இன்னொரு இளகிய முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. யானையும், கடவுளும் பின்னே மனிதனும்: குருபகர், செனானி மற்றும் வங்காளப் பேராசிரியர் மைத்திக்கும், வீரப்பனுக்கும் நடந்த உரையாடலில் வீரப்பன் இவ்வாறாக துவங்கி இருக்கிறான்...

உலகெங்கிலும் தமிழ் சொற்களில் 30,000 ஊர் பெயர்கள்..

உலகெங்கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளதாக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ம் ஆண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது: கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட் கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்

பட்
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் தீர்ப்பினை அறிவித்துள்ளது அகமதாபாத் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம். இதில் பி.ஜே.பி உள்ளூர் தலைவன் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை விடுவித்துள்ள நீதிமன்றம் 24 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. இப்படுகொலை திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும் கூறியிருக்கிறது.
2002 குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – வி.எச்.பி-பா.ஜ.க தலைமையில் இந்துமத வெறியர்கள் நிகழ்த்திய  இஸ்லாமிய படுகொலையில்  குல்பர்க் சொசைட்டி எனப்படும் இஸ்லாமிய குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் முக்கியமானதாகும். முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான இசான் ஜாஃப்ரி, அவரது குடும்பத்தினர் கண் முன்னாலேயே வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரோடு சேர்த்து 69 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். உள்புறம் பூட்டிக்கொண்டு பதுங்கியிருந்தவர்களின் வீடுகளுக்குள் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டனர்.

ஹாலிவூட் திரையுலகம் மெல்ல மெல்ல காணமல் போகிறதா?

minnambalam.com :‘ஹாலிவுட் லெவல்ல படம் எடுக்கணும் சார்’ என்று கிளம்பியவர்கள்தான் காணாமல் போகிறார்கள் என்றால், ஹாலிவுட்டே தற்போது காணாமல் போய் கொண்டிருக்கிறது. காமிக்ஸ் கதைகளையும், புத்தகங்களையும் படமாக்கி, தனது சந்தையை மிகப் பெரியதாக்கியது ஹாலிவுட்டின் மிகப் பெரிய சாதனை. இப்போது அதுதான் சோதனையாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பழக்கப்பட்ட காமிக்ஸ் கதைகளும், அனிமேஷன் சீரியல்களும் அல்டிமேட் கிராஃபிக்ஸுடன் அதிர வைக்கும் இசையில் புது உணர்வைக் கொடுத்தது உண்மைதான். ஆனால், இதுதான் தங்களது சோர்ஸ் மெட்டீரியல் என ஹாலிவுட் நம்ப தொடங்கியதால் ஏற்பட்ட பிரச்னைகள், இப்போது ஹாலிவுட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது.

கூட்டணி அவசியமில்லை - திருமாவளவன்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊர் அங்கனூருக்குச் சென்ற திருமாவளவன், அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். “காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போதுள்ள ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துக் கொண்டுள்ளனர் என மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மனு கொடுக்க உள்ளோம்.

அமெரிக்க பல்கலை.யில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு."இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. கம்ப்யூட்டர் சயன்ஸஸ் முதல் செமஸ்டரில் உள்ள இந்திய மாணவர்கள் 25 பேரை வெளியேறுமாறு அமெரிக்காவின் வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று இந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் பிற பல்கலைக் கழகங்களில் சேர முயற்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை இந்த மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

நைஜீரியர்கள் இந்தியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்கிறார் கோவா முன்னாள் முதல்-மந்திரி

கோவா முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி ரவிநாயக் நைஜீரியர்கள் இந்தியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “நைஜீரியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் நைஜீரியவர்களால் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கோவாவில் இருக்கும் நைஜீரியர்களின் ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுப்படும் அனைவரும் உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும். கோவாவில் மாணவர்கள் மீது சில நைஜீரியாக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ராமதாஸ் : SRM பச்சமுத்துவின் பிரதிநிதி மதன்....இருவர்மீதும் மோசடி வழக்கு பதவு செய்யப்படவேண்டும் .

பச்சமுத்துவுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் மதன் என்பவர் முகவரி இல்லாத மிக மிகச் சாதாரண மனிதர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெபளியிட்டுள்ள அறிக்கையில், ”எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.

வீரப்பன் பிடிபட்டது இப்படித்தான்... விஜயகுமார் விபரமாக சொல்கிறார்.................

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி அவரை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதி வருகிறார். சந்தன வீரப்பன் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். போலீஸ், வனத்துறையினர் உள்பட 180 பேரை கொலை செய்ததாகவும், 200-க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் தலைவராக நியமிக்கப்பட்டார். வீரப்பன் வேட்டைக்கு ‘ஆபரேஷன் கூகுன்’ (பட்டுப்பூச்சி ஆபரேஷன்) என்று பெயர் சூட்டப்பட்டது. வீரப்பன் நடமாடும் காட்டுக்குள் விவசாய தொழிலாளியாகவும், வியாபாரியாகவும் அதிரடிப்படையினர் ஊடுருவினர். ஒரு போலீஸ்காரர், வீரப்பன் கூட்டத்திலேயே சேர்ந்து விட்டார்.

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தெரிவு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாயாவதி காங்கிரசுடன் புதிய உறவு? பாஜகவுக்கு எதிரான நகர்வு...

மூன்று மாநிலங்களில், பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தோல்வியுற செய்யும் வகையில், மாயாவதியுடன், காங்., ரகசியமாக கைகோர்த்து உள்ளதால், ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்., அரசை கவிழ்ப்பதற்கு, பா.ஜ., தரப்பில் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரை வளைத்தும் கூட, தன் முயற்சியில் பா.ஜ., தோல்வியடைந்தது. அதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததே காரணம்.
மிகவும் இக்கட்டான அந்த சூழ்நிலையில், காங்கிரசை, மாயாவதி காப்பாற்றியதற்கு காரணம், விரைவில் வரப்போகும் உ.பி., சட்டசபை தேர்தல் தான்.

கார்த்திக் சுப்புராஜூக்கு தடை ! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி... பின்னணியில் தொழில் விரோதிகள்?

சென்னை: இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை அவமதித்து விட்டதாகக் கூறி, இனி படங்கள் இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் இறைவி. இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வந்தன.j இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கார்த்திக் சுப்பராஜே எதிர்ப்பாராத ஒரு அதிர்ச்சி இடி விழுந்தது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இருப்பதாகவும், தமிழுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக உள்ளதாகவும் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் படத்துக்கு எதிராக அணி திரண்டனர். இதனால் படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கேட்டுக் கொண்டார்.

இறைவி….ஆண்கள்.. ஆண்கள்… ஆண்கள்… குடி, குடி, குடி…. ஆட்டம், ஆட்டம், ஆட்டம்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது…. ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என ஆனது… எனக்குத் தெரிந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் அவர் குறிப்பிட்ட அந்த கிருஷ்ணன் கோயிலுக்குள் நாடார் சாதியினரே நுழைய முடியாது… அவர்களுக்கே இடமில்லை எனில், அருந்ததியர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை… மேல்சாதியினருக்கு மட்டுமே அனுமதி…

மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது”...அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரி

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹை டெக் இன்ஜினியரிங் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல்வர், கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரு வருடத்தில் மூன்று மாணவர்களை கட்டாயம் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், இதுவரை ஒரு மாணவரைக்கூட யாரும் சேர்க்கவில்லை. எனவே, போதிய நடவடிக்கைகள் எடுத்து மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியில்லையெனில் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொல்வதெல்லாம் உண்மை; சொல்லப்படாத உண்மைக் கதைகளின் தொகுப்பு.. வெண்ணிற ஆடை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘ சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் பலமுறை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். குங்குமத்தில் நான் எழுதி வந்த பத்தியில் ஒரு கட்டுரையே எழுதினேன். எனது நீண்ட நாள் நண்பன் சரவணன் சந்திரன்தான் அதை இயக்கி வந்தார். சரவணனிடம் அதைப்பற்றி நேரிலேயே அழைத்து பேசியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதெல்லாம் உண்மையின் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு கருத்தாளனாக என்னை சரவணன் அழைத்தபோது நிர்தாட்சண்யமாக அதை மறுத்தேன். ஆனால் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சியை நான் உற்றுக்கவனிப்பேன். அந்த நிகழ்சியில் மனிதர்கள் கையாளப்படும் விதம் குறித்த எனது விமர்சனஙகளைத்தாண்டி அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும் வாழ்வின் குரூரமான எதார்த்தங்கள் என்னை எப்போதும் முகத்தில் அறைந்தண்ணம் இருந்தன.

நரிக்குறவர்கள்; தனிநபர் மசோதாவால் சாதித்த சிவா... பழங்குடிகளாகிறார்கள்..

நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மலையாளி கவுண்டர், நரிக்குறவர், குருவிக்காரன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றகோரி மாநிலங்கள் அவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக அவர் , இது தொடர்பாக தனி நபர் மசோதா கொண்டு வந்தார் என்பது முக்கியமானது.