வியாழன், 13 அக்டோபர், 2011

சம்பந்தன்: TULF ன் புது நிர்வாக சபையை ஏற்க முடியாது

கூட்டணியின் புது நிர்வாக சபையை ஏற்க முடியாது என்கிறார் சம்பந்தன்;நிராகரித்துத் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்

நீதிமன்ற உத்தரவை மீறி பொதுச்செயலாளரான தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதி யாகச் செல்லுபடியற்றது என்று இரா. சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளருக்குத் தெரிவித்துள்ளார்.

திருச்சி இடைத் தேர்தல்- இதுவரை 15% வாக்குப் பதிவு


Voters
: திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு மந்தமாக தொடங்கி நடந்து வருகிறது. 10 மணி நேர நிலவரப்படி 15 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. ஓட்டுப் பதிவு பல வாக்குச் சாவடிகளில் மந்த கதியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2வது கணவரிடம் இருந்தும் விவாகரத்து கேட்கிறார் நடிகை வனிதா


சென்னை : நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளான். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தம்பதியினர் இருவரும் பிரிந்தனர். மகன் ஸ்ரீஹரி, ஆகாஷுடன் இருந்தான். அவனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்தார். ஆகாஷும் வனிதா மீது புகார்களை கூறிவந்தார்.

கொட்டிவாக்கம் கவுன்சிலர் வேட்பாளருடன் ஒரு பேட்டி



ராஜ் செருபல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக கொட்டிவாக்கம் வார்டு கவுன்சிலராகப் போட்டியிடுகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.
தமிழ்பேப்பர்: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், கொட்டிவாக்கம் வார்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவதாகக் கேள்விப்பட்டோம். ஏன் அரசியலுக்குள் நுழைகிறீர்கள்? தேர்தலில் நிற்காமல் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று நினைக்கிறீர்களா?
ராஜ் செருபல்: ஒரு விஷயத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று கட்சி அரசியல். இன்னொன்று சமூகப் பிரச்னைகள் சார்ந்து செயல்படும் அரசியல். எம்.எல்.ஏ., எம்.பி.கள் தளத்தில் செயல்பட விரும்புபவர்களுக்கு கட்சி அரசியல் தேவையாக இருக்கும். பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு, வலைப்பின்னல் ஆகியவற்றுக்கு அப்படியான ஒரு அமைப்பு தேவைப்படும். ஆனால், சிறிய அளவில் ஒரு வார்டில் இருக்கும் பொதுவான பிரச்னைகளைத் தீர்க்கவும் மக்களை ஒன்றிணைத்துச் செயல்படவும் கட்சி போன்ற எதுவும் தேவையில்லை. குப்பையில்லா நகரம், முறையான கழிவு நீர் கால்வாய் வசதிகள், நெரிசல் இல்லாத நடைபாதைகள், சீரான சாலைகள், கொசுக்கள் இல்லாத இரவுகள், பொழுதுபோக்குக்கு விளையாட்டு மைதானம், பொது சமூக வெளிகள், ஏழைகளுக்கான பொதுக் கழிப்பிட வசதி, வெள்ள நீர் வடிகால்கள் போன்றவை எல்லாமே இதில் அடங்கும். எந்தவொரு வார்டை எடுத்துக்கொண்டாலும் பணக்காரர்கள், மத்திய வர்க்கத்தினர், ஏழைகள் என எல்லா தரப்பினரும் இருப்பார்கள். பாலின ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சி சாரா இந்த அரசியலானது குடிமக்களின் அன்றாடப் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது தொடர்பானது. குறைவாக இருக்கும் வளங்களை நேர்மையான செய்நேர்த்தியான வழியில் பயன்படுத்துவது, ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பானது.
நான் நீண்ட காலமாகவே ஒரு களப்பணியாளனாக இருந்திருக்கிறேன். நடைபாதை வியாபாரிகள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வியாபாரம் செய்ய நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறேன். நன்கு திட்டமிடப்பட்ட தெருக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும். ஏழைக் குழந்தைகளுக்கு, குறிப்பாக, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தொடர்பாகச் செயல்பட்டுவருகிறேன். ஜனாக்ரஹாவின் ஓர் அங்கமாக ஆட்சியில் பொது மக்களின் பங்களிப்பை மேம்படுத்த முயன்றுவருகிறேன். நகர நிர்வாகம், உள்கட்டுமானம், சேவைகள் ஆகியவை தொடர்பாக சென்னை சிட்டிகனெக்ட் அமைப்பு மூலமாக செயலாற்றி வருகிறேன்.

Conflict of interest என்று தெரிந்தும் தயாநிதி மாறனுக்கு இந்தத் துறையை

மாறன் சாம்ராஜ்ஜியத்தில் ரெய்டு  திமுகவில் பலருக்கு உள்ளூர ஆனந்தம் என்றாலும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது

திங்கள்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ காலை நிகழ்ச்சிக்காக ஜென்ராம் என்னை அழைத்திருந்தார். மற்றொரு விருந்தினர் ஞாநி. செய்தித்தாள்களில் வந்தவற்றை அலசும் நிகழ்ச்சி. ஏற்கெனவே அதில் இருமுறை கலந்துகொண்டுள்ளேன். நேரலை ஒளிபரப்பு முடிந்து வெளியே வரும்போது நியூஸ் பகுதியிலிருந்து பரபரப்பாக அங்கு வந்தனர். ‘மாறன் வீட்டில் ரெய்ட். அது தொடர்பான லைவ் கவரேஜில் கலந்துகொள்ள முடியுமா?’ என்று கேட்டனர். எனக்கு அலுவலகம் செல்ல நேரமாகிக்கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 2ஜி பற்றியும் மேக்சிஸ்-ஏர்செல் பற்றியும் என் கருத்துகளைச் சொன்னேன்.

நிகழ்ச்சி நடக்கும்போது குருமூர்த்தி, சோ ராமசாமி, தா.பாண்டியன், டி.ராஜா, சௌந்திரராஜன் என்று பலர் தொலைபேசி வழியாகக் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தனர். கம்யூனிஸ்டுகள் அல்லது கட்சி சாராதவர்கள் தவிர மீதி யாருமே கருத்து சொல்லத் தயாராக இல்லை என்று தெரிகிறது. அஇஅதிமுகவில் அம்மா தவிர மீது எல்லோரும் டம்மி.

ஸ்டாலின்-தயாநிதி பவர் பாலிட்டிக்ஸா? சொத்து குவிப்பு விவகாரமா?

சென்னை, இந்தியா: தி.மு.க. உட்கட்சி மோதலின் உச்சக்கட்டமாக, பரிதி இளம்வரிதி தி.மு.க.வை விட்டே வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. கட்சிப் பதவிகளில் இருந்து ஒதுங்கினாலும், அடிப்படை உறுப்பினராக தொடர்வேன் என்று கருணாநிதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தார்.அவர் அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்க விரும்பவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில்.
தி.மு.க.வுக்குள் நடைபெறும் பவர் பாலிடிக்ஸின் விளைவுதான் இது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
“பரிதிக்கே இந்தக் கதியா?” என்று தி.மு.க. இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலரை திகைக்க வைத்திருக்கிறது பரிதியின் நடவடிக்கை. காரணம், பரிதிக்கு கட்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!


வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது, மன்மோகன் சிங்  சோனியா காந்தி கும்பல்.  சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஆலோசனை கவுன்சில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்து, அரசிடம் அளித்தது; அதனை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, ஆய்வு செய்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, கழிக்க வேண்டியதைக் கழித்துத் தள்ளிவிட்டு, மைய அரசிடம் அளித்தது.  அதனை மைய அமைச்சரவை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளித்து, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

கனிமொழி ஜாமின் மனு: சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி

புதுடில்லி: "ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்க மாட்டோம் என சொல்வதா' என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர். மேலும் இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா என, கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். ஆனால், சி.பி.ஐ., தரப்பில் வாதாடியவர்கள், கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்கும் முடிவில் தொடர்ந்து இருப்பதாக விளக்கம் அளித்தனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கோர்ட், தொடர்ந்து மறுத்து விட்டது.

திருமாவளவன்:ஜெயலலிதா யார் என்று விஜயகாந்துக்கு தெரிந்திருக்கும்

ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, அனைத்து இஸ்லாமிய கிறிஸ்தவர் கூட்டமைப்பு, ஜமா அத்துல் உலமா மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது,
2001ம் ஆண்டில் இருந்து தலித் அமைப்பு களையும், கிறிஸ்தவ மற் றும் முஸ்லிம் அமைப்பு களை ஒருங்கிணைத்து மாற்று அணி ஏற்படுத்த விரும்பினேன்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்’ : எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை!

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவரெனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சேராதவர்களுக்கும் அங்கு காணியை கொள்வனவு செய்வதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அமுலில் இல்லையெனவும் தெரிவித்தார்.

வட மாகாண உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தேசவழமைச் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

மோசடிகளை தடுக்க புதிய "ஷெங்கன்' விசா!

லண்டன்: ஐரோப்பாவின், "ஷெங்கன்' நிலப் பரப்பில் அமைந்த நாடுகளுக்கு, ஐரோப்பியர் அல்லாதவர் செல்ல, புதிய விசா முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல், நார்வே வரையிலான, 25 நாடுகள் கொண்ட நிலப் பரப்பு, "ஷெங்கன்' என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்குச் செல்ல, இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால், பிற நாட்டவர் செல்ல, "ஷெங்கன்' விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.

சில தீய சக்திகளும் சுயநலவாத குழுக்களும் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறியடிப்பது பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் கடமை- கோத்தாபய ராஜபக்ஷ!

பயங்கரவாதத்தை துவம்சம் செய்த இராணுவ வெற்றியையும், யுத்த முனையில் தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து போராடிய வீரர்களை மறக்கச் செய்யக்கூடிய வகையில் சில தீய சக்திகளும் சுயநலவாத குழுக்களும் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறியடிப்பது பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் கடமை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அண்ணன் பாடுபட்ட கட்சிக்குள்ளேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் - பிரேமசந்திரவின் சகோதரி!

எனது அண்ணனே உயிரிழந்துள்ளார். எனது தமயனான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்வதற்கான சதி தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் தெரிய வந்தன.
அதனையடுத்து கனடாவில் வாழும் நானும், நான்கு சகோதரிகளும் சகோதரனும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துதிற்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்களை எழுதினோம்.

புதன், 12 அக்டோபர், 2011

காஞ்சி சங்கராச்சாரிcase, மகன்-மகளை ஆசிட்டில் போட்டு கொல்வதாக மிரட்டல்


Sankararaman Murder

சென்னை: தனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக, கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் மனைவி பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தந்துள்ளார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை விசாரணை புதுச்சேரியில் நடந்து வருகிறது.

90 சவுக்கடி தரவும் உத்தரவு நடிகைக்கு 1 ஆண்டு சிறை!

மெல்பர்ன்:தடையை மீறி ஆஸ்திரேலிய திரைப்படத்தில் நடித்த ஈரான் நடிகைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. 90 சவுக்கடி தரவும் உத்தரவிட்டது. ஈரானை சேர்ந்த பிரபல நடிகை மர்சே வாபமர். அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க நடிகைகளுக்கு அரசின் கட்டுப்பாடு உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சியான் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் ‘மை டெகரான் ஃபார் சேல்’ என்ற படத்தில் மர்சே நடித்தார்.

அந்த பட நிறுவனத்தின் படங்களுக்கு ஈரானில் தடை உள்ள நிலையில், மர்சே நடித்த அந்த திரைப்படம் 2010ம் ஆண்டில் பல சர்வதேச விருதுகளை பெற்றது. எனினும், கட்டுப்பாட்டை மீறியதாக நடிகை மர்சே மீது ஈரான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு-கண்டித்து ஆர்ப்பாட்டம்!

2ம் இணைப்பு-பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு-கண்டித்து ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர்.

சிவகாசி ஜெயலட்சுமி விடுவிப்பு

சிபிஐ கொடுத்த புகாரின் பேரில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிவகாசி ஜெயலட்சிமி விடுவிக்கப்பட்டார்.
ஏட்டு முதல் எஸ்பி வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. இவர் மீது சிபிஐ நகை மோசடி புகார் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை ஜெஎம் 3 நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது.
இந்த வழக்கில் ஜெயலட்சுமி 75 பவுன் நகை வாங்கி மோசடி செய்ததாக, கோவையைச் சேர்ந்த முருகவேல் (இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர்) புகார் கூறியிருந்தார். அந்தப் புகார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ அதை உறுதி செய்து, கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடத்தியது.

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்ப்போம்: சிபிஐ, மத்திய அரசு


Kanimozhi
டெல்லி: திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியான செய்தி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிபிஐயும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தன.

2ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்க்காது என்று செய்திகள் வெளியாயின. தொழிலதிபர்களை சிறையில் வைத்திருந்தால் நாட்டில் முதலீடுகள் பாதிக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அழகி'க்காக பட்ட அவமானங்கள்! தங்கர் பச்சான்



அழகி படத்தை எடுத்தபோது என்னை இந்த சினிமா உலகம் அவமானப்படுத்தியது. ஊருக்கு ஓடிவிடச் சொன்னார்கள் பலர். ஆனால் அந்த அவமானங்களே பின்னர் வெற்றியாக மாறின, என்றார் இயக்குநர் தங்கர் பச்சான்.

செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம், 'வித்தகன்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.
இந்த விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.
அவர் கூறுகையில், "நான் இயக்கிய 'அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.

ராமதாஸ்:கலைஞர் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்


மயிலாடுதுறையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்திக்கு ரூ.200 கோடி மதிப்புடைய சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
மின் தட்டுப்பாடு காரணமாக பம்பு செட் நம்பி விவசாயம் செய்யும் விவாசயிகள் பாதித்துள்ளார்கள்.

மாணவியை கடத்தி பலாத்காரம்! பாதிரியார் கைது

கொல்லம்: கேரளாவில் 5ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் அங்குள்ள கிறிஸ்தவ குருத்துவ மடத்தில் உள்ள இளநிலை குருத்துவ கல்லூரியில் ஆசிரியராக உள்ளார்.

இந்த நிலையில் வடக்கஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாம்சன் அந்த வழியாக சென்ற 5ம் வகுப்பு மாணவியை வழிமறித்தார். அதன்பின்பு அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றார்.

புலிகளினாலும் முஸ்லிம்கள் உரிமைகளை இழந்தார்கள். சொல்லுங்கள் யாரில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்?

முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள் என அறிவுரை பகர்ந்த கௌரவ (புலிகளது) பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு!


உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்து கொள்ளவேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது?
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மகிந்த வீடு தேடிப்போய்க்கூடப் பேசியிருக்கிறார். அப்படியிருக்க முஸ்லிம் அமைச்சர்களுடன் ஏன் பேசக் கூடாது? இதற்கு ஹக்கீடம் என்ன பதில் சொல்லப்போகிறார்”புலிகளினாலும்

மன்மோகன்சிங்:பயங்கரவாதத்தை முறியடித்த வகையில் இலங்கையை கடைபிடிக்க வேண்டும்

இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடித்த வகையில் உலகின் ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு அனைத்து நாடுகளும், ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்கியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கனேடிய பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்;த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதியை, பிரதமர் ஹார்பர் சந்திக்க எதிர்பார்ப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனியில் 'நீரா ராடியா பாத்திரம்'!


திருமணத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் சகுனி. வழக்கம்போல காமெடி அல்லது ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், இதில் அரசியல் விவகாரங்களையும் சேர்த்துள்ளார்களாம்.
2 ஜி வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட நீரா ராடியாவின் கதை இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. திரைக்கதையே நீரா ராடியாவை மையப்படுத்தித்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நீரா ராடியாவின் கதையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீரா ராடியா சம்பந்தமான பகுதியை மட்டும் இப்படத்தில் சேர்த்துள்ளனராம்.