ராதா மனோகர் : சரிக்காரியா கமிஷன் ..திராவிட வெறுப்பாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திமுக மீது பிராண்டும் ஆரிய பேய்களின் ஒரு பிராண்டல்தான் அது
அது பற்றிய ஒரு குறிப்பு அண்மையில் என் பார்வைக்கு எட்டியது!
கலைஞர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் கம்யூனிஸ்டு தலைவா கல்யாணசுந்தரம் போன்றோர் தயாரித்து திரு எம்ஜியார் அவர்களிடம் கொடுத்தார்கள்
இந்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு திரு ஜி ஜி பொன்னம்பலம் ஆஜாரானது தெரிந்ததே.
அந்த வழக்குதான் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இறுதியாக பேசிய வழக்கு.
அதன் பின் சில நாட்களில் அவர் மலேசியாவில் இயற்கை எய்தினார்
அப்போது திரு கலைஞர் அவர்கள் தனது உற்ற நண்பர் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு அஞ்சலி செலுத்து முகமாக எழுதிய கவிதையும் அஞ்சலி குறிப்பும் தற்போது என் பார்வைக்கு எட்டியது
ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியும் கவிதையும்!
பாரெல்லாம் புகழ் பரப்பிய என்னருமை உடன் பிறப்பை இழந்து விட்ட
என் மனதின் துயர் துடைக்க இனி யார் வருவார் இவ்வுலகில்?
உண்மையுள்ள தோழனாய் உயிர் காக்கும் நண்பனாக
நட்புக்கு இலக்கணமாக நான் கண்ட நண்பா நின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு உன்னை இழந்து தவிக்கும் தமிழர் பரம்பரைக்கு குடும்பத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கும் இக்கட்டான நிலைக்கு என்னை ஏன் ஆளாக்கினாய்? நான் கண்ட நல்லவர்களில்,
நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட சட்டத்துறையின் காவலனே -