திங்கள், 5 மார்ச், 2018

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்குத் மத்தியரசு தடை! கார் கம்பனிகளிடம் பேரம்?


மின்னம்பலம் :காற்றில் மாசு அளவைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கனரக வாகனங்களைத் தடைசெய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ”பழைய வானங்கள் சாலையில் இயக்கப்படுவதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பழைய கனரக வாகனங்களைத் தடைசெய்வது குறித்த பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.விபத்துக்களைத் தவிர்க்கவும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நகரங்களில், வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதைக் குறைப்பதற்கான திட்டங்களை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தினகரனின் தங்கையும் கணவரும் கைது ... சி பி ஐ நீதிமன்றம் ஸ்ரீ தளதேவி .. பாஸ்கரன்...

டிடிவி தினகரனின் சகோதரி-கணவர் கைது!மின்னம்பலம் : சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரியையும் அவரது கணவரையும் சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவிதினகரன் எம்.எல்.ஏ.வின் சகோதரி, மைத்துனருக்கு சென்னை சிபிஐ கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகளும், தினகரனின் தங்கையுமான ஸ்ரீதளாதேவிக்கும் பாஸ்கரனுக்கும் 1990இல் திருமணம் நடந்தது.
பாஸ்கரன், 1988 முதல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிவந்தார். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து 1998 மார்ச் 18 மற்றும் 30ஆம் தேதிகளில் இவர்களது வீடு, அலுவலகம், வங்கி லாக்கர் உள்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

சென்னை உயர்நீதிமன்றம் :கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யலாம்

Shyamsundar - Oneindia Tamil சென்னை: கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது. ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறுதலாக கட்டுரை வாசித்தது பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கியது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது
. Can put case on Vairamuthu, Kani Mozhi, Ki Veeramani says HC அதேபோல் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி ராமாயணம், மனு நீதியை கொளுத்த வேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி பேட்டி ஒன்றில், திருப்பதியில் பாதுகாப்பு இருக்கும் பணியாளர்களின் உரிமைகள், சம்பளம், பாதுகாப்பு குறித்து பேட்டி அளித்து இருந்தார். 

2018 ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.....பட்டியல்

ietamil.com :சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்கள், படைப்புகள் அடையாளம் காணப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன.
90வது ஆஸ்கார் விருதுகள், கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த எதிர்பார்ர்புகளுக்கு மத்தியில், சிறந்த படைப்பாளிகள் விருதுகளை பெற்று வருகின்றன.  சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் என மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. வகையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் மற்றும் விருதுகளை சொந்த மாக்கிய வெற்றியாளர்கள்  பட்டியல் இதோ…

1. சிறந்த திரைக்கதை-”கெட் அவுட் ” (ஜார்டன் பீலே)
2. சிறந்த அனிமேஷன் குறும்படம் – ”டியர் பேஸ்கட் பால்” (க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்)
3. சிறந்த திரைக்கதை தழுவல் – ”கால் மீ பை யுவர் நேம்” ( ஜேம்ஸ் ஐவரி)
4. சிறந்த ஆவணக் குறும்படம்: ”ஹெவன் ஈஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405” (ஃப்ரான்க் ஸ்டீவல்)
5. சிறந்த அனிமேஷன் படம்: “கோகோ” ( லீ அன்க்ரீச், டார்லா கே.ஆண்ட்ரசன்)

6.சிறந்த படத்தொகுப்பு: “டன்கிர்க்”  (லீ ஸ்மித்)

பாகிஸ்தானில் தலித் இந்து பெண் கிருஷ்ண குமாரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்


பாகிஸ்தானில் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக இந்துப்பெண் தேர்வுதினத்தந்தி :பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக தலித் இனத்தை சேர்ந்த இந்துப்பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக தலித் இனத்தை சேர்ந்த இந்துப்பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேல்-சபையில் 33 இடங்களுடன் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது

மூன்றாவது அணி .. காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகள் ... மாநிலத்துக்கு அதிகாரம் பெறும் வழியில்

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி!Perfect. This is the only way to keep the Indian Union United in the coming years. Indian Union should move towards 'True Federalism'. Very few subjects in the Union list & all other subjects in the state list. First and foremost move Education back to State list.
மின்னம்பலம் :காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தோற்கடிக்க 3ஆவது அணி தேவைப்படுகிறது எனத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த மார்ச் 3ஆம் தேதி ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியதோடு, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது; இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க ஒரு 3ஆவது அணி அவசியம் என வலியுறுத்தினார்.
"மொரார்ஜி தேசாய், வி.பி சிங், தேவகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத ஒரு அணியால் தர முடியும். 3ஆவது அணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போதைய அரசியலிலிருந்து மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் எந்தத் திறன்மிக்க மாற்றமும் ஏற்படவில்லை. ஏமாற்றமே மிச்சம். நாட்டில் ஏன் நக்ஸலைட்கள் உள்ளனர்? ஏன் அமைதியின்மை அதிகளவு உள்ளது? சமூக ரீதியான சண்டைகள் ஏன் எங்கும் உள்ளது? ஏன் தலித் மற்றும் பழங்குடியினர் போராடி வருகின்றனர்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

கமலஹாசன் : தினகரனின் ஊழல்களை அம்பலபடுத்துங்கள்... மோடியின் ஊழகள் ஓகேவா ?

கமல்ஹாசன் மீது வழக்குPrabha Oneindia Tamil  ; சென்னை: தினகரனின் ஊழல்களை அம்பலப்படுத்தி அவருக்கு இருப்பதாக சொல்லப்படும் செல்வாக்கை தகருங்கள் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளாராம்.
தினகரனுக்கு எதிராக அதிரடியான திட்டங்களை வகுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன். ' சந்தர்ப்பவாதத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு இயங்குகிறது சசிகலா குடும்பம். அவர்களுடைய முகத்திரையை வெளிக்காட்ட வேண்டும்' எனக் கொதித்தார் கமல் என்கின்றனர் மய்யத்தின் நிர்வாகிகள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியில் இருந்தே கமலுக்கும் தினகரனுக்கும் இடையில் மோதல் முற்றத் தொடங்கிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், அமெரிக்காவில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த கமல், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம். ரூ20,000 ரூபாய்க்கான டோக்கனாக ரூ20 ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா? என்ற பார் புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது' எனப் பதிவிட்டிருந்தார்.

ஆண்டாளை தூக்கி ஆர் எஸ் எஸ் ஐ தாங்கி பிடித்த தந்தி டிவியின் அச்கோகவர்ஷிணி ...

வினவு : ஆண்டாள் விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்கியதில் எச்.ராஜாவிற்கு அடுத்தபடியாக பங்கு வகித்தது தந்தி டிவிதான். ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலை அது அப்படியே பிரதிபலித்துப் பேசியது. தந்தி டிவி, ஆர்.எஸ்.எஸ்.-ன் தொந்தி டிவிதான்
ண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.
வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்த ஆய்வாளர் நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”ஆண்டாளைத் தேவதாசி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, என்ன சூழலில் அவ்வாறு கூறியுள்ளீர்கள்?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.
”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.
அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

எலும்பு பாதிரியார் 1997லேயே ஜெயலில் இருந்த பழைய கேடிதான்

Palani Manoj :"திருச்சியில் உள்ள மோஸ் கிறிஸ்துவ மிஷனரி என்ற பெயரில் பாதிரியார் ஜேக்கப் 89 சிறுமிகளை கொடுமை செய்ததற்காகவும்,"_*
*குழந்தைகளை திருடியதற்க்காகவும் CBIயால் 1997ல் பிடிபட்டான் என்பது தெரியும் ?*
https://www.thenewsminute.com/…/89-girls-emotionally-abused…
*எலும்பிற்காக முதியோர்களை கொல்ல கருணை (கொலை) இல்லம் நடத்திய பாதிரி ஜேக்கப்பின் கோர முகம்.*
*_நாளிதழ்களில் வந்த தலைப்புச் செய்தி._*
*89 இளம் பெண்களை பாலியல் கொடுமை செய்த பாதிரியார் ஜேக்கப்பை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.*
*Nov 2, 1997-ன் கிரிமினல் செய்திகள்.*
மோஸ் கருணை இல்லம் நிறுவனர் ஏ கிடியோன் ஜேக்கப் - ஐ CBI காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
சிபிஐ ஐந்து நாட்கள் பாதரியார் ஜேக்கப்பை காவலில் வைத்திருக்க அனுமதி வாங்கி இருந்தது.
திருச்சி இரண்டாவது கூடுதல் துணை கோர்ட்டில் மேலும் ஏழு நாட்கள் காவலை நீடிக்கும்படி CBI கேட்டுக் கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு இருந்த பெண் குழந்தைகளின் ஆதரவற்ற இல்லங்களில் வழக்குக்கான ஆதாரங்களை சேகரிக்க பதிவுசெய்யப்படாத சட்டவிரோதமாக செயல்பட்ட குழந்தைகளின் இல்லத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக மோஸஸ் கிறிஸ்துவ மிஷனரியில் தங்கியிருக்கும் பெண்களிடம் அவர்கள் விசாரித்தார்கள்,
அவர்கள் அனைவரும் பெண் சிசுக் கொலைகளிலிருந்து காப்பாற்றப்பட்டதாக அவர்கள் அனைவரும் நம்பினர்.
*_தொடர்ச்சியான நிகழ்வுகளில், பாதிரியார் ஜேக்கப்,_**_
*_கிறிஸ்துவ மத போதகர் மற்றும் பதிமூன்று பெண் ஊழியர்கள் அந்த பெண் குழந்தைகளை மூளைச்சலவை செய்து,_*

பகல் கொள்ளை மின்னணு வாக்குமுறையை ஒழித்துக்கட்ட எல்லோரும் ஓரணியில்.....

Parthiban Pakirisamy : ஆகவே அரசியலாளர்களே.... உங்களிடம் ஒரு குறைந்தபட்ச நேர்மையும் அரசியலில் அறிவு நாணயமும் இருக்குமேயானால் முதலில் இந்த பகல் கொள்ளை மின்னணு வாக்குமுறையை ஒழித்துக்கட்ட எல்லோரும் ஓரணியில் திரளுங்கள். இங்கே எந்தவிதமான மாநில உரிமைகளும் இல்லாத நிலையில், உங்களுடைய குறைந்தபட்ச கட்சி செயல்திட்டங்கள் எல்லாம் நாங்கள் அறிந்ததே. அதுபற்றி மேலும் எந்த அறிவுரைகளையோ நாங்கள் வந்தால் அல்லது எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரேயொருமுறை வாய்ப்பளித்தால், நாங்கள் வானத்தை வில்லாக வளைப்போம் நீரின் மேல் நடந்துகாட்டுவோம் என்கிற பாட்டெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்; முதலில் தூங்குவது போன்று நடிப்பதை நிறுத்துங்கள்.
ஒன்றுக்கும் உதவாத இந்த மின்னணு வாக்கு முறையை வைத்துக்கொண்டும் தொடர்ந்து இந்த வகையான வாக்குமுறையினால் ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் சிறு நன்மை மருந்துக்காகக்கூட நடைபெறவில்லை என்பதை தெரிந்திருந்தும்; நீங்கள் எல்லோரும் அதாவது எல்லா தேர்தல் கட்சிகளும் அதுபற்றி ஒன்றுமே அறியாதது போலவும், தற்போதுதான்

ஸ்டாலின் : பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும மகளிர் தினவிழாவில்


தினத்தந்தி :நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று மகளிர் தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி மற்றும் பிரசார குழு சார்பில் உலக மகளிர் தினவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ரேணுகா சவுத்ரி ஆகியோர் பேசினார்கள். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் என்னுடைய சார்பில் தி.மு.க. மகளிரணிக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மகளிர் பாதுகாப்புக்காக உதவிமைய எண்ணை உருவாக்க வேண்டும். அதில் நீங்கள் உறுதியாக ஈடுபட வேண்டும். பெரும்பான்மையோடு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையோடு இருக்கும் மோடி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதைப்பற்றி கவலைப்படவில்லை.

டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்! – பீமன்.

டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்!  – பீமன்.
ilankainet.com : உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார்.
அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இறங்கிய அவர் கீழ்கண்டவாறு தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.எனது முழுப்பயணத்தைப்பற்றி எழுதுவதானால் அல்லது பேசுவதானால் அதற்கு வருடங்கள் தேவைப்படும்.
பல்வேறு பாடங்களையும், அவதானிப்புக்களையும், புரிதல்களையும் தந்ததோர் பயணமாகவே ரோறொன்டோவுக்கான பயணம் அமைந்திருந்தது. அவற்றில் சில முக்கியமான புள்ளிகளை குறிப்பிடுகின்றேன் என தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.
தமிழ் நாட்டிலிருக்கின்ற எங்களுக்கு எல்ரிரிஈ என்பது ஒர் கதாநாயக அமைப்பு என்றும் பிரபாகரனே தமிழ் மக்களின் இறுதி அடையாளச்சின்னம் என்றும்தான் தெரியும்.
ஆனால் நான் ரொறொன்டோவில் இறங்கியதிலிருந்து சந்தித்த ஒவ்வொரு தமிழரிடமிருந்தும் ஒவ்வொரு புதிய கதையை படித்துக்கொண்டேன்.
இலங்கைத் தமிழர்களின் கதை பல பக்கங்களைக்கொண்டது. அவர்களில் பலர் நடந்து முடிந்தது எவ்வித பலனையும்தராத யுத்தம் என்று உணர்கிறார்கள்.

நம்மால் கைவிடப்பட்ட‌ டாக்டர் அனிதாவின் பிறந்த நாள் இன்று.

Pitchaimuthu Sudhagar : தமிழக மண்ணில் நீட் (NEET) தேர்வு திணிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் தமிழக மருத்துவ கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டில் தன் சக வகுப்பு தோழர்களோடு தன் பிறந்த நாளை கொண்டாடி இருப்பாள்.
ஐந்து ஆண்டுகள் கழித்து, வானம் பார்த்த பூமியாய் கிடக்கும், வறட்சி நிறைந்த அரியலூர் பகுதிக்கு ஒரு மருத்துவர் கிடைத்திருப்பார்.
யார் கண்டார்? இந்த தேசத்தின் பிரதிநிதியாக வெளிநாடு ஒன்றில் உலகின் புகழ்பெற்ற மருத்துவராக இருந்திருப்பாள்.
அவள் தனக்காக கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு காற்றின் கோசங்களை கலைக்க முடியாத வெகு தொலைவிற்கு சென்று விட்டாள்.
இப்போதும் அவளது குழந்தைமை நிறைந்த முகமும், மிரட்சி விலகாத கண்களும் மட்டும் என் முன் வந்து நிற்கிறது.
மார்ச் 5 ஆம் திகதி, நம்மால் கைவிடப்பட்ட‌ டாக்டர் அனிதாவின் பிறந்த நாள் இன்று. Happy Birthday Dr Anitha. நீட் என்னும் மாய மானை தமிழக மண்ணில் இருந்து விரைவில் அடித்து விரட்டுவோம்.

ஞாயிறு, 4 மார்ச், 2018

வைரமுத்து கலைஞருக்கு : பிடர்கொண்ட சிங்கமே பேசு ...


tamilthehindu 
திமுக தலைவர் கலைஞரை  கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசும் இரண்டு நிமிட வீடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரை  கவிஞர் வைரமுத்து சந்தித்துக் கைகொடுக்கும் காட்சியோடு வீடியோ தொடங்குகிறது. அப்போது கலைஞரை  வாழ்த்திக் கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை வாசிக்கிறார். அந்தக் கவிதையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கருணாநிதி உற்றுக் கவனிக்கிறார். அவருக்குப் பிடித்த வரிகள் வரும் போதெல்லாம் புன்னகைக்கிறார்.
கவிஞர் வைரமுத்து கவிதை சொல்லச்சொல்ல கலைஞர்  உற்சாகமாகிறார். அவர் முகம் மலர்கிறது. 'பிடர்கொண்ட சிங்கமே பேசு' என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாகக் கவிதை சொல்லி முடிக்க வைரமுத்துவின் காதில் அவர் எதையோ முணுமுணுப்பது போல வீடியோமுடிகிறது.
கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் கடந்து கலைஞரை நேசிப்பவர்களுக்கும் இந்த வீடியோ ஆறுதலோடு கூடிய மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
வைரமுத்துவின் கவிதை
பிடர்கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே நீ
பேசுவாய் வாய் திறந்து

ஆந்திராவில் கைதான 84 தமிழர்கள் தமிழகம் திரும்பினர்

anthira thamilarsnakkeeran ராஜ்ப்ரியன் : தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு வருபவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வருபவர்களே என சந்தேக கண்கொண்டு நோக்குகிறது ஆந்திரா காவல்துறை. அந்த சந்தேகம் பிரபலமான திருப்பதி – திருமலை வெங்கடாஜலபதியை வணங்க போகிறவர்களையும், கூலி வேலைக்கு வருபவர்களை பிடித்து அடித்து உதைத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது. உண்மையில் செம்மரம் வெட்டவந்து சிக்கியவர்கள், அப்பாவிகள் என சுமார் 4 ஆயிரம் தமிழக கூலி மக்கள் ஆந்திராவின் திருப்பதி, சித்தூர், கடப்பா, அனந்தபூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 2ந்தேதி, திருப்பதியில் இருந்து கடப்பா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தார் பாய் போர்த்திக்கொண்டு ஒரு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அதனை ஆஞ்சநேயா சோதனை சாவடி அருகே நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் சந்து தலைமையிலான கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட போலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 84 கூலி தொழிலாளர்கள் தார் பாய்க்கு கீழே இருந்தனர். அவர்களை பிடித்த கடப்பா காவல்துறை, இவர்கள் செம்மரம் வெட்டவந்தவர்கள் எனச்சொல்லி கைது செய்தது. விசாரணையில் அதில் 50 பேர் வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள், 34 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள். அதில் இருவர் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இவர்களை திரட்டி அனுப்பியது ஜம்னாமத்தூரை சேர்ந்த ஜெயராமன், அண்ணாதுரை என வாக்குமூலம் தந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் பணிகள் தொடங்கிவிட்டது ... மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேஹ்வாலு

காவிரி மேலாண்மை வாரியம்: பணிகள் தொடங்கிவிட்டன!
மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி வழங்கியத் தீர்ப்பில், ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுவரை பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தான் எவ்வித உத்தரவாதமும் கொடுக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இந்திராணி போரா முன்னிலையில் நடந்த கார்த்திக் சிதம்பரம் விசாரணை முடிவு ..

இந்திராணி முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை முடிந்தது
மாலைமலர் :ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் மும்பை பைகுல்லா சிறையில் விசாரணை முடிவடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடெல்லி: இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்று தருவதில் கார்த்தி சிதம்பரம் இடைத்தரகராக செயல்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேகாலயாவின் முதல்வர் ஆகிறார் கான்ரட் சங்மா - பாஜகா தில்லுமுல்லு கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா

மேகாலயாவின் முதல்வர் ஆகிறார் கான்ரட் சங்மா - ஆறாம் தேதி கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழாமாலைலமல்ர் :மேகாலயா மாநிலத்தில் அமையும் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக கான்ரட் சங்மா வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறார். ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதாவுக்கு 2 இடங்கள் கிடைத்தன. பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைத்தன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இங்கு ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றுவரும் அதேவேளையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேசி கூட்டணி அமைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக காய் நகர்த்தியது.

திரிபுராவில் அரசு ஊழியர்களுக்கு ரூ15,000.கூடுதல் சம்பளம் ,, பாஜகவின் தேர்தல் வாக்குறுதி ..... திரிபுராவில் பாஜகவினர் வெறியாட்டம்

mathi P - Oneindia Tamil அகர்தலா: லோக்சபா தேர்தலில் இந்தியர் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வோம் என அதிரடியாக அள்ளிவிட்டு வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. இதேபாணியில் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ரூ15,000 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என உறுதி மொழி கொடுத்து வாக்குகளை அள்ளியிருக்கிறது பாஜக. 
 திரிபுராவில் 25 ஆண்டுகால ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் தங்களை மீறி எந்த மாற்றமும் நடந்துவிடாது என மெத்தனத்தில் இருந்திருக்கின்றனர். 
இந்த மெத்தனம்தான் ஆட்சியை இப்போது பாஜகவிடம் பறிகொடுக்க வைத்திருக்கிறது. 
திரிபுராவில் டேரா போட்டு இடதுசாரிகள் எங்கெங்கால்ம் சறுக்கியுள்ளனர் என ஆராய்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதர். இதில் அவர் கண்டுபிடித்ததுதான் அரசு ஊழியர்களின் படுபயங்கர அதிருப்தி.
 4-வது ஊதிய குழு ஊதியம் திரிபுராவில் அரசு ஊழியர்களுக்கு 4-வது ஊதியக் குழுவின் அடிப்படையில்தான் இப்போதுவரை ஊதியம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை திரிபுரா அரசு செயல்படுத்தாமல் இருந்துள்ளது.

Sarahah சரஹாவை நீக்கிய கூகுள்!

சரஹாவை நீக்கிய கூகுள்!மின்னம்பலம் :மார்டன் மொட்டைக் கடிதாசியாகக் கருதப்பட்ட சரஹா அப்ளிகேஷன், ப்ளேஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
சரஹா செயலியில் யார் நமக்குச் செய்தி அனுப்பியது என்ற தகவலை வெளியிடாது, அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே நம்மால் படிக்க முடியும் என்ற வசதிகொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண்களுக்கு அதிக தொந்தரவு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சரஹா செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைதினத்தந்தி :சென்னை, முன்னாள் முதல் அமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் ஒருவர் இங்கு பணியில் இருந்துள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். அந்த நபர் மதுரையை சேர்ந்த அருள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது. சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரிபுராவில் 591 வாக்கு இயந்திரத்தில் பிரச்சனை : கம்யூனிஸ்ட் குற்றசாட்டு

Special Correspondent FB Wing :  திரிபுராவில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 60. இதில், சாரிலாம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேந்திர நாராயண் தேவ்வர்மா உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளில், பாஜக 35 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களிலும் வென்றுள்ளன.
25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2013 தேர்தலில் 49 தொகுதிகளில் வென்று மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியை அமைத்திருந்தது. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பாஜக 43% வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42.7% வாக்குகளையும் காங்கிரஸ் 1.8% வாக்குகளையும் பெற்றுள்ளன.
கடந்த முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தான் போட்டியிட்ட தண்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமையப்போகும் பாஜக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் பிப்லப் தேவ், பாணாமலிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமலிருந்த பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதும், கடந்த முறை 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் Vs எமெர்ஜென்சி சர்க்காரியா கமிசன் .. எம்ஜியாரின் வருமான வரி .. மோகன் குமாரமங்கலம் .. பாலதண்டாயுதம்

கலைஞரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ் பெற்ற யாழ்ப்பாண வக்கீல் ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற ஈழத் தமிழரும் வாதாட வந்தார். அந்த வக்கீலும், ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் உதவுவதற்கு எதற்கு கட்டணம் என்று இலவசமாக வாதாட வந்தார். பின்னாளில் பொன்னம்பலம், தங்கும் செலவு, போக்குவரத்து செலவு எதையும் வாங்க மறுத்துவிட்டார்.
Muralidharan Pb :  என்னதான் நாம ஒருத்தரை மாங்கு மாங்குனு புகழ்ந்து
பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது. அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும். இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய். அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ் சமூகம். என்னவோ மற்ற தலைவர்கள் எல்லாம் தன் உடலை வருத்தி சம்பாதித்ததை மக்களுக்கு கொடுப்பது போலவே பேசுவார்கள். கலைஞர் செய்த நல்ல விடயங்களை மறந்து இன்றும் அவரது மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு சர்க்காரியா கமிஷன். அப்படி என்னதான் இருக்கு இந்த சர்க்காரியா கமிஷனில் ? பார்ப்போம்.
முதல்வர் கலைஞர் மீண்டும் 1971ல் அசுர பலத்தோடு 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்தார். அதற்கு முன்னால் காங்கிரஸ் இரண்டாக உடைந்து தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. இந்திரா காந்தியின் காங்கிரஸிற்கு தமிழகத்தில் முகவரியே இல்லாமல் இருந்தது. வெறும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று
இந்திராகாந்தி கூறவே திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி உருப்பெற்றது. பெருவாரியான வாக்குகளில் சுமார் 38 இடங்களில் திமுக 23+காங்கிரஸ் 9 + மற்றவை 6ல் வெற்றி பெற்று இருந்தன.
இந்திராவிற்கு ஆதரவு கொடுத்து, இந்திரா பிரதமராக பதவியேற்றவுடன் பல சிக்கல்களை திமுக சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்டு கல்யாணசுந்தரம், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் உதவியோடு தேன் கூட்டை கலைத்தார் இந்திரா காந்தி அம்மையார். காரணம் கருணாநிதியால் அவருக்கு வேலை முடிந்து பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திரா முதலில் எம் ஜியார்  திமுகவை விட்டு வெளியேற செய்தார், அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் வருமான வரி சோதனை. மகோரா வெளிநாட்டிற்கு சென்ற போது அவருடைய சிப்பந்திகளை பிடித்து கருப்பு பண விவகாரங்களை கண்டுபிடித்து, பயமுறுத்தி, புதிதாக கட்சி தொடங்கவைத்து,அதை 1972ல் மகோரா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், நிறைய நடந்தேறியது.

கேரளாவை முந்திக்கொண்டு திரிபுரா கல்வியில் முதல் இடம்... மாணிக் சர்க்கார் ஆட்சியில்

Abdullah M Ajmee : யானைத் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொண்ட நிகழ்வுதான் திரிபுராவில் நடந்துள்ளது.
கடந்த பல வருடமாக மாணிக் சர்க்கார்த்தான் திரிபுராவின் CM ஆக உள்ளார் (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்). கிட்டத்தட்ட 20 வருடங்கள் முதல்வராக இருந்த போதிலும் அவரிடம் சொந்த கார்க்கூட இல்லை. முதல்வராக பெரும் சம்பளத்தையும் கட்சிக்காக செலவு செய்துவிட்டு கட்சியின் சார்பில் வரும் சம்பளத்திளும் மனைவியின் ஓய்வூதியத்திலும் மட்டுமே வாழ்வை மேற்கொள்கிறார்.
இந்தியாவிலேயே குறைந்த பணம் கொண்ட CM பட்டியலில் முதலிடம் மாணிக் சர்காருக்கு.ஊழல் குற்றச்சாட்டும் ஏதும் இல்லாத முதல்வர்.இதனாலேயே கட்சிக்குள் சம்பாரிக்க முடியாமல் இவருக்கு எதிரா கிளர்ச்சி செய்பவர்களெல்லாம் உண்டு.
அரசாங்க செயல்களிலும் சரி,
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வி வளர்ச்சியில் 14 வது இடம்.2011 கணக்கெடுப்பின்படி 4 வது இடம்.2014 தற்காலிக கணக்கெடுப்பின்படி கேரளாவை முந்திக்கொண்டு திரிபுரா கல்வியில் முதல் இடம் பிடித்தது.இன்றுவரை அதுதான் உள்ளது.இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இந்த வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க இவர் கல்வியின் மீது செலுத்திய புது புது திட்டங்களே காரணம்.
அப்படிப்பட்டவரை தோற்கடித்து பெரும் வரலாற்று பிழையை செய்துவிட்டனர் திரிப்புரா மக்கள்.
விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்..

பாஜக தேர்தல் ... EVM . கருத்து கணிப்புகள் .. பணம் ... சர்வாதிகாரம் நிச்சயமாக வந்து கொண்டிருக்கிறது


வடகிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளும் நான் சொன்னதை தான் காட்டுகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இதற்க்கு அப்புறமும் பிஜேபி தேர்தல் கோல்மால் பற்றிய விழி்ப்புணர்வு வரவில்லை என்றால் கட்சிகளை கலைத்து விட்டு செல்வது நன்று..
கடந்த 16 மாதத்தில் நடந்த MP, MLA இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் 80% இடங்களில் பிஜேபி தோற்றுப்போயுள்ளது. யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தலில் பிஜேபி/ RSS மாணவர் அமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று தான் வருகிறார்கள்.
மீடியாவை கைக்குள் வைத்து கருத்துக்கணிப்பை தனக்கு சாதமாக கொண்டுவந்து.. அப்புறம் கருத்துக்கணிப்புபடி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான் மோடி, அமித்ஷா & கோ.
குஜராத் தேர்தல் முடிவுக்கு சில நாட்கள் முன்னாள் நான் பதிவிட்டது.. அந்த தேர்தலில் நான் சொன்னது போல் தான் நடந்தது. இப்பவும் பாருங்கள்.. 2019 தேர்தல் கருத்து கணிப்பு'னு, மோடி அலை'னு மீடியாவை கைக்குள் போட்டு தனக்கு தேவையான கருத்துக்களை மக்கள் கருத்துக்கள்'னு சொல்லி.. அப்புறம் எலெக்க்ஷன் கமிஷின்'ன கைக்குள் வைத்து EVM உதவியுடன் கருத்துக்கணிப்பு படி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது..