R.S.Prabhu:
தமிழகத்தில்
தினமும் பத்துக்கும் குறையாத டெங்கு மரணங்கள் கொள்ளைநோய் கணக்காக
நிகழ்ந்து கொண்டிருக்கையில் தடுப்பூசி போட்டதால் மரணம் நிகழ்கிறது, கொசு
மருந்து தெளிப்பதால் கொசுக்கள் பெருகிறது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்
கொசுக்களைக் கொல்லக்கூடாது, அலோபதி மருத்துவத்தில் டெங்குவுக்கு
மருந்தில்லை என்றெல்லாம் பேசிவரும் ஹீலர் கும்பல்கள், மரபு/பாரம்பரிய
ஆர்வலர்கள்தான் இன்றைய merchants of death. பப்பாளி இலைச்சாறு பருகினால்,
நிலவேம்பு கசாயம் பருகினால் டெங்கு குணமாகும் என்று நம்பி மருத்துவர்களிடம்
போகாமல் குடும்பத்தினரின் உயிரைக் கொன்று கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு
இந்த ஹீலர்கள் கடவுளாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.
பஞ்சகவ்யம் குடித்தால் எய்ட்ஸ் உட்பட எல்லா நோயும் குணமாகும், கண்ணாடி போட தேவையிருக்காது, காசுக்கு ஆசைப்பட்டு அலோபதி மருத்துவர்கள் சிசேரியன் செய்துவிடுகிறார்கள், நாற்காலியில் உட்கார்ந்ததால்தான் வியாதிகள் வருகிறது, கலப்பின விதைகள் என்றால் மறுபடியும் முளைக்காது என சகட்டுமேனிக்கு பொய்களைப் பரப்பிய நம்மாழ்வார்தான் இந்த ஹீலர் கும்பல்களின் பிதாமகன்.