செவ்வாய், 5 செப்டம்பர், 2017

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாலபாரதி கொடுத்த மரண அடி!

பாலபாரதி : புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது மகளுக்கு மருத்துவம் படிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புறவாசல் வழியாக உதவி பெற்றுக்கொண்டு, தற்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர், தனது மகளுக்கு ஒரு நீதி, அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவது வேதனை அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் கூறியது: 2015-ம் ஆண்டில் சட்டப் பேரவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் ஒருவர் எழுந்து, ‘உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதல்வர் ஜெயலலிதாவிடம் வந்து மருத்துவப் படிப்பில் சேர உதவி கோரினீர்கள். அடுத்த நிமிடமே, அம்மா (ஜெயலலிதா) உங்கள் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுத்தாரே. அதை மறந்துவிட்டீர்களா’ எனக் கேட்டார்.

உறுப்பு தானம் செய்ய கட்டுப்பாடுகள் தளர்வு

கோல்கட்டா: உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, நெருங்கிய உறவினர்கள் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாற்று பெற்றோர், மாற்று உடன்பிறந்தோரும் நெருங்கிய உறவினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, நாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. உயிருக்கு போராடும் ஒருவருக்கு தேவையான, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை, அவருடைய நெருங்கிய உறவினர் மட்டுமே தானமாக அளிக்க முடியும். பெற்றோர், குழந்தைகள், கணவன் அல்லது மனைவி, உடன் பிறந்தோர் ஆகியோர் மட்டுமே நெருங்கிய உறவினர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். கடந்த, 2011ல், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக உடல் உறுப்புகள் கிடைக்காமல், பலர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நெருங்கிய உறவினர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாற்று பெற்றோர், மாற்று உடன்பிறந்தோரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தினமலர்

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த நாள் செப் . 5 ..

செக்கிழுத்த புண்ணை எல்லாம் செந்தமிழால் ஆற்றிக் கொண்டேன் என்று அகமகிழ்ந்த அண்ணலே .. நாட்டுக்காக செக்கிழுத்து வாழ்விழந்த வள்ளலே .... நின் திருவடிகளில் என் கண்ணீர் பூக்களால் வணங்குகிறேன் 
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழ்நாட்டுத் தேச பக்தர்களுள் ஒருவர். தேச பக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின்மீது அவருக்கிருந்த பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம்.
பெரியார், காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேச பக்தராய் விளங்கியவர். அவர் உலக மானிய பாலகங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத் தொண்டு செய்தவர்கள்.
பிள்ளையவர்கள் பல முறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்றமெல்லாம், இந்நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு கொண்டதுதான். இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும். முதல் வகுப்பும், முந்திரிப் பருப்பும், அல்வாவும், ஆரஞ்சுப் பழமும் கிடைக்குமென்பது. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும். செக்கு இழுத்துக் சீரழிய வேண்டும்மென்பது. கற்கள் உடைபட வேண்டும். இன்றேல், பற்கள் உடைபட நேரிடும்.

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: மதிமுகவினரை நீக்கிய வைகோ!

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: மதிமுகவினரை நீக்கிய வைகோ!
ஃபேஸ்புக்கில் தலைமையை எதிர்த்து ஸ்டேட்டஸ் போட்டதன் எதிர்வினையாக இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறார் வைகோ. மதிமுக இணையதளக் குழு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகதளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறது. வைகோவின் அறிக்கைகள், பேச்சுகளை வைரல் ஆக்கும் பணியை இவர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் அனிதா மரணத்தை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத வைகோ, அடுத்த நாளே ஸ்டாலின் தலைமயில் நடக்கும் முரசொலி பவள விழாவில் கலந்துகொள்கிறார் என்ற தகவலை ஒப்பிட்டு சில மதிமுகவினரே பதிவிட்டிருந்தனர்.
இதை வைகோவின் கவனத்துக்கு இணையதள மதிமுக நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். செப்டம்பர் 3ஆம் தேதி ஸ்டேட்டஸ் போட்ட நிலையில் நேற்று இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் வைகோ.

BBC : நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் திமுக மாநாடு

கட்டாய நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறி,அவரது மரணத்திற்கு நியாயம் கேட்கவும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரவும், அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை திமுக திருச்சியில் வெள்ளிக்கிழமையன்று> (செப்டம்பர் 8) நடத்தவுள்ளது. சென்னை அறிவாலயத்தில் திங்களன்று (செப்டம்பர் 4) அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, திருச்சியில் எல்லா கட்சியினரும் ஒன்று கூடும் நிகழ்வு முதற்கட்டமானது என்றார்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவும், உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக திருச்சி மாநாடு அமையும் என்றார் ஸ்டாலின்.

இலங்கையில் இருந்து 76 மீனவர்கள் இந்திய கடல்படையினரிடம் ஒப்படைப்பு! காரைக்கால் வந்தனர்.

தமிழகத்தில் ராமநாபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 76 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ; இவர்கள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, இலங்கை அரசு சட்டத் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் ஊர்க்காவல் துறை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து அவர்கள் அனைவரும் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இன்று இரவு தாயகம் திரும்பினர். காரைக்கால் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த அவர்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச் சென்றனர். தினமணி

மருத்துவப் படிப்புக்கு ஒரு நீதி! சட்டப்படிப்புக்கு ஒரு நீதி! நியாயம் இல்லாத நீட்! -ஒரு மருத்துவரின் குமுறல்!

சாத்தூரில் மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் பழனியப்பா சமூக ஆர்வலர் ஆவார். அனிதா தற்கொலையைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பையும், சட்டப் படிப்பையும் ஒரே பார்வையில் நீதித்துறை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்; விமர்சிக்கவும் செய்கிறார். மருத்துவப் படிப்போடு, சட்டப் படிப்பையும் நிறைவு செய்திருக்கும் அவரது கருத்து இதோ – NEET பரீட்சையில் தேர்வு பெற்றால் தான் MBBS (மருத்துவம்)படிக்க வேண்டும் என்றால் சீமான்களே! நீங்கள் படிக்கும் LLB(வக்கீல்) படிப்புக்கு ஏன் NEET பரீட்சை இல்லை? 12-ஆம் வகுப்பு தேர்வு பெற்றால் LLB-5 வருட படிப்பும், அதில் போதிய மதிப்பெண் இல்லாவிட்டால் ஒரு பட்ட படிப்பை முடித்த பின் LLB-3 வருட படிப்பு என்றும் வைத்து கொண்டு, கடின உழைப்புக்கு மரியாதை கொடுக்காமல் மரண சாசனம் எழுதுகிறீர்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.. போதிய மதிப்பெண் பெறாமல் MBBS படிக்க வாய்ப்பு கிடைக்காமல் BL படித்துவிட்டு வாதிடுகிறோம் என்ற போர்வையில், பொய் சொல்லி அலைந்துவிட்டு, பதவி உயர்வு பெற்று அந்தஸ்து அடைந்ததும், பழைய ஆதங்கத்தை MBBS படிப்பில் காட்டாதீர்கள்.

"To-Let" மாத்துத்துணி இல்லாம அவசரமா அங்க ஓடுனவனுக்கு முதல் பரிசு, 50 ஆயிரம்

Jeyachandra Hashmi : மறக்கவே முடியாத மொமன்ட் இது. கேரளாக்கு போறதுக்காக அப்டி இப்டினு ஒதுக்கி வச்சுருந்த 3000 ரூபாய பர்ஸ்ல இருந்து யாரோ எடுத்துட்டாங்க. ரொம்ப மன உளைச்சல் ஆய்டுச்சு. சரி போக வேண்டாம்னு முடிவு பண்ணி சென்னைல நடந்த National Freedom Festival க்கு போனா, அங்க எங்க ‘களவு’ படத்துக்கு முதல் பரிசு. 25 ஆயிரம் பரிசுத்தொகை. அதான் காசு வந்துருச்சேனு போட்ருந்த ட்ரெஸ்ஸோட கோயம்பத்தூர்க்கு பஸ் ஏறிட்டேன். அங்க போய் தோழர் Feroz வீட்ல குளிச்சு ரெடியாகி Navanee தோழர் பைக்க எடுத்துட்டு அரக்க பரக்க பாலக்காட்டுக்கு போனேன்.
அங்க போனா எல்லாம் டீம் டீமா உக்காந்துருக்காங்க. என்னடா நாம மட்டும் தனியா வந்துருக்கோமேன்னு நெஜமா ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா ‘To-Let’ படத்துக்கு விருதுனு அறிவிச்சதும் எழுந்த கைத்தட்டல் அத்தனையையும் மறக்கடிச்சுருச்சு.

ரகுராம் ராஜன் : எச்சரித்தேன் !நோட்டு செல்லாத அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என...

புதுடில்லி: ;செல்லாத நோட்டு குறித்த அறிவிப்பு, நீண்ட கால பயனை விட, குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தி விடும்' என, மத்திய அரசை எச்சரித்த தாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார். பழைய,500-1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு, 2016, நவ., 8ல் அறிவித்தது. இந்த நடவடிக்கையால், பொருளாதார பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்,ரகுராம் ராஜன்,இவ்விவகாரம் தொடர் பாக, கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரி யராக தற்போது பணியாற்றி வரும் அவர், பொருளாதார சீர்திருத் தங்கள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படுகிறது. இது பற்றி,ரகுராம் ராஜன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிர்மலா சீதாராமன் ... "ஸ்திரீ ஸ்தானம் சூத்ரம் சுயநிர்மூலம்" .. அவாள் ஊளை இடப்போகிறார்கள்! ..

Shalin Maria Lawrence · Making Nirmala Seetharaman defence
minister is 'tokenism' and it's nowhere connected to 'feminism'.I'm a feminist and a rationalist and I clearly know the difference between the two.


Radha Manohar இது ஒரு மிகப்பழமையான டெக்னிக் .. வெள்ளையர்கள் ஆபிர்க்க நாடுகளில் ஒரு மோசமானவரை தெரிந்து எடுத்து பதவியை கொடுத்து விட்டு .. பின்பு அவரை உதாரணமாக காட்டி பார்த்தீர்காளா இன்னும் ஆபிரிக்கர்களுக்கு தகுதி வரவில்லை என்று அவர்களையே நம்ப வைப்பார்கள். உண்மையான ஒரு தகுதி வாய்ந்த பெண்ணை உயர் பதவிக்கு நியமிப்பதே பெண் உரிமைக்கு பெருமை சேர்க்கும் .. நிச்சயம் எதிர்காலத்தில் இந்த நிர்மலா மாமி தனது அரைவேக்காட்டு தனத்தாலும் ஆணவத்தாலும் எல்லாவற்றிலும் மேலாக ஒரு மன நிலை குன்றியவர் போன்ற பேச்சாலும் நிச்சயம் பெரிய ஒரு சிக்கலில் நாட்டை இழுத்து விடப்போகிறார், எழுதி வைத்து கொள்ளுங்கள் .. அப்ப்பொழுது ஏராளமான பழமைவாதிகள் பார்த்தீர்களா பொம்மனாட்டிக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்தோம் .. இப்படி நாசமாக்கிட்டாளே? தெரியாமலா சொன்னாங்க "ஸ்திரீ ஸ்தானம் சூத்ரம் சுயநிர்மூலம்" என்று அவாள் ஊளை இடப்போகிறார்கள் ..

திங்கள், 4 செப்டம்பர், 2017

சுயமரியாதை எண்ணம் கொள் . சினம் கொள் ,போராடு ,புரட்சி செய் !!!!!

Shalin Maria Lawrence : அவர்கள் நீட் கொண்டுவந்ததே நாம் கோட்டு போட
கூடாதென்றுதான்.
அடிமைகள் தோளோடு தோல் உரசி நடப்பது யாருக்கு பிடிக்கும் ?
யாரை அவர்கள் அடிமையாகவே வைத்திருக்க நினைத்தார்களோ அவன் கோட்டும் சூட்டும் போட்டு கால் மேல் கால் போடுவான் என்று அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை . யாரை அவர்கள் மனிதனாக கூட நடத்தவில்லையோ அவன் அவர்களின் அரசியல் சாசனத்தின் தந்தையாவான் என்று அவர்கள் நினைக்கவில்லை . அவர்களின் அரசியல் சாசனத்தை அவன் கையாலே இயற்றுவான் என்று அவர்கள் நினைக்கவில்லை .
இதையெல்லாம் அவனுக்கு கொடுத்தது கல்வி .
ஆம் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த அண்ணல் அம்பேத்கரை "The father of the Indian constitution " ஆக்கியது அவர் பெற்ற கல்வி .
அடிமைகள் ஜெயிப்பது யாருக்கு பிடிக்கும் ?
தமிழ்நாட்டில் சூத்திரன் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஒருவன் இட ஒதுக்கீடு கேட்கிறான் அதை சட்டமாக்குகிறான் .
தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக மலம் அள்ளி கொண்டிருந்தவர்கள் ,பனை மரம் ஏறி கொண்டிருந்தவர்கள் அதை பயன்படுத்தி கல்வி பெறுகிறார்கள் ,பகுத்தறிவு பெறுகிறார்கள் . அரசு முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள் .அடிமைகள் ஜெயிக்கிறார்கள் .
ஜெயித்தவர்கள் அந்த மாநிலத்தில் பலவருடங்களுக்கு இவர்களின் காவி கோடி ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள் .

சமசீர் கல்வியை முடக்க போராடியவர்கள் ... நீட் ஆயுதத்துடன் வந்தார்கள் கொன்றார்கள்

Muruganantham Ramasamy: தனியார்பள்ளி லாபியின் கைங்கர்யத்தில் சமச்சீர்கல்வி திட்டத்தை முடக்க ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பல்பு வாங்கியது.. அதன் பின் அதை பொறுத்துக்கொள்ளஇயலாமல் அதே தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மாறவும்,புதிதாக சி.பி.எஸ்.ஸி பள்ளிகளை துவங்கவும் தடையின்மைசான்றுகளை வழங்கியதும் ஜெயாவின் அரசுதான்.. அப்போது கல்வி மீதான மாநிலங்களின் உரிமைபற்றி ஜெயாவிற்கு கவலையில்லை. கருணாநிதி கொண்டு வந்ததை காலியாக்க வேண்டும் என்கிற வன்மத்தை தவிர..
சி.பி.எஸ்.ஸி என்பது பணிமாறுதலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வியை தொடர்வதில் குழப்பம்இருக்க கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது.. இதில் தரம் மண்ணாங்கட்டி என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்யத்தனம்.. மேலும் எந்தவொரு பாடத்திட்டமும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் வல்லுநர்களால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வருகிறது.. எனவே எந்த மாநில பாடத்திட்டமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
உதாரணமாக ஒரு கேரள மாணவன் அவர்களின் உள்ளூர் மொழி தவிர தங்கள் மாநில நிலவியல் வரலாறு சமூகவியல் ஆகியவற்றை பயில்கிறான்..
அவனது நடைமுறை வாழ்க்கைக்கு அது அவசியமானது.. சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்தில் அது இருக்காது.. அப்படியானால் அது அவனது வாழக்கைக்கு எப்படி உதவும்..?
சமசீர் கல்வியை முடக்க ஜெயலலிதா நியமித்த  ரஜினியின்  மாமியார்  பத்மா சேஷாத்திரி தலைமையில்  அமைந்த குழுவுக்கு  எதிராக நீதிமன்றங்களில் போராடி   சமசீர் கல்வியை மீண்டும்  கொண்டு வந்தது வரலாறு

டாக்கா மஸ்லின் .. நெசவாளர்களின் விரல்களை வெட்டிய பிரிட்டீஷ் .. தொடர்ச்சியே நீட்

“The British,” he said, “wanted to sell their own cotton goods, and they destroyed the local industry. In Dhaka, the weavers disappeared. So did their muslin.” A pause. Then he added, “They say the British cut off the thumbs of the weavers so that they couldn’t make muslin anymore
Bharathi Nathan : ஏகலைவன் கட்டை விரல் துரோணரால் காவு வாங்கப்பட்ட கதை நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், திறமையான நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளை ஏகாதிபத்தியம் வெட்டியெறிந்த கதை தெரியுமா? அன்றைய நாளில், வங்கத்து நெசவாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் உற்பத்தி செய்த ‘டாக்கா மஸ்லின்’ என்ற மிக மெல்லிய புடவையை ஒரு மோதிரத்துக்குள் அடக்கி வைத்து விட முடியும். வெள்ளையன் அதைப் பார்த்தான். இவ்வளவு திறமைசாலிகளை வளரக் கூடாதென அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி விடும்படி தன் படையினருக்கு உத்திரவிட்டான். காலகாலமாய் ஆதிக்கவாதிகள் தங்களின் பிழைப்புக்கு பங்கம் வரக் கூடாதென வெட்டி எறிந்த கட்டை விரல்கள் எத்தனையோ. கட்டை விரல்களைக் காவு வாங்கும் சோகக் கதையின் இன்றைய அத்தியாயம் நீட் தேர்வு என்று சொன்னால் , அது மிகையில்லை.  http://www.aramcoworld.com/en-US/Articles/May-2016/Our-Story-of-Dhaka-Muslin

100 மார்க் பார்ப்பானும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்
பிச்சைமுத்து சுதாகர்
நாடக மாமேதை “எஸ் வி ஷேகர்” தான் சார்ந்த பார்ப்பன  சமூக மாணவர்கள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக முக நூலில் பதிவிட்டுள்ளார். சரி, அவர் சார்ந்த சமூகத்திற்காக பேச அவருக்கு உரிமை இருக்கிறது என்று யோசித்தால் அப்பதிவில் உலக மகா பொய்யை வடி கட்டாமல் இறக்கி உள்ளார். இதுதான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்துள்ளது.
ஒரு பொய்யை ஷேகர் போன்ற ஆட்கள் உண்மை என இவ்வளவு தைரியமாகச் சொல்லும் போது ஒரு உண்மையை என்னைப் போல் படித்தவன் சொல்லாமல் போனால் பெரும் பாவம் வந்து சேரும்.
மிஸ்டர் ஷேகர் நீங்கள் சொல்வது போல் “வெறும் 35 மார்க்” வாங்கிய எந்த தலித் மாணவனுக்கு மருத்துவர் சீட் கிடைத்துள்ளது. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். இந்த பதிவை நான் பப்ளிக் மோடில் உங்களுக்காக‌ ஓப்பனாகவே வைத்துருக்கிறேன்.
தமிழக அரசின் மருத்துவப் படிப்பிற்கான 2016 ஆம் ஆண்டின் கட் ஆப் மார்க் மதிப்பெண்ணை இணைத்திருக்கிறேன். மீண்டும் இங்கே தருகிறேன். கண்ணில் ஜலம் விட்டுப் பாருங்கள்.

யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு? அனித்தாவுக்காக அலைந்து திரிந்த போராளியை குறிவைக்கும் எதிரிகள்

thetimestamil :இரா. சிந்தன் : தோழர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு கொடுத்த ஆவணங்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? நீங்கள் எப்போது அழைத்தாலும் அவரிடம், அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் கேட்க முடியும். தமிழக கல்விச் சூழலை மேம்படுத்துவதும் – இருக்கின்ற சமூக நீதியைப் பாதுகாப்பதும் குறித்த கவலை எப்போதும் அவரிடம் நிறைந்திருக்கும். தான் தெரிந்துவைத்துள்ள விபரங்களை உடனே சமூகத்துக்குக் கடத்தி, கல்வி குறித்த புரிதலை ஒரு இம்மியாவது முன்நகர்த்திவிட வேண்டும் என்று நினைப்பவர். இதோ நான் பெரிய அறிவாளி என்ற எண்ணம் துளியும் கிடையாது அவருக்கு. ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்களுக்கு தரவுகளை கொடுப்பதை சலிக்காமல் மேற்கொள்வார்.
நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்காக – அனிதாவையும், அவரை ஒத்த பிற மாணவர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்சி அலுவலகமாக அலைந்தார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். கையில் ஒருகட்டு நீதிமன்றத் தீர்ப்பு பிரதியை வைத்திருந்தார். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்பதை கோடிட்டு வைத்திருந்தார்.

நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவ படிப்பை இழந்து விட்டனர் - டாக்டர் எழிலன்

tamil.oneindia.com/authors/mayura-akilan. சென்னை : நீட் தேர்வு அனிதாவின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்றும் நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு மதிப்பெண் முறைப்படி மருத்துவ படிப்பு கவுன்சில் நடைபெற்றதால் 1176 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது< சென்னை அண்ணா நகரில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய டாக்டர் எழிலன் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.

மீண்டும் ஒரு சுதந்திர போர் ... முரசறைந்த கமலஹாசன்

புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் எது சரி, யார் காரணம் என்பதையெல்லாம் பேச நிறைய பேர் இருக்கிறார்கள் நாம்... மக்கள், மாணவர்கள் நீட் விவகாரத்தில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு புள்ள செத்துப் போச்சு... இனி ஒரு புள்ள செத்து கிடப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கை கோர்ப்போம் நமது தமிழ் இனத்துக்குப் பல முறை துரோகங்கள் இழைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கையைப் பிசைந்துகொண்டிருந்தோம். இனி அப்படியில்லாமல் கை கோர்ப்போம்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசை விமர்சித்து காத்திரமான கோபத்தை இதற்கு முன் யாரும் இப்படி வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுந்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக வெடித்துக் குமுறிவிட்டார்.
நீட் தேர்வின் காரணமாகத் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கடந்த சனி அன்று (2.9.2017) நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். நேற்று (3.9.2017) நிகழ்ச்சியை முடிக்கும்போது, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்காக தமிழகம் வெகுண்டெழ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் கமல்ஹாசன்.

உ.பி. ஆக்சிஜன் மரணங்கள் தொடர்கிறது ..மேலும் 49 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் .. விசாரணையில் அம்பலம்

UP Again, 49 Children Die In Hospital Allegedly Due To Oxygen ...
tamithehindu :பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஒருமாதத்தில் 49 குழந்தைகள் இறந்துள்ளன. இந்தப் படம் பிரதிநிதித்துவ்த்திற்காக மட்டுமே.   -  படம். | டிஒய். ரைட்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் ஒரு மாதத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாக 2 மூத்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற மருத்துவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது உ.பி.அரசு.
ஃபரூக்காபாத் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் புகாரின் பேரில் ஃபரூக்காபாத் கோட்வாலி காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு 304 (அலட்சியத்தினால் மரணம் சம்பவிக்கக் காரணமாக இருந்தது) 176 மற்றும் 188 ஆகிய பிரிவுகளில் மூத்த மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர், பிற மருத்துவர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 மூத்த மருத்துவ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதோடு பிற மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு தண்டனை, பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அனைத்து தலைவர்களும் தெரிவித்தனர். அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி பின்னர் மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டத்தை மீறும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் அரசியல் கட்சியோ கட்சியின் பிரதிநிதியோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறியிருந்தது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை முதல் வாகன ஒட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருப்பது கட்டாயம் என லாரி உரிமையாள்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் டிப்பர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இருவேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார். மேலும், இதுகுறித்த மற்றொரு வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வருவதால், செவ்வாய்க்கிழமைக்கு நடப்பு வழக்கை ஒத்தி வைப்பதாகவும், அதுவரை வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கக் கூடாதெனவும் உத்தரவிடப்பட்டது.

நீட் ..... அழிக்கமுடியாத ரத்த கறை . அது உங்கள் பரம்பரையே அழித்து விடும் ..

Venkat Ramanujam : திமுக அனிதாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது தவறு என்றும் .,
நளினி சிதம்பரம் வழக்கை எடுத்தது தவறு என்றும் ., சொல்பர்கள் இரண்டாம் வாதம் ஏற்று கொள்ள தான் பட வேண்டும் ..
ஆனால் அதனால் தான் #neet போச்சுன்னு சொல்றவங்க மத்திய அரசின் அட்வொகட் ஜெனரல் அடித்த பல்டியை மறந்து விடுவதும் ..
மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் வழக்கறிஞர் பேச மாட்டார் என்பதும் ..
அதுவும் பாதிக்கப்படும் இரு சாரார் லிஸ்ட் கொடுங்கள் என்று கேட்ட நிலையில் கொடுக்கிறேன் என்று வந்துவிட்டு அடுத்த நாள் we won't give exclusion to tamil nadu .. we don't give divorce..don't give divorce என்று தெய்வ மகள் அனுஷ்கா போல மத்திய அரசின் வழக்கறிஞர் திரும்ப திரும்ப பேசியதும் ...
#bjp ians #rss ians செலெக்ட்டிவ் அம்னிஷியா நோயால் பிடிக்க பட்டு மறந்து விடுகின்றர் ..
குரான் வாசிக்கும்அப்துல் காலம் கையில் வீணை., கீதை வைத்தவர்கள் எவரோ ..
வேதம் எதிர்த்த கண்ணன் , இந்திரனுக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்து கோகுலத்தை பாதுகாப்பாக மலை சென்று சேர்ந்த கண்ணன்
சொன்ன கீதையில் மக்களை அடிமைப்படுத்தும் மனு வேதம் பேசும் சாதியை நுழைந்தவர்கள் எவரோ ..
அவர்களே இப்போது தாங்கள் செய்த #அனிதா கொலையில் தாங்கள் கையில் படிந்த ரத்தக்கறையை மறைக்க பழியை டெபாசிட் தொலைத்த Seeman மூலம் நளினி மீதும் .,

கிருஷ்ணசாமியின் மகள் முதல்வர் ஜெயலலிதா உதவியுடன் மருத்துவ இடம் பெற்றார் ..Bala Bharathi, Ex.MLA

துரோகியை பற்றிய புது தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவர

ஆரம்பித்துள்ளது . . . .
2015 சட்டமன்றத்தில் டாக்டர்
கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை.அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து
வணக்கம்போட இந்தவணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள ..
டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை.ஆனால் இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி
வருவதுதான் வேதனை. தோழர் பிரின்சு ,எம்எல்ஏ சிவசங்கர் மீது
குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கைபார்க்கிறார்கள்.ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத்தேடிப்பிடித்து அவர் கருத்தைக்
கேட்கிறார்களாம்.கேப்பையில நெய்வடியுதாம்.
- சகோதரி @Bala Bharathi, Ex.MLA

தகுதியற்ற நிர்மலா சீதராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி... மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!

உத்தரப்பிரதேச முதலமைச்சர், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சர் என முக்கிய பதவிகள் வகித்த ராஜ்நாத் சிங்...
1970களிலேயே ஹரியானா மாநில அமைச்சர், பின் டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் சுஷ்மா ஸ்வராஜ்...
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர், மூத்த வழக்கறிஞர் அருண் ஜெட்லி!
இந்த மூவரும்தான் இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்... பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி என்ற முக்கியமான குழுவின் உறுப்பினர்கள். நாடு தழுவிய முக்கிய பிரச்னைகளில் பிரதமர் முடிவெடுக்கும் முன் இந்த கமிட்டியுடன் கலந்து ஆலோசிப்பது வழக்கம். கொஞ்சம் கூட தகுதியற்ற பிரதமர் கொஞ்சம் கூட தகுதியற்ற பாதுகாப்பு அமைச்சர்,...இனி எதிரிகள் பாகிஸ்தானோ சீனாவோஅல்ல ...

அனிதா சட்டம் இயற்றும்வரை போராடவேண்டும் .. ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்

ஸ்டெதாஸ்கோப் இருக்க வேண்டிய கழுத்தில் தூக்குக்கயிற்றை இறுக்கி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் பெயர் பல உணர்ச்சிப் போராட்டங்களைத் தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது.
“இது வெறும் உணர்ச்சிப் போராட்டம் மட்டுமல்ல; அனிதாவின் மரணம் சமூகநீதிப் போராட்டச் சாலையின் மைல்கல்லாக மாற வேண்டும். அதற்கு கட்சிகளைக் கடந்த தமிழகச் செயற்பாட்டாளர்கள் ஒன்று சேர வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் நிரந்தர விலக்குச் சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும். அதற்கு ‘அனிதா சட்டம்’ என்று பெயரிடப்பட வேண்டும்” என்று கோரிக்கைக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
இந்தக் குரல்கள் சாதாரணமானவர்களின் குரல்கள் அல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் போன்ற சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள்தான் இந்தக் குரலை எழுப்பியுள்ளனர்.
இதுபற்றித் தொலைக்காட்சி விவாதங்களில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்,