திங்கள், 4 செப்டம்பர், 2017

100 மார்க் பார்ப்பானும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்
பிச்சைமுத்து சுதாகர்
நாடக மாமேதை “எஸ் வி ஷேகர்” தான் சார்ந்த பார்ப்பன  சமூக மாணவர்கள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக முக நூலில் பதிவிட்டுள்ளார். சரி, அவர் சார்ந்த சமூகத்திற்காக பேச அவருக்கு உரிமை இருக்கிறது என்று யோசித்தால் அப்பதிவில் உலக மகா பொய்யை வடி கட்டாமல் இறக்கி உள்ளார். இதுதான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்துள்ளது.
ஒரு பொய்யை ஷேகர் போன்ற ஆட்கள் உண்மை என இவ்வளவு தைரியமாகச் சொல்லும் போது ஒரு உண்மையை என்னைப் போல் படித்தவன் சொல்லாமல் போனால் பெரும் பாவம் வந்து சேரும்.
மிஸ்டர் ஷேகர் நீங்கள் சொல்வது போல் “வெறும் 35 மார்க்” வாங்கிய எந்த தலித் மாணவனுக்கு மருத்துவர் சீட் கிடைத்துள்ளது. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். இந்த பதிவை நான் பப்ளிக் மோடில் உங்களுக்காக‌ ஓப்பனாகவே வைத்துருக்கிறேன்.
தமிழக அரசின் மருத்துவப் படிப்பிற்கான 2016 ஆம் ஆண்டின் கட் ஆப் மார்க் மதிப்பெண்ணை இணைத்திருக்கிறேன். மீண்டும் இங்கே தருகிறேன். கண்ணில் ஜலம் விட்டுப் பாருங்கள்.


பார்ப்பனர்கள்  வரும் ஓ.சி பொதுப் பிரிவிற்கும் பி.சி பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 0.25. அப்படியே பட்டியல் இனத்திற்கான கட் ஆப் வித்தியாசம் 2.75.
உண்மை இவ்வாறு இருக்க எதற்கு அண்டா பொய் சொல்ல வேண்டும்.
ஆக இடை நிலை சாதிகளுக்கும், பட்டியல் இன மக்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டுவதுதானே உங்கள் நோக்கம் .
அப்புறம் இன்னொரு பதிவில் நீட் தேர்வு கொடுமையால் இறந்து போன அரியலூர் சகோதரி அனிதாவிற்கு “கல்வியைத் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என அட்வைஸ் செய்கிறீர்கள்”.
இதையே ஏன் நீங்கள் சார்ந்திருக்கும் பார்ப்பன  மாணவர்களுக்கு சொல்லலாமே.

எனக்கு தெரியும் உங்களைப் போன்ற பொய்யர்கள் ஒரு நாளும் சொல்ல மாட்டீர்கள். உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும். அதுதானே.

ஷேகர்களின் பலமே கூசாமல் பொய்யை பேசி விட்டு பைனல் டச்சாக ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகனை கோர்த்து விடுவது. நம்மவர்களின் பலவீனமே அதை என்ன ஏதென்று படிக்காமல் அடுத்தவனுக்கு பகிர்வது.
ஷேகர் உங்களைப் போல எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு தெரிந்த தமிழ் மொழியிலேயே சொல்கிறேன்
“படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோன்னு போவான்” ‍ -பாரதியார்.
இப்படி பொய்யாய் புழுகித் திரியும் நீங்கள் ஐயோவென போகும் காலம் வெகு விரைவில் இல்லை. 

கருத்துகள் இல்லை: