திங்கள், 23 ஜனவரி, 2017

நிரந்தர சட்டம், இல்லாவிட்டால் முதல்வர் பதவி விலக வேண்டும்... அலங்காநல்லூர் மக்கள் கிடுக்கிப் பிடி!

மதுரை: ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அலங்காநல்லூரில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில், இன்று சட்டசபையில் சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட இருக்கிறது.  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- வீடியோ அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ00:44 சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ நேற்று தமிழக அரசே பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது. ஆனால், முக்கிய இடமான அலங்கநால்லூர் வாடி வாசலில் நடத்த முடியவில்லை. அரண் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த சென்று இருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

மெரீனாவில் போராடும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாக நொச்சிக்குப்பம் மீனவர்கள்

நந்தன் ஸ்ரீதரன் r · கொடும் வெயிலில் மாணவர்கள் தன்னந்தனியாக மெரீனா கடலருகில் போராடுகிறார்களே என்று பதறிக் கொண்டிருந்தேன்.. இரண்டு மானுடபூர்வமான விஷயங்கள் நடந்திருக்கின்றன.. ஒன்று பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், அயோத்தியா குப்பம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவ மக்கள் புறப்பட்டு மாணவர்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். மீனவப் பெண்கள் மாணவர்களுக்கு அரணாக நிற்கிறார்கள்.. அதே போல கடும் வெயிலில் தண்ணீரின்றி வாடும் மாணவச் செல்வங்களுக்கு போலீசார் தண்ணீர் கொண்டு செல்ல மறுக்கிறார்கள். அவர்களின் தடையை மீறி நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்து மீனவர்கள் படகு மூலம் தண்ணீரும் பிஸ்கட்டுகளும் கொண்டு வந்து மாணவர்களின் பசியையும் தாகத்தையும் போக்கி வருகிறார்கள். அடக்க அடக்க முளைக்கும் தீரத்தோடு முன்னே செல்கிறது எம் தமிழ் மக்களின் போராட்டம்...  முகநூல் பதிவு

ஜல்லிக்கட்டுக்காக டல்லாஸ் (அமேரிக்கா) 1500 தமிழர்கள் மாபெரும் பேரணி…. உண்ணாவிரதம்!


1500 Tamils gather Dallas Downtown for Jallikkattu
டல்லாஸ்(யு.எஸ்) அமெரிக்கா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் நடந்த போராட்டத்தில் 1500 தமிழர்கள் கலந்து கொண்டு மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.
ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் டல்லாஸ் டவுண்டவுண் (நகரின் மையப் பகுதி) ஃபெரிஸ் ப்ளாசா பார்க்கிலிருந்து புறப்பட்ட பேரணி, சுமார் ஒரு மைல் தூரம் நடந்து பயோனியர் ப்ளாசாவை அடைந்தது. பெரிய பதாகைகள் தாங்கியபடி குடும்பம் குடும்பமாக தமிழர்கள் பங்கேற்றனர். ஒரு இடத்தை பேரணி கடக்க 30 நிமிடத்திற்கும் மேலானது.

ஒரு நாள் உண்ணாவிரதம்

பயோனியர் ப்ளாசாவில் திரண்ட தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பீட்டாவை தடை செய்ய வேண்டும், PCA சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

மெரீனாவில் மீண்டும் வெள்ளமென கூடிய மக்கள் கூட்டம் .ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

பள்ளி கல்லூரிகளை புறக்கணித்து ஆங்காங்கே இருக்கும் பெரும் போராட்ட குழுவில் இணையுமாறு அனைத்து மாணவர்களுக்கும் அழைப்பு !.. முறையான வாக்குறிதிகளை கொடுத்து நியாயமாக போராட்டத்தை முடித்து வைக்காமல் காவல்துறையை வைத்து அத்துமீறிய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்போம்...
மெரினா மாணவ மாணவிகள் சுகட்டுப்பாட்டை உடைக்க முடியவில்லை .. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போலீஸ் அழைப்பு .மாணவர்கள் மறுப்பு
சென்னை: தமிழக அரசு, காவல்துறையின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி வருகிறது சென்னை மெரீனா போராட்டம். சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் திரும்பி பெரும் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் மீண்டும் மெரீனா கடற்கறையில் இளைஞர்கள் கூட்டம் ஆக்கிரமித்து விட்டது. தடியடியை தவிடு பொடியாக்கி விட்டனர் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும்.
கிட்டத்தட்ட மெரீனாவை மீண்டும் தங்களது கட்டுக்குள் மாணவர்கள் கொண்டு வந்து விட்டனர். போலீஸார் தடுக்கவோ, தடியடி நடத்தவோ முயலாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அங்குமிங்கும் போய்க் கொண்டுள்ளனர். முன்பு காமராஜர் சாலையையொட்டி நிறைந்திருந்த இளைஞர் படை தற்போது கடலுக்கு வெகு அருகில் நிலை கொண்டுள்ளது. சிதறி ஓடிய அத்தனை பேரும் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இதனால் மீண்டும் மெரீனாவில் இளைஞர் படை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த பதட்டம் சற்று குறைந்து இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் கடற்கரை பரப்பை நிறைத்து அமர்ந்து வருகின்றனர்.
என்னதான் அடித்தாலும், துரத்தினாலும் எங்களது போராட்டம் ஓயாது.. இதுதான் மக்கள் சக்தி.. இதுதான் இளைஞர் சக்தி.. இதுதான் மாணவர் சக்தி.. இதை கலைக்க முனையாதீர்கள் என்பதை காவல்துறைக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது மெரீனா எழுச்சி.  tamiloneindia  முகநூல் பதிவு

ஜல்லிகட்டு போராட்டம் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிரான ஒரு போர் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது

மெரினாஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களை உலகத்தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்...
முகமது யூசுஃப்: அபுதாபி
இங்குள்ள தமிழர்களுக்கு தமிழகத்தில் நடக்கிற ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் மிகப்பெரிய அரசியல் பார்வையை தந்திருக்கிறது. இங்கே மருத்துவத்துறையில் பணியாற்றுகிற நான், இந்த போராட்டத்தை, 'மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு நோயாளி மீண்டும் உயிர் பிழைப்பதைப்போலத்தான்' பார்க்கிறேன். இரத்த அழுத்தத்துக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை மிரட்டி உட்கொள்ள வைக்கிற அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். மாரடைப்பு நேரும்போது செலுத்தப்படும் ஒரு ஊசி ஒரே இரவில்  1500 ரூபாயில்  இருந்து 4500 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நோய்களை  தீர்க்க வந்த தேவதூதனாக தம்மை நிறுவ முயற்சி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும்தான் இந்த நோய்களையே உற்பத்தி செய்கின்றன என்பதே நிஜம்.

அறவழி போராட்ட களத்தை அடிதடிக்களமாக்கிய தமிழக அரசு

அறவழியில் கடந்த 6 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.ஒரு சிறு சங்கடங்கள் கூட ஏற்படாமல், சட்ட ஒழுங்கை மீறாமல் இன்னும் சொல்லப்போனால் போலீசாருக்கே உதவி செய்து கொண்டுபோராட்டத்தை நடத்தினார்கள் ஆனால், அரசு போலீசாரை வைத்து இரவெல்லாம் திட்டம் தீட்டி மக்கள் கூடாத அதிகாலை நேரத்தை பயன்படுத்தி மாணவர்களை வெளியேற்ற முனைவது அவர்களின் அறப்போராட்டத்திற்கு எதிரானது. போலீசாரை சாரை சாரையாக போராட்ட களத்திற்கு இறக்கி வெளியேற்றியது விரும்பத்தக்க செயலும் அல்ல என்று பலரும் இது குறித்து விமர்சிக்க தொடங்கிவிட்டனர். மேலும் தமிழக அரசு ஏற்கனவே ஸ்திரத்தன்மை இழந்து நிற்கும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருத்துகள் வெளியாகி உள்ளது.  லைவ்டே

மாணவர்கள் முடியை பிடித்து இழுத்து பந்தாடும் கோவை போலீசார்


சென்னை மெரீனா கடற்கரையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குண்டுகட்டாக தூக்கி எரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவை வ.உ.சி மைதானத்தின் போராட்டக்களத்தில் தற்போது போலீசார் மிரட்டி, அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து பந்தைப்போல் தூக்கி எரிந்துவருகின்றனர். இந்த சம்பவத்தால் மாணவர்களும் இளைஞர்களும் அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் இழுத்துபிடித்துக்கொண்டு போராட்டத்திலிருந்து வர மறுத்துவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது மீடியாக்களில் லைவ்வாக சென்றுகொண்டிருப்பதால் கோவை பொதுமக்களிடையே போலீசார் மீது அதிருப்பதியை வெளிப்படுத்திவருகின்றனர். லைவ்டே

இப்போது தான் ஆட்டமே தொடங்குகிறது. .. எந்த சட்டமும் நீதித்துறையின் மேலாய்வுக்கு உட்பட்டதே ! கிருபா முனுசாமி

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை யாரும் தடை செய்ய முடியாது என்று தற்போது ஊடக கூட்டத்தில் ராஜசேகரன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவசர சட்டமோ, நிரந்தர சட்டமோ, எப்பேர்ப்பட்ட சட்டமாக இருந்தாலும் அது நீதித்துறையின் மேலாய்வுக்கு (Judicial Review) உட்பட்டதே! யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த சட்டத்தையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். இது மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம், யாரும் குறை கூறாதீர்கள், ஏன் அரசியல் புரிதல் வேண்டுமென்றெல்லாம் பேசிய தமிழர்களே, "இப்போது தான் ஆட்டமே தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா இல்லையா என்பது இனி தெரிந்துவிடும்". அடுத்ததை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!  முகநூல் பதிவு  கிருபா முனுசாமி

பீட்டாவுக்கு எதிராக ..ஜல்லிகட்டுக்கு ஆதரவாக அமெரிக்க பீட்டா தலைமை நிலையத்தில் போராட்டம்

வெர்ஜினியா : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், தடைக்குக் காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியாவிலுள்ள பீட்டாவின் தலைமையகத்தின் முன்று குவிந்த அமெரிக்க வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, பீட்டாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி வருகின்றனர். அங்கு அமெரிக்காவின் 16 மாகாணங்களை சேர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். தினமலர்

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனாவில் குவியும் மக்கள்

சென்னை : சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்நிலையில் மெரினாவில் இருந்து இளைஞர்கள் வெளியேற்றப்படுவது மற்றும் மெரினா போலீசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு வரும் தகவல் தெரிந்து, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மெரினாவில் குவிந்து வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்களையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றளனர். கடைசி வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் சிலர் கடலுக்குள் படகில் சென்று, கறுப்புக் கொடி ஏந்திய போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.தினமலர்

மெரீனாவில் கலைந்து செல்ல மறுக்கும் மாணவர்களை.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியது போலீஸ்

வலுக்கட்டாயமாக வெளியேற்றம் சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியை நடத்தியிருக்கின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
சில தினங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் கடல் அலை பகுதிக்குள் சென்று இணைந்து அரணாக நின்று கொண்டிருக்கின்றனர்.

மெரீனாவில் கடலுக்குள் இறங்கி மாணவர்கள் போராட்டம் - உள்ளே விழுந்து விடுவோம்....

மெரீனா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களை போலீசார் விரட்டியதால் கடலுக்குள் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். போலீசார் அருகில் வந்தால் கடலுக்குள் விழுந்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
Students protest near sea
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்
சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் சென்றனர். தேசிய கீதம் பாடியபடியே தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இளைஞர்கள், பெண்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு கடலுக்குள் நின்றனர்.

அடக்குமுறை ... மெரீனாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது

Venkat Ramanujam 25 mins · All roads leading to marina shut . We are not allowed .. Preplanned cunning cowardly act by police .. shame on you pannir selvam and modi .
இப்போது காவல்துறையினரின் அடக்குமுறையை
கண்டு அஞ்சாமல் கடலில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும்
தமிழ் இளைஞர்களின்
பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

சட்டசபையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் forcibly removed மெரினா மாணவர்களுக்கு அதரவாக சட்டமன்றத்தில் போராட வேண்டும்

இது ஆராஜகம் mr. Ops , mr. Modi You have to answer for attacking /using force against our peacefully protesting assets . Our students .. at marina    முகநூல் பதிவுகள்

ஜல்லிகட்டு போராட்டத்தை முறியடிக்க பலமான சதிவலை... பன்னாட்டு வணிகம் .. இந்துத்வா பயங்கரவாதம் அதிமுகவின் ஊழல் ...


ஜனவரி 8-ஆம் தேதி உழைப்பாளர் சிலைக்கு முன்னால் 50 பேர் துவங்கிய போராட்டம் 50 லட்சம் பேர் பங்குபெறும் அளவுக்கு மாறும் என்பதும். அந்த போராட்டத்தின் உணர்ச்சி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் திரும்பும் என்பதையும் இரு அரசுகளுமே புரிந்து கொள்ளவில்லை. உளவுத்துறையும் கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களில் முடிவை ஆய்வு செய்து, அதன் வழியில் இதுவும் முடிந்து விடும். மக்கள் கூடி கலைந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டது.
சுமார் 9 நாட்கள் வரை இரு அரசுகளுமே இந்த போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை . பொங்கல் விழாவின் இறுதி நாளன்று அலங்காநல்லூரில் காளைகள் விட முடியாமல் போக லட்சோப லட்சம் மக்கள் தமிழகமெங்கும் திரண்டு போராட அரசு விழித்துக் கொண்டது. காவல்துறையை , ராணுவத்தை வைத்துக்கூட இக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது எனும் நிலையில், டெல்லி சென்ற பன்னீர் செல்வம் மோடியிடம் கோரிக்கை வைக்க அவர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவசர திருத்தச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

மெரீனாவில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் இரத்தக்கண்ணீருடன் துரத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று அதிகாலை மெரினாவில் ... மாணவர்களின் மெரினா புரட்சி
ஜனநாயகம் மனிதநேயம் படுகொலை செய்ய பட்டுவிட்டது. மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் இரத்தக்கண்ணீருடன் இதயம் வெந்து துரத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் பாவம் புண்ணியம் என்பது சும்மா அதுவெல்லாம் இருந்தால் மக்கள் கண்ணீருக்கு பதில் சொல்லட்டும்.
மெரினாவில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம் - பதற்றம் மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி கடந்த 17ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடங்கிய போராட்டம் 6 நாட்கள் கடந்து 23ஆம் தேதி 7 வது நாளாக தொடர்ந்தது.போராட்டகார்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடரந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் தமிழக அளுநர் அனுமதியுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. 23ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி மெரினாவில் ஒரு காவல்துறை அதிகாரியையும் பார்க்க முடிய வில்லை. சரியாக விடியற்காலை 3.50 முதல் விவேகானந்தர் இல்லத்தில் காவல்துறை அதிகாரிகள் குவியத்த தொடங்கினார்கள்.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு எதிராக ரகசிய முயற்சி ? வேல்முருகன் ஆவேசம் !

போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க மத்திய,மாநில அரசுகளின் ரகசிய வேலைகள்: வேல்முருகன் ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் கையிலெடுத்திருக்கின்றன. இதற்கான ரகசியவேலைகளை நேற்று இரவிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். இந்த நிலையில், கோரிக்கைகள் 90 சதவீதம் நிறைவேறியிருப்பதாகக் கூறி போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப்பாப் தமிழா ஆதி, ராஜசேகர். ராஜேஷ். அம்பலத்தார் ஆகிய ஐந்து பேர். இவர்களின் பேச்சுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொந்தளிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன், அந்த ஐந்து பேருக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திரா விரைவு ரயில் விபத்து 39 பேர் மரணம் .. பலர் காயம்

ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்- புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டன.

ஹிப் ஹாப் ஆதிக்கு எச்.ராஜா ஆதரவு .பீட்டாவின் கூலிகள் ஆட்சியில் ...



தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தும் ஜல்லிகட்டு போராட்டத்தில் சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர் என்று ஹிப்ஹாப் ஆதி பரபரப்பாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கருத்துக்கு பாரதிய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதியின் கருத்து சரியானது. போராட்டம் தவறாக வழிநடத்தப்படுகிறது. தமிழ் பிரிவினைவாதிகள், முஸ்லிம் வெறியர்கள் மற்றும் தேச எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார். டுவிட்டரில் எச். ராஜா இந்த கருத்தைப்பதிவிட்டுள்ளார்.  லைவ்டே

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு பிறகு ஜல்லிக்கட்டு வரைவு தாக்கல்..

Tamilnadu assembly session start from today சென்னை: இன்று தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு வரைவு தாக்கல் செய்யப்படுகிறது.
2017ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பொதுவாக, கவர்னர் உரையாற்றும் நாளில், வேறு எந்த அலுவல் இடம் பெறாது. ஆளுநர் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை, சபாநாயகர் படிப்பார்.அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவு பெறும். பின், அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத் தொடரை நடத்துவது என, முடிவு செய்யும்.

கனடா டொரோண்டோவில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் ..




ஜல்லிகட்டு .. மக்களின் குரல் முதல் முறையாக ஓங்கி ஒலிக்கிறது ... நந்தினிக்காகவும் இனி ஒலிக்கட்டும்

நந்தினி தமிழ்நாடே ஜல்லிக்கட்டு என்னும் ஒற்றைக் கொள்கைக்காக அணிதிரண்டு பொதுவெளிகளில் காத்துக் கொண்டிருக்கிறது. பசி, தூக்கம், உடமை, சூழல் மறந்து வாடிவாசல் ஒன்றை மட்டுமே எண்ணத்தில் நிறுத்தி இருக்கிறார்கள் கரைகளில் கூடி நிற்கும் மக்கள் கடல். இதுவரை நிகழ்ந்த அத்தனை தனிமனிதக் குற்றங்களும் தவிடு பொடியாவது போல் ”தோழமை என்றால் அது நாங்கள்தான்” என்று ஒன்றாகக் கரம் தூக்கிக் குரல் கொடுக்கிறார்கள். உச்சாணியாக ஆண்களும் பெண்களும் பாலினம் மறந்து கொள்கை பேசி கொள்கை நினைப்பிலேயே உறங்கி கொள்கையுடனே துயிலெழுந்து கோஷம் எழுப்பி வருகிறார்கள். வாடிவாசல் எப்படியும் திறக்கப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கை மக்களுக்குப் பிறந்திருக்கிறது. விவசாயப் பிரச்னை, காவிரி நீர் என ஐந்து நாட்களாக மக்கள் பற்றியே பேசிய நாம் அவர்களுள் ஒருத்தியான இறந்த நந்தினியை மறந்துவிட்டோம்.
மேலிருக்கும் புகைப்படத்தில் இருப்பவள்தான் நந்தினி.குழந்தையென்றும் விவரம் அறிந்தவள் என்றும் கணித்திட முடியாத அப்பாவி முகம். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமம் சொந்த ஊர். வசதியின்மையால் ஒன்பதாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அம்மாவுடன் சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறாள்.

நடிகை ரோகினி : ஜல்லிகட்டு போராட்டகாரர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் ! .. சமுகவலைத் திருவிழாவில் காணமல் போன பெரிய மீடியாக்கள்.. இன்னைக்கு முகநூல்தான் டாப்பு?

Just got back from Marina...The serious protesters are all very clear and strong. Felt proud seeing them handle everyone with respect.Let us not bother about the others....
நடிகை ரோகினி :  நான் இப்பொழுது மெரீனாவில் இருந்து வருகிறேன் . உண்மையான போராட்டக்காரர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நான் பெருமதிப்பு வைத்துள்ளேன்.அவர்களை இட்டு நான் பெருமதிப்பு கொள்கிறேன். ஏனையர்வர்களின் நோக்கங்கள் பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை என்று கருதுகிறேன்.

Vikkranth Uyir Nanban ·:  அடேய் தமிழர்களே... என்னைய கொல்ல பாக்குறீங்களா... பாரதி போட்டோ வெச்சு மீசையை முறுக்குனது ஒரு குத்தமாடா... வட நாட்டோட உங்களுக்கு இருக்குற பல வருஷ பகையை....என்னைய உள்ளே இழுத்து விட்டு சோலிய முடிக்க பாத்தீங்களேடா... இதனாலதாண்டா உங்கள பார்த்து இந்தியாவே  நடுங்குது..

Appar Sundaram:உடும்புப்பிடி புரட்சியால் உயிர்த்தெழும் தமிழகம் - மயிலாடுதுறையில் இருந்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி அதனை போல தமிழன் பல ஆண்டுகளாக நம் சொந்த நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளை அதர்மங்களை தன்னுள் அடக்கிவைத்திருந்த கோபம் இன்று வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. எரிமலை எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும் அது வெடிக்கும் போது எந்த சக்தியாலும் தடுக்கவே முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் யாரோ சிலரின் தூண்டுதலால்தான் நடக்கிறதாம் தினமலரின் கண்டுபிடிப்பு

ஜல்லிக்கட்டு விஷயத்தில்,
மாணவர்களும்; இளைஞர்களும் சிலருடைய கைப்பாவையாக செயல்பட்டு, அரசாங்க நடவடிக்கைகளை ஏற்க மறுப்பது, தமிழக அரசுக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சென்னை, மெரினா கடற்கரையில் அமர்ந்து கொண்டு, வம்படிக்கும் இளைஞர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவுக்கு, தமிழக அரசு வந்துள்ளது.தமிழக அரசு, இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசர சட்டம் கொண்டு வந்து, ஜல்லிகட்டை நடத்த முயன்றபோது, அதை நடக்கவிடாமல் செய்த இளைஞர்கள் மீது, முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் வட்டமும், கடும் அதிர்ச்சியில் உள்ளதோடு, இளைஞர் பட்டாளம் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜல்லிகட்டு போராட்டத்தை ஒத்திவைக்க ஹிப் ஹாப் ஆதி,சிவசேனாதிபதி ,ராஜேஷ் கோரிக்கை

ஜல்லிகட்டு ஆர்வலர்கள் சார்பாக இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டிற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் இசையமைப்பாளர் ஆதி, சிவசேனாதிபதி, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதன் சுருக்கம்.
1) ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.
2) நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிகட்டு சட்டம் நடைபெறும். இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பால் மேல்முறையீடு செய்ய முடியாத அளவு, சட்டம் வலுவாக உள்ளது.
3) ஜல்லிகட்டு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தித் தான் நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டோம். வேறு நோக்கங்கள் எங்களுக்கு கிடையாது.
4) 99 சதவீதம் வெற்றி பெற்றதாக நாங்கள் உணர்வதால், ஜல்லிகட்டை நோக்கமாக கொண்டவர்கள் போராட்டத்தை கைவிடலாம்.
5) ஒரு வேளை மீண்டும் ஜல்லிகட்டிற்கு தடை வந்தால், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்திக் கொள்ளலாம், அதுவரை ஒத்திவையுங்கள்.

போராட்டத்தை அவமானப்படுத்தும் கொலைவெறியோடு இருக்கிறார்கள் பாஜகவினர்

நீ மூடிக் கொண்டு போடா!
Image may contain: 1 person, on stage, standing, sky, crowd and outdoor
இப்படி போராட்டத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டமும் இல்லை. அடக்கப்பட்ட உணர்வுகளின் அரசியல் வெளிப்பாடு. மோடிக்கு கோடிக்கணக்கான மக்களால் கட்டப்பட்ட பாடைதான் மெரினா எழுச்சி! இந்த போராட்டத்தை அவமானப்படுத்தும் கொலைவெறியோடு இருக்கிறார்கள் பாஜகவினர். அந்த திட்டத்தை நிறைவேற்றுக் கொடுக்க முயல்கிறார்கள் சேனாதிபதியும், ஆதியும், ராஜசேகரும். இந்தியாவுக்கு எங்கள் மாணவர்கள் வகுப்பெடுத்திருக்கிறார்கள். வெறும் டெல்லியும். ஜே.என்.யூவும் மும்பையும் மட்டுமல்ல தெற்கில் நாங்கள் நெருப்பாய் இருக்கிறோம். நாங்கள் பெரியாரின் புதல்வர்கள். ஆதியில்லை உனது தாத்தன் பாட்டன் வந்தாலும் எங்கள் உணர்வை பட்டுப் போகச் செய்ய முடியாது எங்கள் மாணவர்கள் எங்களுக்கு அந்த உணார்வை கொடுத்துள்ளார்கள். மீண்டும் கூடுவோம். கோஷமிடுவோம், பீப் சாப்பிடுவோம். மட்டனும் சாப்பிடுவோம் தனித் தமிழ்நாடு வேண்டும் என்போம். இந்தியை உதைப்போம், சமஸ்கிருதம் வேண்டாம் என்போம். கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிப்போம், திரவிட இயக்கதை தோளில் சுமப்போம். நீ மூடிக் கொண்டு போடா!  முகநூல் பதிவு அருள் எழிலன்