ஞாயிறு, 28 நவம்பர், 2010

பீகார் தோல்வி எதிரொலி... நிர்வாகிகளை மாற்றும் ராகுல்!

பீகாரில் கிடைத்த படுதோல்வி, மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்காமல் இருக்க காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றத் திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.

கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நியமன முறையை ஒழித்துவிட்டு தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

முதல் கட்டமாக இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பில் இப்போது நடைமுறையில் உள்ள நியமனப் பதவிகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய ராகுல் காந்தி, கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவர் வினய் தோமர் கூறும்போது, என்.எஸ்.யு.ஐ., இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு நியமன பதவிகள் உள்ளன, அதில் மாற்றங்கள் கொண்டு வர ராகுல் விரும்புகிறார் என்றார்.

"அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்களே அரசியலில் நுழைய முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. நானே இதற்கு சிறந்த உதாரணம். ஆனால், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். சாமானிய மக்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று ராகுல் காந்தி பேசியதாக வினய் தோமர் தெரிவித்தார்.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் உடனடியாக இருக்கும் என்றார் அவர்.

இப்போதைக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை-ராகுல்:

இந் நிலையில் தனக்கு பிரதமர் பதவி மீது இப்போதைக்கு ஆசையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் மாணவ, மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் பிரதமர் பதவி மட்டும்தான் சிறந்த பணியா?. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. நாட்டுக்குச் சேவை செய்வதே எனது குறிக்கோள்.

இப்போதைக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. கட்சியில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அரசியலில் நுழைவதற்கு குறைந்தபட்ச, அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. உடல்சார்ந்த வயதைக் காட்டிலும் மனமுதிர்ச்சி வயதே முக்கியம்.

குஜராத்தில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

திமுக காங்கிரஸ் கூட்டணியை துண்டிப்பவர்களுக்கே நஷ்டம்: கலைஞர்


திமுக காங்கிரஸ் கூட்டணியை துண்டிக்க நினைத்தால், துண்டிப்பவர்களுக்குத்தான் நஷ்டம் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கலந்து கொண்டார். அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, திராவிடர் என்ற இனம் கிடையாது என்று சொல்லப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று புதியக் கட்சி தொடங்கினாலும் திராவிட என்ற வார்த்தையை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நாங்கள் விலக்காமலேயே விலகி சென்றுள்ளன. என்ன குற்றம் செய்தோம் என்பதற்கான காரணத்தைக்கூட சொல்லாமல் ஏன் ஒதுக்கினீர்கள்.

போக்குவரத்துக் கழக தொழிற்சங்க தேர்தலில் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டும் திமுகவைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அமோக வெற்றி அடைந்துள்ளது. இன்றைக்கு மத்திய அரசு மாநில அரசுக்கும், மாநில அரசு மத்திய அரசுக்கும் உறுதுணையாக இருக்கிறது. அதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள்.

இங்கு இருக்கும் சில விஷமிகள் திமுக காங்கிரஸ் உறவை துண்டிக்க நினைக்கிறார்கள். அப்படி செய்தால் துண்டிப்பவர்களுக்குத்தான் நஷ்டம்.
நம்முடைய இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்த்து நிற்கின்ற சக்திகள். காங்கிரசாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் மதவாதத்தை இந்தியாவிலோ, தமிழகத்திலோ நுழைவதற்கு அனுமதிக்காதவர்கள். நமக்குள்ளே ஒரு பிளவை ஏற்படுத்தினால் மதவாதம் சுலபமாக உள்ளே நுழைய முடியும் என்று, மதவாதத்தினால் மகிழ்ச்சி அடைந்து கட்டிப் புரண்டு கொண்டிருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பொன்னான சந்தர்ப்பமாக கருதி உள்ளே நுழைந்துவிடுவார்கள்.

ஸ்பெக்டரம் பிரச்சனையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். நாடாளுமன்றம் பேசுவதற்கான இடம். கூச்சம் போடும் அவை அல்ல. ஆ.ராசா மீது கூறப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரம் இத்தனை பெரியதாவதற்கு என்ன காரணம். அவர் ஒரு தலித் என்பதால்தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வாய்தா மேல் வாய்தா வாங்கப்பட்டு வரும் இந்த வழக்கை ஏன் பத்திரிகைகள் பார்க்கக் கூடாது என்றார்.

ஸ்பெக்ட்ரம்; இது ஆரிய-திராவிட யுத்தம்:கலைஞர் பேச்சு



வேலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் கருணாநிதி,   ’’ ராசா பற்றி பாராளுமன்றத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கூச்சல் போடுவற்கு பாராளுமன்றம் சந்தை அல்ல. அது கூடி பேசும் இடம்.

ராசா ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் அமைதியாக நடக்கும் என்றதால் ஜனநாயக முறையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு குழு விசாரணை வேண்டும் என்றார்கள்.
முந்த்ரா ஊழலில் மத்திய மந்திரி கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அறிவுரையை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். அதோடு கூச்சல்-குழப்பம் நின்று விட்டது. விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் எழுத கை ஓடவில்லை.

ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா?.

எனது அரசில் உமாசங்கர் மீது புகார் வந்ததும் விளக்கம் கேட்டோம்.

கம்யூனிஸ்டும், அ.தி.மு.க.வும் சேர்ந்து உமாசங்கர் தலித் என்ற காரணத்தால் அவரை கருணாநிதி ஒழிக்க பார்க்கிறார் என்றார்கள். அவரை ஒழிக்கவில்லை. விலக்கி வைத்தோம். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கியது கருணாநிதிதான்.

இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவில் அதற்கு ஏற்ப திமுக முடிவு செய்யும். இந்த அளவுக்கு வெறியாட்டம் போடுகிறார்கள். இதில் எத்தனை லட்சம் கோடி ஊழல் என்பதை நிரூபிக்க முடியுமா.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இன்னும் தீர்ப்பு கூறப்படவில்லை. இன்னும் எத்தனை வாய்தா வாங்குவார்களோ தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்தும் அதை வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்கள்.

1972-ம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிட யுத்தம் என்றார். இப்போது அரசியல் ரீதியாக இந்த போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது.

திராவிட ஆட்சியில், அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க, எதிர்கால சமுதாயத்தை காக்க, நாம் வைத்திருப்பது ஒட்டு மீசை இல்லை என்பதை நிரூபிக்க, தமிழ்நாட்டில் இன்னும் ஓரணியில் திரள தி.மு.க. கை உயர்த்தி உள்ளது. அதில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கைகோர்த்து எழுச்சிபெற்று ஆரிய சூழ்ச்சியை ஒழிப்போம்’’என்று பேசினார்

மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். டக்ளஸ்

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா யாழ் மக்களுக்கு டக்டர் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தேவானந்தா அங்கு அதியாக கலந்திருந்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தமிழ் மக்களுக்கு கிடைத்ததோர் வரப்பிரசாதம் என புகழாரம் சூட்டிள்ளார்.

மேலும் அமைச்சர் அங்கு வந்திருந்த பிரமுகர்களை இவ்வாறு புகழ்ந்தார். இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கௌரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண தூதுவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான தூதுவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள். அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர். அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தூதுவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம்கிருஸ்ணா அவர்கள். உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார். அவரை ஈழத்தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.

Asif Zardari.பாக் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரியும் இலங்கை வந்தடைந்தார்:


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பையேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரி நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். பாக் ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகத்தான ஏற்பாடுகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்.

இலங்கையில் 3- 4 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆழும் மற்றும் எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துப்பேசவுள்ளார் என தெரியவருகின்றது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் தங்கியுள்ள அதேநேரத்தில் பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் மகத்தான வரவேற்புக்களுடன் விருந்தாளியாக இலங்கையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Written By ilankainet

யாழ். வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் 20 வருடங்களின் பின் மீள்குடியமர்வு



யாழ். மாவட்டம், வலிகாமம் வடக்கில் 20 வருடங்களின் பின்னர் 970 குடும்பங்களைச் சேர்ந்த 3, 448 பேர் தமது சொந்த இடங்களுக்கு நேற்றுத் திரும்பினர்.
இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர்.
மீள்குடியமர்வு நிகழ்வு காலை 8 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து அப்குதியில் மீளக்குடியமரவேண்டிய குடும்பங்கள் நேற்றுக் காலையே கீரிமலையை வந்தடைந்தனர். எனினும் மீள்குடியேற்ற நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கே இடம்பெற்றது.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா பணமும், சிமெந்தும், கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் விடுவிக்கப்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரா வீதி, சேந்தாங்குளம் வீதி, ஆலடி வீதி ஆகியவற்றைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம். என்று அங்கிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்லேஸ்திரி அலன்ரின் உதயன், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஈ.பி.டிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க. கமல், வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ். முரளிதரன், 515 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி எல்.ரெந்தேனியா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றுக் காலை 8 மணியளவில் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்துக்கு பொது மக்கள் சேந்தாங்குளம் பகுதி ஊடாக பஸ்களில் ஏற்றிவரப்பட்டிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்,
உங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து 22 வருடங்கள் தற்காலிக இடங்களில் காத்திருந்ததுபோல இங் கும் சுமார் 5 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
மீள்குடியமர்வு தொடர்பான கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டபோது, தமிழ் மக்களின் மீள்குடியமர்வு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து ஒன்றுபட்டு உழைக்கத் தயார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல தடவை கூறியிருந்தோம்.
போர் முடிவுற்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னம் தேவையில்லை என்பதைப் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளோம். தொடர்ந்தும் இதனை வலியுறுத்து வோம்.
2006ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். அதன் பிரகாரம் மக்களை வெளியேற்றிவிட்டு இராணுவத்தினர் அப்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதென்பது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இன்னும் பல பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடங்கியுள்ளன. அவற்றினையும் நீக்கி மக்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
போரினால் இழக்கப்பட்ட சொத்துக் களுக்கும், அங்கவீனமானவர்களுக்குமான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்து குடியமர்த்துவதுதான் உண்மையான மீள்குடியேற்றம். எனவே இன்று இப்பகுதியில் மீள்குடியேறற்றப்படுகின்ற மக்களின் வாழ்வாதாரம் சகல வழிகளிலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே தமிழ்மக்களின் மனிதாபிமான மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

Raj Rajaratnam.இரகசிய உரையாடல் பதிவுகளை நசுக்கி விடுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டுள்ளதாகவும்

கோடீஸ்வரர் ராஜரெட்ணம் வழக்கில் ஒலிநாடா உரையாடலை விசாரணை செய்ய அனுமதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை

பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கான நிதி நிறுவனமான கல்லியன் குழுமத்தின் ஸ்தாபகரும் கோடீஸ்வரருமான ராஜ் ராஜரெட்ணம் இரகசிய உரையாடல் பதிவுகளை நசுக்கி விடுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டுள்ளதாகவும் அமெரிக்க சமஷ்டி நீதிமன்ற விசாரணையாளர்களுக்கு இது பாரிய வெற்றியெனவும் ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
பங்குப்பரிவர்த்தனையில் முன்கூட்டியே விடயங்களை அறிந்து கொள்வதில் மோசடியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை இடம்பெற்று வருகிறது. உள்மட்ட வர்த்தக திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் மோசடிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒலிநாடாக்களை விசாரணைக்கு வழக்கறிஞர்கள் பயன்படுத்துவதற்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ஹோல்வெல் புதன்கிழமை அங்கீகாரமளித்திருக்கிறார்.
அதேசமயம் அந்த ஒலிநாடாக்கள் பழுதடையச் செய்யப்பட்டுள்ளவையென பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும் நீதிபதி நிராகரித்துள்ளார். இந்த ஒலிநாடாக்கள் 2 ஆயிரத்திற்கும்மேற்பட்ட உரையாடல்களைக் கொண்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொலைபேசியூடாகவே அதிகளவுக்கு இடம்பெற்றுள்ளதாகவும் மரபு ரீதியான விதத்தில்  விசாரணையாளர்கள் முழுமையாக விசாரணை நடத்துவது சாத்தியமில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.  68 பக்கங்களில் நீதிபதி தனது அபிப்பிராயத்தை எழுதியிருக்கிறர்.
பணமுறி மோசடி ,சதி உட்பட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜரெட்ணமும் மற்றொரு பிரதிவாதியுமான செய்திச்சேவையும் 20 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.   இதேவேளை, வர்த்தகர்கள்,  ஆலோசகர்கள்,   வங்கியாளர்கள் மீதான புதிய வழக்குகள் எதிர்வரும் வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த விசாரணையுடன் நன்கு பரீட்சயமான சட்டத்தரணிகள் பலர் தெரிவித்தனர்.
இலங்கையில் பிறந்தவரான ராஜரெட்ணம் 2007 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.    அமெரிக்காவில் பங்குச்சந்தை காப்புநிதியத்தில் இடம்பெற்ற மோசடிகளில் இது பாரியதொன்றென சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.  ராஜரெட்ணமும் செய்ச்சியும் சட்ட விரோத வர்த்தகத்தின் மூலம் 53 மில்லியன் டொலரை இலாபமாக பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழில் உரையாற்றினார்

யாழ்ப்பாணம், அரியாலை நாவலடியில் நேற்று இடம்பெற்ற வீட்டுத் திட்ட அடிக்கல் நடும் நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழில் உரையாற்றினார் யாழ்ப்பாணத்தல் அமைக்கப்படவுள்ள இந்திய அரசாங்கத்தின உதவியுடனான வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இலங்கை மக்கள் சந்தோஷமாகவும் சுகமாகவும் வாழ எமது நாட்டு உதவிகள் கிடைக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதிகள், கல்வி வசதி கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு சற்றுச் சிரமத்துடன் தமிழில் உரையாற்றினார் கிருஷ்ணா.
சில நிமிடம் வரையில் அவர் இந்தப் பேச்சை பேசி முடிந்தார். தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, வன்னிப்போரின் போது இந்திய மருத்துவக்குழு, காயமடைந்த 50 ஆயிரம் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதில் 3000 பேர் வரை கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து ::பாவம் காதல் மன்னன் மாட்டிக்கொண்டார். ஜெமினி தனது வாழ்க்கையில்

ஒரு சாதனையாளனின் புகழைப் பரப்ப இரண்டு விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறுவனம். மற்றொன்று மகன்கள்.ஜெமினிக்கு இந்த இரண்டுமே இல்லை.ஆனால், இந்த இரண்டையுமே முறியடித்து இருக்கிறார்கள் ஜெமினியின் மகள்களான கமலா செல்வராஜ் சகோதரியர்.


தந்தைக்கு மகன் ஆற்றும் பணியை மகள்கள் ஆற்றியிருக்கிறார்கள். தனது தந்தையின் 90 வது பிறந்த நாளை சிறப்பாக எல்லோரும் வியக்கும் வகையில் நடத்தியிருக்கிறார் கமலா செல்வராஜ். ஜெமினியின் வாழ்க்கையை ஆவணப்படமாக்கி அதையும் தமிழக முதல்வர் கலைஞர் கையால் வெளியிட்டும் இருக்கிறார். இதை மகன்களாலும்கூட இத்தனைச் சிறப்பாய் செய்திருக்கமுடியாது. அதை இந்த மகள்கள் செய்திருக்கிறார்கள். ‘பெண் பிள்ளை பெற்றால் எல்லாம் போகும், ஆண் பிள்ளை தான் ஆளும்’ என்று கூறுவதை பொய்யாக்கியிருக்கிறார்கள்.


எந்த ஒரு நடிகனிடமும், “நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டால்”, மருத்துவராக ஆகியிருப்பேன், பொறியாளராக ஆகியிருப்பேன் இப்படி ஏதோ ஒன்றை கூறுவார்கள். ஆனால், நடிக்கவரும் முன்பே ஜெமினி கணேசன் ஒரு பட்டதாரி. பி.எஸ்.சி வேதியியல் படித்துவிட்டுதான் நடிக்க வந்திருக்கிறார்.
இப்படி ஒரு நல்ல மனிதர். ஆனால் எல்லோரும் இவரை காதல் மன்னன், பல திருமணங்கள் ஆனவர், பல பெண்களின் சகவாசம் உள்ளவர் என்று எல்லாம் கூறுகிறார்களே அது ஏன் என்று யோசித்ததுண்டு.

அப்போதுதான் எனக்கொரு உண்மை தெரியவந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள வேண்டும். ஒரு துறையிலேயே முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டவர்கள் மனது இறுக்கத்தை போக்குவதற்காக சிலவற்றில் மனதை திருப்புவதுண்டு.


சிலர் புத்தகம் படிப்பர். சிலர் இசை கேட்பர். படம் பார்த்தல், பட்டணம் பொடி, காப்பி, இயற்கை, கஞ்சா, மது, பெண்... இப்படி எதாவது ஒன்றில் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டும்.


இன்று முற்றும் துறந்த சாமியாருக்கும் பெண் துணை கேட்கிறது. ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், சமூகத்திற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைதான் யோசிக்கவேண்டும்.


காதல் சக்கரவர்த்திகள் எல்லாம் தப்பித்துவிட்டார்கள். பாவம் காதல் மன்னன் மாட்டிக்கொண்டார். ஜெமினி தனது வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை. அவர் வெளிப்படையானவர். அதற்கே தனி தைரியம் வேண்டும்.
ஜெமினி கணேசன், கமலை பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியது பற்றி வாலி சொன்னார். கமலை பாலசந்தரிடம் மட்டுமல்ல, சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தி களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைத்தவரே ஜெமினிதான்.


மிகவும் அழகாக நாட்டியம் ஆடக்கூடிய தெய்வநாயகி என்பவரை, இவர் திறமையானவர் என்று திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் ஜெமினி. அந்த தெய்வநாயகிதான் கே.ஆர் விஜயா.
ஜெமினியைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். ஒரு அக்ரகாரத்து வீட்டுப்பையன் இப்படி ஒரு உடல்வாகுடன் திகழ்கிறாரே என்று.


வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் காளை அடக்கும் வெள்ளையத்தேவனாக நடித்திருப்பார். அதே போல் சரஸ்வதி சபதத்தில், கோழை வீரனாக மாறி மல்லனோடு மோதும் காட்சியில் நடித்திருப்பார். அப்போது அந்த மல்லனை அப்படியே தோளில் தூக்கிபோட்டு எறிவார்.
ஜெமியின் தந்தையான ராமசாமி அய்யர் அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் குலத்தவர்களுடனே அதிகம் நட்புறவாடக்கூடியவர். அந்த வகையில் ஜெமினியும் சின்ன வயதில் இருந்தே தேவர்குலத்து சிறுவர்களுடன் பழகியிருக்கிறார். அவர்களிடம் இருந்து வீரத்தையும், உடல் தீரத்தையும் பெற்றிருக்கிறார்.


கல்யாண பரிசு படம் பார்த்து உண்மையில் நான் அழுதுவிட்டேன். அதில் வரும், உச்சக்கட்ட காட்சியில்... தனது முன்னால் காதலியும், தனது மனைவியின் தங்கையுமான கொழுந்தியாளுக்கு கல்யாணம் நடக்கும். அப்போது, தாயில்லாத தனது குழந்தையை கல்யாணப்பரிசாக கொளுந்தியாளிடமே விட்டுவிட்டு தனது அத்தனை சோகத்தையும் தனது முதுகில் காட்டி நடந்து போவார். இதுவரை எல்லோரும் முகத்தில்தான் சோகத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜெமினி, அந்த அத்தனை சோகத்தையும் தன் முதுகில் காட்டியிருப்பார். அந்தச் சோகம் சுமந்த முதுகில்தான் படமே முடியும். அப்படி தனது முதுகிலும் நடிப்பை வெளிப்படுத்திய ஒப்பற்ற நடிகர் ஜெமினி.

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்.ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த  குற்றச்சாட்டை  அரசாங்கம்  நேற்று  நிராகரித்தது.
இனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், நாட்டில் அரசியல் தீர்வு ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.    வரவு செலவுத் திட்டம் மீதான 5 ஆவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும்.
இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது.
நாட்டைத் துண்டு போட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் கைகோர்த்து செயற்படவேண்டும்.
கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தது முற்றிலும் தவறான கருத்தாகும். அவ்வாறு எதுவித குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்களும் இராணுவ முகாம்கள் அமைக்குமாறு கேட்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மத உற்சவம் நடத்த இராணுவம் தடைவிதித்ததாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். எந்த மத அனுஷ்டானத்தையும் நாம் தடை செய்யவில்லை. ஆனால் மத வைபவம் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை படைவீரர்களாக அனுஷ்டிக்க இடமளிக்கமாட்டோம். நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என்றார்.
வடக்கில் திட்டமிட்டு இராணுவ குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும் மங்கள சமரவீர தனது உரையின்போது கூறுனார். அவரின் உரையை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் அடுத்து உரையாற்றினார். இதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறினார்.

மாற்றுக்கருத்துக்கு மண்;டையில் போடுவது தான் தீர்ப்பாக இருந்தது, இந்தப் பாரம்பரியம் புலன் பெயர்ந்த

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்  (பகுதி 1)
ஜோர்ஜ் இ,குருஷ்சேவ் (தாயகம்)
பெருமதிப்புக்குரிய பெரியோர்களுக்கும். பேரன்புக்குரிய நண்;பர்களுக்கும். நீதியின் மேல் பசிதாகமுள்ள ஆர்வலர்களுக்கும் தன்னடக்கத்துடன் கூடிய பணிவான வணக்கங்கள்,
மேடைப்பேச்சு என்பது எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று, சிறுவயதில் பேச்சுப்போட்டிகளில் மனனம் செய்து ஒப்புவித்ததைத் தவிர மேடைப் பேச்சு எதிலும் நான் கலந்து கொண்டதில்லை, மேடைப் பேச்சுக்குரிய சிம்மக் குரலும் எனக்கு இல்லை என்பது என் அனுமானம்,
உண்ர்வுகளைக் கிளப்பி. மெய் சிலிர்க்க வைத்து உசுப்பேத்திய உணர்ச்சி கொப்பளித்த மேடைப்பேச்சுக்கள் தான் இன்றைக்கு எங்களை இந்த நிலைக்கு கொர்;டு வந்து விட்டுப் போயிருக்கிறது, இதெல்லாம் தங்கள் மயிர்க் கூச்செறிய வைக்கும் பேச்சுக்களால் எங்களை தடுத்தாட் கொண்ட இந்த அடலேறுகள். தானைத் தளபதிகள். சொல்லின் செல்வர்களின் கைங்கரியம், கரகோசங்களுக்கும் மாலைகளுக்கும் இரத்தத் திலகங்களுக்குமாக நிகழ்த்தப்பட்ட விடுதலைப் பேச்சுக்களும். விசிலடிகளுக்கான வக்கிர நகைச்சுவையுடனான மாவீரர் தின உரைப் பொழிப்புகளும் என பகுத்தறிவை மறக்க வைத்த பேச்சுக்களை நம்பப் போய் கடைசியில் தன்னுடைய கருத்துக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்க முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கி முனையில் எங்கள் பேச்சுரிமையை இழந்து வாய் முடி மௌனமாக இருக்க வேண்;டிய கட்டாயத்தில் இருந்தோம், இந்த பேச்சுகளால் உந்தப்பட்டு பின்னால் போனதன் விளைபயனை முழுத்தமிழினமும் இன்று அனுபவித்து அதற்கான விலையைச் கொண்;டிருக்கிறது,
நண்பர்களின் வற்புறுத்தலைத் தட்ட முடியாததால் மேடையேறச் சம்மதித்திருந்தேன், பேசவேண்டும் என்ற வேண்டுகோளாக இல்லாமல். பேசுகிறீர்கள் என்று உரிமையோடு சொல்லியிருந்தார்கள், எதைப் பேச வேண்;டும் என்ற நிபந்தனையும் இன்றி. எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்ற எல்லையும் இன்றி அழைத்ததால். தோழர் காஸ்ட்ரோவின் மே தின உரை போன்ற நீண்;ட உரையொன்றுடன் வந்திருக்கிறேன், இது நிச்சயமாக உண்ர்ச்சியூட்டி புலன் பெயர் தமிழா புறப்படழ என்று போருக்கும் அழைக்கும் உரையாக இருக்காது, வழமையான உரை என்பதை விட. ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கும் கருத்துப் போன்ற அமைப்பில் இந்த உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்,
கருத்துக்கள் பற்றி யாழ்ப்பாண்ம் கொண்டிருந்த மனப்பாங்கு பற்றிக் கூற வேண்டும், ஊரோடு ஒத்தோடுகின்ற எவருக்கும் எங்கள் ச்முகத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை, கும்பலோடு கோவிந்தா போடுவது உயிரைக் காப்பதற்கான ஒரே வழி என்பது பின்நாளில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது, மாற்றுக் கருத்துக்கள் என்றால் யாழ்ப்பாண்திற்கு ஒவ்வாத விடயம்,,, அலர்ஜி என்று சொல்லலாம்,
கூட்டங்களில் பின்னால் நின்று கேள்வி கேட்கும்; போது. பேசாமல் ஐயா சொல்றதைக் கேளடா என்று அதட்டுவதற்கு அடியாட்கள் எப்போதும் நிறைய உண்டு, மேடையில் நின்று கருத்துச் சொன்னால். பேசாமல் கீழ இறங்கடா என்று பணிவோடு வேண்டுவதற்கும் ஆட்கள் உண்டு, ஆனால் ஒருபோதும். அவனைக் கதைக்கவிடு. அவன் என்ன சொல்றான் எண்டதையும் கேட்பம்ழூ என்று கேட்பதற்கு எந்தப் பொதுமகனும் துணிந்ததைக் காணமுடியவில்லை, ஒன்றில் கும்பலோடு கும்பலாக தர்ம அடி விழும் என்ற பயமாக இருக்கலாம், சும்மா ஊரோட ஒத்தோடாமல். உவனுக்கு ஏன் தேவையில்லாத வேலைட பிழைக்கத் தெரியாதவன் என்ற தீர்ப்பளிப்பாக இருக்கலாம், அல்லது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண;டாட்டம் என்பது போல. சண;டை பார்ப்பதற்கும் வேடிக்கை பார்ப்பதற்கும் ஆர்வமாகவும் கூட இருந்திருக்கலாம்,
யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைகள் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம், யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு கொடுக்கும் மரியாதை பலருக்கும் தெரிந்திருக்கும், சீதனம் வாங்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால். ச்முக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்த ஒருவனின் முயற்சியைப் பாராட்டாமல். உவருக்கு ஏதும் குறையிருக்குது போல என்று வக்கிரப்படுத்தும் பாரம்பரியம் எங்களுடையது,
மேதகு தேசியத் தலைவரின் நல்லாட்சியில் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாற்றுக்கருத்துக்கு மண்;டையில் போடுவது தான் தீர்ப்பாக இருந்தது, இந்தப் பாரம்பரியம் புலன் பெயர்ந்த நாடுகளுக்கும் பரவி. தாயகம் தடை. தேடகம் எரிப்பு. செந்தாமரை ஆசிரியர் தாக்குதல் என்று போய் சபாலிங்கம் கொலையில் முடிந்தது,
வெளியில வாடா. பாப்பம் என்றும். ஊருக்கு வா. கவனிக்கிறம்ழ என்று பணிவன்புடன் வேண்டுகிற காடையர் கூட்டம் இங்கே மலிவானது, இப்போது வெளியில வாடா என்றவர்களின் தலைக்கறுப்பை வெளியில் கார் முடியவில்லை, ஊருக்கு வந்தால் கவனிப்பதற்கும் ஊரிலும யாரும் இல்லாமல் போய் விட்டார்கள்,
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வது என்பது யாழ்ப்பாண்ச் சிந்தனையில் இருப்பதேயில்லை,
இன்றைய உரையிலும் மாற்றுக்கருத்துக்கள் நிறைய இருக்கும், அது சம்பந்தமான கேள்விகளும் எதிர்க்கருத்துக்களும் எழும், இந்தக் கருத்துக்களையும் கேள்விகளையும் நான் வாசித்து முடியும் வரை பொறுமையாக வைத்திருந்தால். முடிந்த பின்னால் பதிலளிக்க முடியும்,
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்?
புலன் பெயர்ந்த நாடுகளில் அரசியல் ஆய்வாளர்கள் மலிந்திருப்பது போல. எங்களுக்கு ஊரில் நிறைய குஞ்சப்புமார் இருந்தார்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமன்றி. எங்கள் தந்தைமார். பேரன்மாரின் வயதில் இருந்த பெரியோர்கள் எல்லாம் மரியாதை கருதி குஞ்சப்பு என்றே அழைக்கப்பட்டார்கள்;, எங்கள் அண்ண்ன்மார் வயதில் இருந்த இளவட்டங்கள் ஸ்டைலாக குஞ்சி என்று அழைத்துக் கொள்வதுடன். பீடி. வாய்க்குப் போடும் புகையிலை கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்டிருப்பார்கள், வீட்டிலிருந்து புறப்பட்டால். வழியில் கணணர்pல் படுகின்ற குஞ்சப்புகளுடன் பரஸ்பர குசலம் விசாரிப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது, இவர்கள் சிறுதோட்டக்காரர்களாகவும் தோட்டவேலைக் கூலித்தொழிலாளராகவும் முட்டாள்வேலை. அதாவது மேசன்மாருக்கு உதவியாளர்களாகவும் வேலை செய்து கொண்;டிருந்தார்கள், கல்வியறிவின்மை. வறுமை,,, இத்தோடு குடிப்பழக்கம்,,, இதனால் பொருளாதார ரீதியில் வளம் பெற முடியாமல் ஒரு சுற்றுவட்டத்திற்குள்ளேயே இவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்;டிருந்தது,
மாலையானதும் பெரும்பாலும் வெறியில் இருப்பார்கள், அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரரோடு சண்;டைகள் நடக்கும், இல்லாவிட்டால் மனைவிமாருக்குப் போட்டு அடிப்பார்கள், வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் விசயம் தெரியாமல் கை வைக்கப் போய் மகன் மாரிடமும் வாங்கிக் கட்டுவார்கள்,
இவர்களைப் பற்றியெல்லாம் ஊரில் பல்வேறு நகைச்சுவைக் கதைகள் இருக்கும், இன்று கூட. எங்கள் ஊர்க் காரர்கள் சந்தித்துக் கொண்;டால் இந்தக் கதைகளை சொல்லிச் சிரித்துக் கொண்;டிருக்கும் அளவுக்கு புகழ் பெற்ற கதைகள் அவை,
ஒரு குஞ்சப்பு ஒருநாள் தோட்டத்துக்குள்ளால் போன ஒரு பெண்;ணைப் பார்த்து. ஏரிக்கரை மேலே போறவளே. பெண்;மயிலே. என்னருமைக் காதலியே. நில்லு கொஞ்சம் நானும் வாறேன் என்று பாடியிருக்கிறார், தமிழ்ப்படத்துக் கிராமத்தில் வரும் கதாநாயகியாக இருந்தால். பதிலுக்கு புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே. உங்க எண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க என்று பாடியிருப்பார், இது நம்ம ஊர், பெண்; போய் தந்தையிடம் முறையிட்டிருக்கிறார், தந்தையும் தமிழ் படத்து அப்பா மாதிரி அரிவாளைத் தூக்காமல். போய் விதானையாரிடம் முறையிட்டிருக்கிறார், விதானையார் பொலிசாரி;டம் முறையிட்டு. வழக்குப் பதிவாகி விட்டது,
புலிகளின் நீதிமன்றம் அப்போது இருக்கவில்லை, இருந்திருந்தால் தீர்ப்பு குஞ்சப்பு எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்திருந்திருக்கும், எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வராததால் மின்கம்பத் தண்டனை ஊருகு;குள் இருந்திருக்காது, சந்தைக்குப் போகும்போது சுன்னாகத்திலோ. அல்லது தின்னவேலியிலோ அடையாளம் தெரியாமல் சமுக விரோதியாகியிருப்பார், அல்லது பெண்ணின் தந்தை பச்சை மட்டை அடி வாங்கியிருப்பார், நல்ல காலம்,
குஞ்சப்பு குற்றவாளிக் கூண்;டில் நிறுத்தப்பட்டிருக்கிறார், குற்றம் என்ன செய்தேன். கொற்றவனே. குற்றம் என்ன செய்தேன்என்ற பாணியில்,
அரச சட்டத்தரணி கேட்கிறார்,,,

நீ அந்தப் பெண்;ணைப் பார்த்துப் பாட்டுப் பாடியது உண்;மையா

ஓம் ஐயா?

எப்பிடிப் பாடினாய்?

குஞ்சப்பு ஏதோ அரசவையில் அம்பிகாபதி என்ற நினைப்பில் நீதிமன்றத்தில் பாடத் தொடங்கினார்,,

ஏரிக்கரை மேலே என்று,,,

இதுவரையும் பேசாமல் பார்த்துக் கொண்;டிருந்த நீதிபதி கையைக் காட்டி நிறுத்தி விட்டுச் சொன்னார்,,,

25 ருபா குடுத்திட்டுப் போ?

பாட்டுப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் இருக்கிறார், பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், எங்கள் குஞ்சப்பு மட்டும் தான் பாட்டுப் பாடி அபராதம் கட்டியவர்,

இதைப் போல இன்னொரு குஞ்சப்பு இருந்தார், இவர் ஒருநாள் மாலை. ஆட்டுக்கு குழை பிடுங்க மரத்தில் ஏறியிருக்கிறார், மாலை நேரம் என்றாலேயே. குஞ்சப்பு மரண வெறியில் நிற்பவர், றோட்டால் நடந்து போகும் போது கூட. கிடுகுவேலியைப் பிடித்துக் கொண்டு கிழுவ மரத்தோடு வாக்குவாதப்பட்டு;க் கொண்;டிருப்பவர், மரத்தில் ஏறியிருக்கிறார், ஏறாதே ஏறாதே என் கணவா என்ற மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல். தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி மனைவிக்கும் தூசணத்தால் பேச்சுக் கொடுத்து குஞ்சப்பு மரத்தில் ஏறியிருக்கிறார்,

பிறகென்ன குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த மாதிரி. குஞ்சப்பு மரத்திலிருந்து விழுந்து விட்டார், இந்த குறுக்கால போனவனால மனிசர் நிம்மதியா இருக்கேலாது என்று மனைவி அலறிப் புடைத்துக் கொண்;டு ஓடி வருகிறார், அருகில் பொதுக்கிணற்றடியில் குளித்துக் கொண்;டிருந்தவர்கள் ஓடி வருகிறார்கள், கூக்குரல் கேட்டு நீண்;ட தூரங்களில் இருந்தும் ஓடி வருகிறார்கள், ஊரே திரண்;டு வந்தது என்பது போல,

நல்ல காலம், தென்னை மரம் என்றால். நேரடியாக வந்து விழுந்து குஞ்சப்பு முடிந்திருப்பார், அல்லது முள்ளந்தண்;டு. கை. கால் முறிந்திருக்கும், இது கொப்புள்ள மரம், நேரடியாக விழாமல். கொப்புகளில் எல்லாம் அடிபட்டு உள்காயங்களோடு கீழே விழுந்து கிடக்கிறார், சுற்றி வர நி;ற்பவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்;டு போவதா இல்லை. புக்கை கட்ட ஒட்டகப்புலத்துக்கு கொர்;டு போவதாடூ என்று ஓடுபட்டுப் கொர்;டிருக்கிறார்கள், பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குஞ்சப்பு கணணைத் திறந்து பார்க்கிறார்,

அடிபட்டு நொந்து எழும்ப முடியாமல் கிடப்பது குஞ்சப்புவிற்கு பிரச்சனை இல்லை, அவருடைய பிரச்சனை கௌரவப் பிரச்சனை, தன்னுடைய பிழையை. குடிவெறியில் மரத்தில் ஏறிய தன்னுடைய மடத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத கௌரவப் பிரச்சனை, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பிரச்சனை, பெரிசுகள் எல்லாம் என்ன மட வேலை பாத்தனீ என்று தன் முட்டாள்தனத்தை திட்டும் என்ற வெட்கம்,

இந்த அவமானத்தை மூடி மறைத்து. விலாசம் காட்டும் முயற்சியில்,,,கண்;ணைத் திறந்து குஞ்சப்பு சொன்னார்,,,,

விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டன்?

குஞ்சப்பு விளையாட்டு என்று சொன்னது. சீனடி. சிலம்படி. கம்பு விளையாட்டுக்கள், குஞ்சப்புவிற்கு அப்படி ஒரு விளையாட்டும் தெரியாது, தன்னுடைய பிழையை மறைக்க. எடுத்து விட்டு கயிறு அது, பின்னால் நாலைந்து மாதமாய் குஞ்சப்பு நெஞ்சில் புக்கை கட்டியபடி அலைந்தார்,

நண்;பர்களே.

முப்பது வருடங்களாக மோகமும் மையலும் கொண்;டு துரத்தி வந்த ஈழம் என்ற மாயமான். முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்து. கண்ணை;த் திறந்து பார்த்தபடியே ; கிடக்கிறது, பல்லாயிரக்கண்க்கானவர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கிறார்கள், அதை விட அதிகமானவர்கள் அவயவங்களை இழந்து போயிருக்கிறார்கள், லட்சணக்கானவர்கள் சொந்த வீடுவாசல்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் நிhமூலமாக்கப்பட்டு. பொருளாதாரம் இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது, மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிக் கொண்டு வரச் சொன்ன புத்தர் கதை போல இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறான், பொருளாதார ரீதியாகவோ. உறவுகளை இழந்தோ,,,

இதை விட முக்கியமாக. இலங்கை அரசியலில் தமிழர்கள் தலைநிமிர்ந்து தங்கள் உரிமைகளைக் கேட்க முடியாதபடிக்கு புலிகள் நட்டாற்றில் கொண்;டு வந்து தலை குனிய விட்டுப் போயிருக்கிறார்கள், அடுத்த நாற்பது வருடங்களுக்கு தமிழர் அரசியல். யூதர்கள் நாற்பது வருட காலம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தது போல. திக்குத்திசை தெரியாமல் போக்கிடம் தெரியாமல் எதிர்காலம் சூனியமாகிய அரசியல் கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது,

ஆனால். உண்;மை நிலையையும் எங்கள் தவறுகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து. வரட்டுக் கௌரவப் பிரச்சனையாக,,,, குஞ்சப்பு போல,,, விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்;டிருக்கிறோம்,

நண்;பர்களே.

உலகில் இன்று அடிக்கடி பல்வேறு அழிவுகள் நடைபெறுகின்றன, இயற்கை அழிவுகள்,,, புயல். பூகம்பம். வெள்ளம். ஆழிப்பேரலை, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகள்,,, யுத்தம். தொழில் விபத்துக்கள். சுற்றாடல் அழிவுகள், லட்சக்கணக்கான மக்கள் கண்;ணை மூடித் திறக்கும் குறுகிய கால எல்லைக்குள் கொல்லப்படுகிறார்கள், கோடிகணக்கான சொத்துக்கள் அழிகின்றன, லட்சக்கணக்கானோர்கள் அகதிகளாக்கப்பட்டு. நிர்க்கதிக்குள்ளாகிறார்கள்,

ஆனால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் அந்தந்த இனத்தைச் சேர்ந்த படித்தவர்கள் ஒரு வார்த்தையைப் பாவிப்பார்கள்,
We are resilient people.
நாங்கள் இந்த அழிவிலிருந்து மீண்டும் எழுவோம், அழிந்தும் அழிய மறுக்கும் தங்கள் மன உறுதியை வெளிப்படுத்துகின்ற வார்த்தை அது,

இந்த வாரம் பர்மாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சான் Nகியி விடுவிக்கப்பட்டது பற்றி ரொறன்ரோ ஸ்டாரில் வந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்,,,
resilient leader
சிறையில் இருந்தாலும் தன் மன உறுதியைத் தளர விடாமல் உற்சாகமாக இராணுவ அரசுக்கு எதிராக செயற்படுகின்ற தலைவர்,

எங்களுடைய ஆய்வாளர்களும் எழுதுகிறார்கள், பீனிக்ஸ் போல மீண்டு;ம் உயிர்ப்போம், இந்த ஆய்வாளர்களுக்கு பீனிக்ஸ் என்பது ஒரு கற்பனைப் பறவை என்பது தெரியுமோ தெரியாது,

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என. நாங்களும் அழிய மாட்டோம் என்றுதானே இவர்கள் சொல்வதாக சிலர் வக்காலத்து வாங்கக் கூடும்,

அழிவினால் மனம் சோர்ந்து விடாமல். தன்னம்பிக்கையைக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும்
resilence என்ற பதத்திற்கும். மேதாவித்தனத்தைக் காட்டி பேய்க்காட்டுகின்ற பீனிக்ஸ் என்ற பதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்;டு,

முதலாவது அவர்கள் எல்லாம் நாங்கள் இயற்கையிடமோ. இந்தக் காரணிகளிடமோ தோற்று விட்டோம் என்ற உண்;மையை ஏற்றுக் கொண்;டு அந்த அழிவிலிருந்து மீண்;டும் கட்டியெழுப்ப எங்களுக்கு மனவலிமை இருக்கிறது என்று மனம் தளராமல் உற்சாகப்படுத்துகிறார்கள், என்னுடைய எலும்புகளை உடைக்கலாம். ஆனால் என் மன உறுதியை உன்னால் உடைக்க முடியாது என்று இயற்கைக்கும் எதிரிகளுக்கும் சவால் விடுகிறார்கள், ஆனால் நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வது வெட்கக்கேடு என்பது போல. குஞ்சப்பு போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்;டிருக்கிறோம்,

இரண்;டாவது. இந்த பீனிக்ஸ் ஆய்வாளர்கள் சொல்வது எங்கள் தமிழ் மக்களை இல்லை, மீண்;டும் எழுவோம் என்று இவர்கள் சொல்வது புலிகளை, 12 ஆயிரம் பேரோடு தலைவர் காட்டுக்குள் தயாராக இருக்கிறார். திருப்பி வந்து மணியா வேலையைக் கொடுக்கப் போகிறார் என்ற கணமூடி விசுவாசத்தில்?

சுவாமி நித்தியானந்தா போலத் தான் புலி ஆதரவாளர்களும், நித்தியானந்தாவின் காமசாஸ்திர வீடியோ வெளிவருகிறது, இந்தச் சம்பவம் நடந்தபோது நான் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தேன், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது,

தலைவர் கொல்லப்பட்ட போது. வீடியோக்கள். படங்கள் உலகமெல்லாம் சுற்றி வருகிறது, புலி ஆதரவாளர்களுக்கு அதெல்லாம் தெரியாது, காரணம் அவர்களும் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தார்கள்,

சமீபத்தில் ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்,,, ஜப்பானியர்களும் யூதர்களும் போல. யாழ்ப்பார்த்தவர்களுக்கும் பெயர் ஜெ என்ற எழுத்தில் தொடங்குகிறதாம், அதனால் நாங்களும் அவர்களைப் போல சாதனை படைப்போம் என்பது தான் அவருடைய ஆய்வின் சாராம்சம், இதை வாசித்ததும் எனக்கு எரிச்சல் வந்தது, பரதேசி. ஜெகோவாவின் சாட்சிகளும் ஜெ என்ற எழுத்தில் தானே தொடங்குகிறது,

யாழ்ப்பாணத்தவர்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள்
jaffna man என்று குறிப்பிடுவதுண்டு, ஆனால் இந்த ஆய்வாளர் புதிதாக jaffniite என்ற அகராதியில் இல்லாத சொல்லைக் கண்;டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார், ஷியா முஸ்லிம்களை shiites என்பது போல,

கார் வாங்கினால் கொண்டா. ரொயோட்டா. டி,வி வாங்கினால் சோனி மட்டுமே வாங்குபவர்களுக்கு ஜப்பானியர்களோடு தங்களை ஒப்பிடுவதில் குஷி ஏற்படுவதில் சந்தேகம் இல்லை,

கேட்டால். எல்லாரும் வாங்கினம். அப்பிடி எண்;டால் நல்லதாத் தானே இருக்க வேணும். Consumer Reports 
சஞ்சிகை இந்த வருடம் சம்சுங்கை சிறந்த தொலைக்காட்சியாக தெரிவு செய்திருக்கே,,

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, எல்லாரும் வாங்கிறதை வாங்கினால் பிரச்சனையில்லை, எல்லாருக்கும் நடக்கிறது தானே எங்களுக்கும் நடக்கும்,

ஊரோடு ஒத்தோடு, வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையுமே வராது,

ஆனால். தங்களுக்கு கிட்லரால் இழைக்கப்பட்ட இனஅழிப்பு அநீதியை வைத்து தங்களை பாதிக்கப்பட்டவர்களாக இன்றைக்கும் காட்டிக் கொண்;டு. பாலஸ்தீனியர்களை அடக்குகின்ற யூதர்களோடு அடக்கப்பட்டு பாதிக்கப்படும் இனமான தங்களை எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று நீங்கள் தலையைச் சொறியக் கூடும், இங்கே ஊடகங்கள். வர்த்தகங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இங்குள்ள அரசுகள் இஸ்ரேல் பற்றிக் கொண்;டிருக்கும் கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் யூதர்களின் திறமை தங்களுக்கும் இருக்கிறது என்று இவர்கள் காணும் கனவின் எதிரொலி தான் இது,

தற்கொலைப் போராளிகள் என்பதை புலிகளுக்கு முன்பாகவே கண்;டுபிடித்தது ஜப்பான், சக்கரவர்த்திக்காக உயிரைக் கொடுப்பதும். தோல்வியடைந்தால் வயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொள்வதும் வீரம் என உயிர் ஜப்பானுக்கு. உடல் மண்ணுக்கு என்ற சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்ட மாவீரர்களை நிறையக் கொண்;டிருந்தது ஜப்பான், அமெரிக்க போர்க் கப்பல்களை விமானத் தற்கொலைப் போராளிகள் நிர்மூலமாக்கிய நிலை, கடவுளின் அவதாரமாக. சூரிய தேவனாகத் தன்னைக் காட்டிய சக்கரவர்த்தி கடைசி நேரத்தில் மக்களை தற்கொலை செய்யுமாறும். அவ்வாறு செய்பவர்களுக்கு வீரசுவர்க்கத்தில் யுத்தத்தில் போரிட்டு இறந்;தவர்களுடன். மாவீரர்களுடன். சமமான இடம் கிடைக்கும் என்று அறிவித்ததை நம்பி பத்தாயிரம பேர் வரை தற்கொலை செய்திருந்தார்கள், இரண்;டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டு. ஜப்பான் மண்;டியிட வைக்கப்படுகிறது, யுத்தமுடிவில் ஜப்பானிய சக்கரவர்த்தி சரணடைகிறார்;,

தங்கள் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மதித்த சக்கரவர்த்தி அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் வெறும் சம்பிரதாயச் சின்னமாக நடமாடும் அளவுக்கு ஜப்பான் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தது, மன்னிப்புக் கேட்க வந்த சக்கரவர்த்தியை ஜெனரல் மக்ஆதர் சந்திக்க மறுத்து அவமானப்படுத்துகிறார்,

ஆனால். தங்களுடைய புராதன சிந்தனை தங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்து. தங்கள் எதிரியுடனேயே சமரசம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுகிறார்கள், 90கள் வரைக்கும் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருந்தது ஜப்பான், அதாவது தங்கள் அழிவை ஏற்றுக் கொர்;டு அடுத்து என்ன செய்ய வேண்;டும் என்ற பாதையை வகுக்கிறார்கள்,

வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி. அன்னியனே வெளியேறு என்று ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடங்க அவர்களுக்குத் தெரியாதா அவர்களுக்கு என்ன நாட்டுப் பற்றுத் தான் இல்லையா எங்களை விட நாட்டுப் பற்று அதிகமானவர்கள் ஜப்பானியர்கள், வெறும் கனவுகளில் தொடர்ந்தும் வாழாமல். மாவீர உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு. தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றிய ஜப்பானியர்களுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது

யூதர்களை எடுத்துக் கொள்வோம், கிட்லரின் நாசிகளின் இன அழிப்பில் அழிக்கப்பட்டாலும். இன்று மேற்கு நாடெங்கும் பரவி. பொருளாதார ரீதியாக வளர்ந்து. அரசியல் ரீதியான அழுத்தங்கள் மூலமாக தங்களுக்கு என ஒரு நாட்டை அமைத்திருக்கிறார்கள், இன்று அந்த நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க. மேற்கு நாட்டு அரசுகளின் ஆதரவைப் பெற அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்;டிருக்கிறார்கள்,

உதாரண்த்திற்கு ஜெரி ஸ்வாட்ஸ் என்ற கனடிய தொழிலதிபர் ஒனெக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், இவரது மனைவி தான் இன்டிகோ புத்தக விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர், இவர்கள் இருவரும் கனடிய லிபரல்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்காக தங்கள் ஆதரவை மாற்றிக் கொண்;டு கன்சர்வேட்டிவ் அரசுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு நிதி சேகரிக்க உதவி செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள், இதுவரையும் எந்தக் கனடிய அரசும் வழங்காத ஆதரவை தற்போதைய கனடிய அரசு இஸ்ரேலுக்கு வழங்கிக் கொண்;டிருக்கிறது, இதெல்லாம் வெளியில் தெரியாமல் நடத்தப்படுகிறது,

இந்த யூதர்கள் எல்லாம் ரொறன்ரோவில் என்ன மாபெரும் பேரர்pயா நடத்துகிறார்கள் இல்லை. சாலை மறியல் செய்கிறார்களா இங்குள்ள அரசியல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை கற்றுக் கொண்;டு. காதும் காதும் வைத்தது போல வெளியில் தெரியாமல் அதற்குரிய முறைகளில் தங்கள் விருப்பங்களைச் சாதிக்கிறார்கள்,

இவர்களுக்கும் தெருவில் நின்று கூச்சல் போட்டு. எங்களிடம் இரண்;டு லட்சம் வாக்குகள் இருக்கின்றன என்று மிரட்டும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கடவுள் தங்களுக்கு வாக்களித்த பூமி என்று நம்பி. மேற்கு நாடுகளில் வசதியான வாழ்க்கையையும் கைவிட்டு. பாலைவனத்தில் அடிப்படை வசதிகளோடு மட்டும் தங்கள் நாட்டைக் காக்க வேண்;டும் என்ற உணர்வோடு வாழும் யூதர்களுக்கும். எப்படியாவது வெளிநாட்டுக்கு போக வேண்;டும் என்ற கனவோடு திரியும் தமிழர்களுக்கும் என்ன ஒற்றுமை இருகு;கிறது

அவர்களுக்கு மூளை இருக்கிறது, எங்களுக்கு வாய் இருக்கிறது, இது தான் வித்தியாசம்,

ஆனால் இவர்களை விட ஜெகோவாவின் சாட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது, அதிகாலையில் குளிரில் ஆளுக்காள் வேலைக்கு ஓடிக் கொண்;டிருப்போம், சப்வே வாசலில் இரண்;டு சஞ்சிகைகளைக் கையில் வைத்துக் கொண்;டு இரண்;டு நேர் நிற்பார்கள், கவனயீர்ப்பு கேட்டு கடைசி வரைக்கும் அமெரிக்க தூதுவரகத்தின் முன் கொடி பிடித்துக் கொண்;டிருந்த தமிழர்கள் மாதிரி,

காவல் கோபுரம்? தேசியத் தலைவர் பிரபாகரன் எங்கள் காவல் கோபுரம்,

விழித்தெழு? புலிகளை அங்கீகரி,

முடிவு நெருங்கி விட்டது? மனம் திரும்புங்கள்?

யாழ்ப்பாணத்தவர்களுக்கு முடிவு ஏற்கனவே வந்து விட்டாலும் இன்னமும் மனம் திரும்பும் எண்ணம் கிடையாது,

இப்படியாக எவனுமே கவனிக்காமல் தன் பாட்டில் போய்க் கொண்;டிருந்தாலும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது, இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

மத நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கும் இவர்களுக்கும் புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து வருமானத்தைக் கொடுக்கும் தமிழர்களுக்கும் தான் ஒற்றுமை அதிகம்,

இப்படி ஒரு கனவில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்;டிருக்கிறோம், இன்னமும் எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை,


எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், பெரியம்மாவின் மகன், இவனுடைய சகோதரியின் மகளை கடைசிக்கட்டத்தில் தப்பி வரும் போது புலிகள் சுட்டுக் கொன்றது பற்றி தாயகத்தில் எழுதியிருக்கிறேன், இந்த அண்ணன் சுவையான கதைகள் சொல்வான், அதில் ஒன்று இது,

ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் தொண்;டமான் ஒரு சிங்களக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வார், அவர் சேர்ந்ததால் தான் அந்தக் கட்சி வென்றதா இல்லை வெல்லப் போகும் கட்சியுடன் தான் அவர் கூட்டு வைத்துக் கொள்வாரா என்பது தெரியாது, ஒன்று மட்டும் நிச்சயம் தோல்வியடைந்த கட்சி மலையத்தமிழர்களுக்கு அடிக்கும், கலவரம் வெடிக்கும், தோட்ட லயன்கள்,,, வீடுகள் எரிக்கப்படும், மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள்,

அகதிகளாக்கப்பட்டவர்கள் எங்கே போவார்கள் வடக்கில் சூரியன் உதித்தால் மலையகத்தில் சேவல் கூவும், எனவே தங்கள் தமிழ்ச் சகோதரர்கள் தங்களுக்கு தஞ்சம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் புகையிரதத்தில் ஏறி. வந்தாரை வாழ வைக்கும் யாழ்ப்பாணத்திற்கு வருவார்கள்,,, அவர்கள் என்ன யாழ்ப்பாணத்தவர்களா தலை மாற்றி ஜெர்மன் கனடா போக ஆனால் யாழ்ப்பாணத்திற்கு விசா கிடைக்காது, எனவே கிளிநொச்சியில் இறங்கி விடுவார்கள், போவதற்கு இடம் இல்லை, என்ன செய்வது என்பதும் தெரியாது, புகையிரத நிலையத்தில் வாழ்க்கை ஆரம்பமாகும், அருகில் உள்ள மரங்களில் கட்டப்பட்ட ஏணைகளில் பிள்ளைகள் தூங்கிக் கொண்;டிருப்பார்கள், கொண்;டு வந்த சட்டி பானைகளுடன் ஓரமாய் சமையல் நடக்கும்,

அப்போது. வீட்டுத் தலைவர்கள் சுவரில் சாய்ந்து கொண்;டு தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்களாம்,,,

மச்சான். நாம இப்ப என்னா பண்ணிறமுன்னா,,, முதல்ல ஒரு பாதையை அமைச்சிக்கிறம், அங்க வெளியில ஒரு கொட்டிலை கட்டிக்கிறம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் காட்டை வெட்டிறம், அதுக்கு அப்புறமாக நிலத்தைக் கொத்திறம், பிறகென்ன,,, நூறு கண்டுக்கு மொளவாய்க்கண்;டு. நூறு கண்;டுக்கு கத்தரி,, இன்னொரு நூறு கண்;டுக்கு தக்காளி,,, நட்டுக்க வேண்;டியது தான், நம்ம பெண்ண்;டாட்டி. புள்ளைங்களுக்கு என்ன வேலை,, அவங்க தண்ணியைப் பாய்ச்சி. பராமரிச்சிட்டுருப்பாங்க, நாங்க பீடியை அடிச்சிக்கிட்டு வரம்பு வழிய நடந்து கங்காணி வேலை பாத்துக்க வேண்டியது தான்,

அகதிகள், போக்கிடம் இல்லை, தங்கள் கனவு சாத்தியமானதா என்ற விபரமும் கிடையாது, நம்ம யாழ்;ப்பாணி விதானைமார். டி,ஆர்,ஓ விடுவார்களா அனுமதி இல்லாமல் காட்டை வெட்டினால். சட்டவிரோதமாய் காட்டு மரம் தறித்ததற்காக பொலிசைக் கூப்பிட்டு உள்ளே தள்ள மாட்டார்களா

இதைப் போலத் தான் நாங்களும், இவ்வளவு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது, அரசியல் எதிர்காலம் எந்த நம்பிக்கையும் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது,

நாங்கள் இங்கே இருந்து கொண்டு,,,

நூறு கண்;டுக்கு,,, நாடு கடந்த தமிழீழம், நூறு கண்;டுக்கு மக்களவை, நூறு கண்;டுக்குபுடழடியட வுயஅடை குழசரஅ  இன்னொரு நூறு கர்;டுக்கு யுத்தக் குற்ற விசாரணை என்று கனவு கண்;டு கொண்;டிருக்கிறோம்,

எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை, வெறும் கற்பனையில் எங்களை நாங்களே குஷிப்படுத்திக் கொர்;டிருக்கிறோம், அதாவது சுய இன்பம் கண்;டு கொண்;டிருக்கிறோம்,

எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள், கூடை விழுந்தால் எல்லா முட்டைகளும் நொருங்கி விடும், எங்கள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் புலிகள் என்ற கூடைக்குள் வைத்ததால் தான் எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் கண்ப் பொழுதில் தகர்ந்து போனது,

நாங்கள் அடித்த திமிர்க்கூத்திற்கு நடந்த முடிவைக் கண்டு வெட்கப்பட்டு. அவமானம் தாள முடியாமல் எங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நியாயங்களைக் கற்பித்துக் கொண்;டிருக்கிறோம்,

புலிகள் இல்லாட்டி சிங்களவன் தமிழனை அழிச்சுப் போடுவான் என்ற நாங்கள். தமிழர்கள் இன்று தங்கள் பாட்டில் வாழ்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் கொதித்துக் கொண்;டிருக்கிறோம்,

புலிகள் தனியான அரசை நடத்திக் கொண்;டிருக்கிறார்கள், தலைவர் தீர்க்கதரிசி, புலிகள் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள்,,, சரணடைய மாட்டார்கள்,

இப்படியாக மார்தட்டிக் கொண்;டிருந்த நாங்கள் தலைவர் போரில் விழுப்புர்; பட்டு வீரமரணமடைந்தார் என்று மார் தட்ட முடியாமல் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறோம், தலைவர் சரண்டைந்து அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதையும் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரண்டைந்தார்கள் என்பதையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இன்றைக்கு பேச்சை மாற்றிக் கொண்;டிருக்கிறோம்,

காரண்ம் என்ன எங்களுடைய யாழ்ப்பாண மனோபாவம் தான்,

உங்களுக்குத் தெரியும், உயர்தர வகுப்புப் படித்த பின்னால் வேலை தேடும் வரைக்கும் யாழ்ப்பாணப் பெருமகன் வீட்டில் இருப்பார், பொழுதுபோகாமல் நண்;பர்களோடு ஊர் சுற்றப் போவார், சுற்றிப் போட்டு வருபவருக்கு வீட்டில் அர்ச்சனை நடக்கும், கண்;ட கண்;ட காவாலியளோடு சுத்துறான், அதாவது தன்னுடைய மகன் ஒரு அப்பாவி, மற்றவர்களுடைய பிள்ளைகள் தன் பிள்ளையைக் கெடுக்கிறார்கள் என்பது தான் இந்த தாயின் முடிவு, அப்படியானால். அந்த கண்;ட கண்;ட காவாலிகளின் தாய்மார் என்ன சொல்வார்கள்? அந்த படிக்கிற கெட்டிக்காரப் பெடியனை ஏன்டா கெடுக்கிறாய் என்றா சொல்வார்கள் இல்லை, கண்;ட கண்;ட காவாலிகளோட சுத்திறான் என்பது தான் அவர்களின் அர்ச்சனையாக இருக்கும், எல்லாருமே தங்கள் பிள்ளைகள் ஒண்ணும் தெரியாத பாப்பா. மற்றவர்கள் தான் தங்கள் பிள்ளைகளைக் கெடுக்கிறார்கள் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பார்கள்,

சுத்தித் திரிகின்ற தம்பிக்கு காதல் வரும், ஒரு தலைக்காதல் வயதுக் கோளாறால் இருதலைக்காதல் ஆக கூர்ப்படையும், வயதான இருவர்களுக்கு காதல் வந்து விட்டது. பெரியோர்கள் ஒன்று கலந்து பேசி திருமாணமா முடித்து வைக்கப் போகிறார்களா வழமை போல. யாழ்ப்பாணத்தார் லாப நட்டக் கணக்கு பார்ப்பார்கள், பெணணின் அம்மா திட்டுவா,,, ஐயோ. என்ரை பிள்ளையை ஏமாத்திப் போட்டான், தம்பியின் அம்மா திட்டுவா,,, என்ரை பிள்ளையை மயக்கிப் போட்டாள்,

இது நாங்கள் எங்கும் பார்க்கிற வழமையான விடயம், யாருமே தங்கள் தரப்பில் தவறு இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை,

புலிகள் என்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் செல்லம் கொடுத்துக் கெடுத்த. தறுதலைப் பிள்ளை, மற்ற இயக்கங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள், இதனால் தான் தங்கள் பிள்ளைகளின் தவறைக் கண்;டும் காணாமல் பெருமை பேசித் திரிந்ததுடன். மாற்றாந்தாய் பிள்ளைகளை கேவலமாக நடத்தினார்கள், அவர்களையும் தங்கள் பிள்ளைகளாக இவர்கள் கணக்கெடுத்ததேயில்லை, மாற்று இயக்கங்களில் இருந்து வந்த நண்;பர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்,

எனவே இந்த அழிவு வந்ததும் நாங்கள் செய்த முதல் வேலை என்ன யாரில் பழியைப் போடலாம் என்று ஆள் தேடிக் கொண்;டிருக்கிறோம்,

ஐ,நா. பான் கி மூன். நோர்வே. எரிக் சொல்கெய்ம். அமெரிக்கா. ஒபாமா. இந்தியா. சோனியா. கருணாநிதி,,,, டக்ளஸ். கருணா,,, கே,பி, பிராந்திய அரசியலில் மட்டுமல்ல. சர்வதேச அரசியலிலும் சம்பந்தப்பட்ட எல்லாரையுமே நாங்கள் துரோகி என்றிருக்கிறோம், நல்ல காலம் புலிகள் மக்களை வெளியேற அனுமதித்து பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்;டும் என்று தலாய் லாமா சொல்லியிருந்தால் அவரையும் எளிய பிக்கு. சிங்கள பௌத்தனுக்கு சைட் பணண்pறான் என்று நாங்கள் திட்டியிருப்போம்,

ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்டாமி வுயளவந ழக உhநசசல  ஒரு படத்தை இயக்கியிருந்தார், சங்கரும் எந்திரனும் மாதிரி உலக அளவுக்கு பெரும் புகழ் பெறவில்லை, இந்தப் படம் பிரான்சி;ன் கான் பட விழாவில் தங்க இலை விருது பெற்றது, அதில் ஒரு வர்த்தகர் தற்கொலை செய்ய விரும்புகிறார், இதற்காக ஒரு புதை குழியையும் வெட்டி விட்டு. தற்கொலை செய்த தன் உடலைப் புதைப்பதற்கு ஆள் தேடித் திரிகிறார், இப்படி ஒரு வயதானவரைச் சந்தித்து அவரைக் காரில் ஏற்றிக் கொண்;டு தன்னுடைய திட்டத்தை விளக்கும் திட்டத்தில் கூட்டிக் கொண்;டு போகிறார், அப்போது அந்த வயதானவர் ஒரு ஜொக் ஒன்று சொல்வார்,

ஒவ்வொரு பிராந்தியத்திலும் இன்னொரு இனத்தவரை முட்டாள்கள் என்று மட்டம் தட்டி கேலிக் கதைகள் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும், கனடாவில் நியுபவுர்;ட்லாந்துக் காரரைக் கிண்;டல் அடிப்பார்கள், இங்கிலாந்தில் ஸ்கொட்டிஸ்காரரைக் கேலி செய்வார்கள், இந்தியாவில் சீக்கியர்களைக் கிண்;டல் செய்வார்கள், வழமை போல. அதிபுத்திசாலிகளான தமிழர்கள் தங்களைத் தவிர எல்லாரையும் முட்டாள்கள் என்பார்கள், இந்த பட்டியலில் மோட்டுச்சிங்களவர்கள். மலையகத்தினர். முஸ்லிம்கள் மட்டுமன்றி. ஏழாலையார். தீவார்கள் என நிறையப் பேர் இருப்பார்கள், இதே போல. அரேபிய நாடுகளிலும் துருக்கியர் பற்றி கிண்;டல் கதைகள் உள்ளன, அரேபிய நாடுகளை துருக்கியரின் ஒட்டோமான் சாம்ராஜ்யம் அடக்கி வைத்திருந்ததால் வந்த கோபமாகக்கூட இருக்கலாம்,

இந்தப்படத்தில் அந்த வயதானவர் சொல்லுகின்ற கதை இது தான்,

ஒரு துருக்கியர் டொக்டரிடம் போனராம், போய் சொன்னாராம்,,, டாக்டர். எனக்கு மூக்கைத் தொட்டால் நோகிறது, வயிற்றைத் தொட்டால் நோகிறது, முழங்காலைத் தொட்டால் நோகிறது, முதுகைத் தொட்டால் நோகிறது, உடம்பில் எங்கே தொட்டாலும் நோகிறது,

டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னராம்,,, உனக்கு ஒரு இடமும் நோவில்லை, உன் சுட்டுவிரலில் தான் நோ இருக்கிறது என்று,

நாங்கள் உலகத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் துரோகமிழைத்து விட்டார்கள் என்று பெரும் பட்டியலே போடுகிறோம், யNகி அகாசியை மட்டுமல்ல. அசினையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை, ஆனால். எங்களில் தவறு இருக்கும் என்ற உண்மையை நாங்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை, யார் மீதாவது பழியைப் போட்டு. அவர்கள் துரோகம் இழைக்காவிட்டால் எங்களுக்கு ஈழம் கிடைத்திருக்கும் என்று பிதற்றிக் கொண்;டிருக்கிறோம்,

அமெரிக்கா. நோர்வே. ஐரோப்பிய சமுகம். இந்தியா. ஜப்பான். சீனா என்ற நாடுகளும் பான் கி முன் தொடக்கம் சொல்கெய்ம் வரைக்கும் துரோகம் இழைக்காவிட்டால் தலைவர் தமிழீழத்தைப் பெற்றிருப்பார் என்று எங்கட பிள்ளையைக் கண்;ட கண்;ட காவாலிகளும் கெடுத்துப் போட்டாங்கள் என்று பழியைப் போடுகிறோம், இவ்வளவு பேரும் ஆதரவு தந்தால் தான் தமிழீழம் கிடைக்கும் என்றால் அதற்கு தேசியத் தலைவரா வேண்;டும் அதை யாழ்ப்பாண்த்தில் பஸ் ஸ்ராண்;டில் சுவீப் டிக்கட் விற்ற வைரமாளிகையால் கூட பெற்றிருக்க முடியும், ஏனென்றால். வைரமாளிகைக்கு கொஞ்சம் இங்கிலிஸ் பேசத் தெரியும்,

இவ்வாறான தடைகளையும் மீறி இலட்சியங்களை அடைவதற்குத் தானே நாங்கள் தலைவர்களைத் தெரிவு செய்து ஆதரவு வழங்குகிறோம், தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் என்றால் இப்படி எல்லாம் அனாவசியமாக உயிர்ப் பலி கொடுத்து எதற்காகப் போராட வே;ணடும் இப்படி மற்றவர்கள் மீது நொண்;டிச்சாட்டுச் சொல்லவா இவர் தன்னை தேசியத்தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொர்;டிருந்தார்


இந்தத் தோல்வியின் இரண்டாவது கட்டமாக நாங்கள் எங்களைத் தோற்கடித்த ராஜபக்ச மீது தாங்கமுடியாத கோபத்தில் இருக்கிறோம்,

நீங்களும் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளைக் கண்;டிருப்பீர்கள், இளவட்டங்கள் சில நேரங்களில் பெண்; பிள்ளைகளோடு சொறிச் சேட்டைகளில் ஈடுபடுவார்கள், ஒரு தலைக்காதல் சேட்டைகள், சில நேரங்களில் விசயம் தெரியாமல் பெணணின் அண்ணன்மாரிடமோ. அல்லது அந்தத் தெருவில் உள்ள மற்ற போட்டிக் காதலர்களிடமோ மாட்டிக் கொண்;டு அடி வாங்குவார்கள், அதிலும் மிகவும் அவமானமானது. அந்தப் பெணணின் முன்னால் அடி வாங்குவது,

அடி வாங்கியவருக்கு உலகத்தில் இல்லாத கோபம் வரும், பெணணின் முன்னால் அடி வாங்கிய அவமானம், பழி வாங்க வேண்;டும் என்று துடித்துக் கொண்;டிருப்பார், திருப்பி அடிக்க தனக்கு திராணி இருக்காது, யாரையாவது பிடித்து பழிவாங்க வேண்;டும் என்று அலைவார், இத்தனைக்கும் இப்படி தேவையில்லாமல் அந்தப் பெண்;ணோடு சொறிச் சேட்டை விட்டது தன்னுடைய பிழை என்பதை இவர் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்,

இன்றைக்கு தமிழர்களின் ராஜபக்ச மீதான மனநிலையும் இவ்வாறானது தான், எங்களை அவமானப்படுத்தி விட்டான், அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் விடக் கூடாது, எந்தச் சண்;டியனைப் பிடித்து என்றாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் இன்றைக்கு பலரும் துடித்துக் கொண்;டிருக்கிறார்கள், இது கிட்டத்தட்ட ழடிளநளளழைn  என்ற நிலைக்கு வந்து விட்டது, யுத்தக் குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்பது முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் குழப்ப வேர்;டும் என்பது வரைக்கும் நாங்கள் முறுகிக் கொண்;டு நிற்கிறோம்,

இலக்கிய நர்;பர்கள் வாசித்திருப்பார்கள், சுந்தர ராமசாமியின் ஜெ,ஜெ சில குறிப்புகள், இதில் ஜெ,ஜெ ஒரு இலக்கியப் பிரகிருதி பற்றிச் சொல்வான்,,, அவனுடைய நிலைப்பாட்டை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்று, அதாவது அவனுக்கு என்று சொந்தமான நிலைப்பாடு எதுவும் இல்லை, அவனது எதிரிகள் எடுக்கும் நிலைப்பாடு எல்லாவற்றுக்கும் எதிரான நிலைப்பாட்டைத் தான் இவன் எடுப்பான் என்று,

இந்த ழடிளநளளழைn இன்று எந்த அளவில் வந்து நிற்கிறது எங்களுடைய அரசியலை இவ்வளவு நாளும் பிரபாகரன் நிர்ணயித்து வந்தது போய். இப்போது மகிந்த தீர்மானித்துக் கொண்;டிருக்கிறார்,

சரத் பொன்சேகாவை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரித்து. அவரது மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து நாங்கள் கணண்Pர் விடுவதில் வந்து நிற்கிறது, பிரபாகரனைக் கொன்றது நான் தான். ராஜபக்ச அல்ல என்று சிங்கள இனவாதிகளின் வாக்குகளை எடுப்பதற்காக சொன்ன ஒருவரை. தமிழர்கள் சம உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் என்று கருத்துச் சொன்ன ஒருவரை. எங்கள் எதிரி மீதான கோபம் காரணமாக. எதிரிக்கு எதிரி நண்;பன் என்றும் முள்ளை முள்ளால் எடுக்க வேர்;டும் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்;டு ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறோம்,

எங்களுக்கு அடித்து விட்டான் என்று நாங்கள் பழி வாங்க கூலிக்கு அழைக்கும் சண்;டியன் எங்களிடம் தொடர்ந்து கப்பம் கேட்பான் என்ற உண்;மை எங்களுக்குத் தெரியாத படிக்கு எதிரி மீதான கோபம் கண்;ணை மறைத்து விட்டது,

ராஜபக்ச ஒன்றும் புனிதர் இல்லை, ஆனால் ராஜபக்ச மீது மட்டும் கோபம் கொள்வதன் காரணம் என்ன

ராஜபக்சவை யதார்த்தவாதி என்று புகழ்ந்தது யாh எழுபது கோடி ்ருபா வாங்கி தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது யார்  இவர்கள் சொல்லலாம், தாங்கள் பணம் வாங்கியதாக புலிகள் சொல்லவில்லையே என்று சப்பைக்கட்டு கட்டலாம், கீழ் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்று தமிழ்ச்செல்வனே ஒப்புக் கொண்;டிருந்தார், எனவே புலிகள் புனிதர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்,

ரண்pலை விட. மகிந்த ஒரு லட்சத்து எண்;பதாயிரம் வாக்குகளால் மட்டுமே வென்றார், யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க விட்டிருந்தால் ரணில் ஜனாதிபதியாகி இருப்பார் என்பது தெரிந்த உண்;மை, எனவே. மகிந்த ஜனாதிபதியானதற்கு காரணம். புலிகளே, புலிகள் மட்டுமே, புலிகளின் உதவி இல்லாமல் மகிந்த பதவிக்கு வந்திருக்கவே முடியாது, புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்தது, எனவே தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்று மதித்த ஒருவர் மீது இவர்கள் கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது

புலிகள் கொள்கையை விட்டு விலகாதவர்கள். அவங்கள் ஈழத்தை கடைசி மட்டும் விடேலைத் தானே என்று தம்பட்டம் அடிக்கும் நாங்கள் புலிக்கும் ஒரு விலை இருக்கிறது. அது விலை போகும் என்பது மட்டுமல்ல. தமிழினத்தையும் விலை பேசி விற்கும் என்ற உண்;மையை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்

நீங்கள் சொல்லலாம், ஒப்பந்தம் இருந்தது உண்மை, எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம், மகிந்த தான் வாக்குறுதியை மீறித் துரோகம் இழைத்து விட்டார் என்று,

புலிகள் ஒப்பந்தம் செய்த ஒவ்வொருவரையும் என்ன செய்தார்கள் என்ற வரலாறு எங்கள் கண்; முன்னே நிற்கிறது, இந்தியாவோடு புரிந்துணர்வோடு இருந்தார்கள், பிரேமதாசாவோடு புரிந்துணர்வுடன் இருந்தார்கள், சந்திரிகாவோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனால் அவர்களைக் கொலை செய்த விவகாரங்கள் மகிந்தவுக்கு தெரிந்திருக்காதா புலிகள் எந்தக் காலத்தில் செய்த ஒப்பந்தங்களுக்கு உண்;மையாக இருந்தார்கள் நோர்வேயில் சமஷ்;டிக்கு சம்மதம் என்று கையெழுத்து வைத்து விட்டு வந்து ரணிலின் காலை வாரியதில் இருந்து தானே புலிகளின் அழிவு ஆரம்பிக்கிறது,

மகிந்தவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய பெருமை புலிகளைச் சாருகிறது, சிங்கள இனவாதிகளை நம்பக் கூடாது என்று. அரசுடன் தொடர்பு கொண்;ட சகலரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி மண்டையில் போட்ட புலிகள் என்ன நம்பிக்கையுடன் மகிந்தவை நம்பினார்கள் மகிந்த என்ன ரணில் போல பச்சோந்தி வேடமா போட்டார் தான் சிங்கள இனவாதி தான். சிங்கள இனவாதிகளின் ஆதரவுக்காக எதையும் செய்வேன் என்று பகிரங்கமாகத் தானே அரசியல் நடத்தினார். தமிழருக்குப் பிரச்சனை இல்லை என்று தீர்வு கிடைப்பதைச் சகல வழிகளிலும் தடுத்த ஜெ,வி,பி. உறுமயவுடன் தானே கூட்டு வைத்தார் இதி;ல் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது

மகிந்தவை தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்ற போது. மகிந்த ஒரு இனவாதி. இனவாதியை நம்பி அரசியல் நடத்துவது ஆபத்தில் முடியும் என்று எந்த ஆய்வாளர். எந்த ஊடகவியலாளர் தலைவருக்குப் புத்திமதி சொன்னார்

தவறு மற்றவர்களில் அல்ல. உங்களிடம் இருக்கிறது, உங்கள் நுனி விரலில் தான் நோ இருக்கிறது,

புலிகள் விட்ட தவறை மறைத்து. மகிந்தவை எப்படியாவது அவமானப்படுத்தியே ஆக வேண்;டும் என்ற வெறியில் எங்கள் இனத்தின் எதிர்காலத்தை சிந்திக்க மறந்து விடுகிறோம், இன்றைக்கும் தமிழ் ஊடகங்கள்,, பத்திரிகைகள். வானொலிகள். இiர்யத்தளங்கள்,,, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களைச் செய்யத் தொடங்கி கால் ஊன்றத் தொடங்குகிறார்கள் என்ற உண்;மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன, இன்றைக்கும் வெள்ளைவான் கடத்தல். கற்பழிப்பு என்று கதை விட்டுக்கொண்;டிருக்கிறார்கள், அங்கே போய் வந்தவர்கள் எல்லாம் அங்கே மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் இல்லை
,
(தொடரும்)

விற்பனர்களே…!! மாவீரர்களை விற்காதீர்கள்…!!!

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

மாவீர்களும்… விற்பனர்களும்…
 மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.
 ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராடடம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ… அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி… துயரும் வேளைஇ புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்… ஓர் மாவீரர் திருவிழா…!!!
 தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை… புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு… ஓர் மாவீரர் திருவிழா…!!!
 தாயகத்தில் தாம் பெற்ற பிள்ளைகளின் சம்பாத்தியத்தை காணாமல்… தம் புருஷர்களின் சம்பாத்தியத்தை காணாமல்… பிள்ளைகளின் தாய்மார்… கணவனை இழந்த விதவைகள் துன்பத்திலும்… துயரத்திலும்… பாதுகாப்பில்லாமல்… ஏழ்மையில்… ஏங்கித் தவிக்கும்போது… புலம் பெயர்ந்த நாடுகளிலோ டீஆறு… ஐNகுஐNஐவுஐ… டுநுஓருளு… ஓடுவதற்கும் பட்டாடைகள் உடுத்துவதற்கும் மாவீரர் பெயரால் விழாவெடுத்து வருவாய் தேட… ஓர் மாவீரர் திருவிழா…!!!
 மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல…!!!
 புலம் பெயர் நாடுகளில் மாண்ட பினாமி வீரர்களே… 2008  மட்டும் மாவீரர் கணக்கு சொல்லி மாவீரர் திருவிழா எடுத்தவர்களே… 2009  இலிருந்து கணக்கு எங்கே…???
 நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்டவர்களை மாவீரர்களாக்கிய… நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை மாவீர குடும்பம் என்ற நாமத்தில் அழித்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
 தன்னை மகா மாவீரனாக்காமல் தப்புவதற்கு நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட அப்பாவி குழந்தை… கர்ப்பிணித் தாய்மார்கள்… முதியோர்…என்று கிளிநொச்சி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மட்டும் நாலாம் கட்ட போர் என்று பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
தன்னை சூரிய தேவனாக காட்டுவதற்கு  பற்குணம் மைக்கேல் தொடக்கம் தோழர் சுபத்திரன் பாறுக் தோழர் வரை நாலாயிரத்திற்கு மேற்பட்ட  மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள் மட்டுமல்லாமல்… சகோதரி ரஜனி தினரகமஇ செல்வி தொடக்கம் சரோஜினி யோகேஸ்வரன் மகேஸ்வரி வரை  எமது தாய் நாட்டின் தாய்க் குலத்தை பலி எடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
 மண்ணை மீட்கும் போர்… தாயக விடுதலைக்கான போர் என்று தன்னை தானைத் தலைவனாக நிலை நிறுத்தி… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்தவர்களின் நாமத்தால் மாவீர் உரை என்று ஓர் உரை வாசிக்கும்… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
 நாலு பேர் என்று தொடக்கி… நாற்பது பேராக பண்ணையில் பயிற்சியெடுத்து… நாலாயிரம் பேராக அந்நிய மண்ணில் பயிற்சியெடுத்து… நாற்பதினாயிரம் பேரை மாவீரராக்கி…  மேலும் நாற்பதினாயிரம் பேரை நாற்பது நாட்களில்… தான் சயனைட் விழுங்காமல் தன் உயிரை காப்பற்றுவதற்க்காக பலி கொடுத்து… நாலு இலட்சம் பேரை தம் மண்ணிலேயே உடுத்த உடைகளுடன் முள்ளுக்கம்பிகளுக்குள் அகதிகளாக்கி… எண்ணிலடங்காத ஆயிரக்கானவர்களை அங்கவீனர்களாகி… குழந்தைகளை அனாதைகளாக்கி… தாய்மாரை விதைவைகளாக்கி… தன் குடும்பத்தையே… தன் குடும்பத்தின் மனைவி பிள்ளைகள் நாலு பேரையும் காப்பாற்றமுடியாமல்… பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
 மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…??? மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
 மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள்… தியாகிகளாகட்டும்… வீர மக்களாகட்டும்… எழிமைக்கும்… உறுதிக்கும் இலக்கணமாக இருந்து   அரசு இராணுவ இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட  தோழர் கனகுலசிங்கம் தொடக்கம்… வீர வணக்க பட்டியலிடாமல் இன்றும் காந்தியம்இ வங்கம் தந்த பாடம் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும்  தோழர் சந்ததியார் மட்டுமல்லாமல்… இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் இராஜசுந்தரம்இ  அரபாத்… என்று முகம் தெரியாமல் மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த… பட்டியல்களில் அடங்காத அனைவரும் தியாகிகளே…! வீரமறவர்களே…!! மாவீரர்களே…!!!
  என்று எம்மண்ணில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஒருமித்து பாகுபாடில்லாமல் நினைவுகூறுகிறோமோஇ அன்றுதான் எம்மை ஓர் இனம் என்று இலங்கை அரசு தொடக்கம்… உலக இன மக்கள் வரை அங்கீகரிப்பார்கள்…!!!
 மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்தஃ  தங்களால் படுகொலை செய்யப்பட்ட  சக போராளிகளை… அரசியல்வாதிகளை… நினைவுகூர பக்குவப்படுங்கள்…!!!
 மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த மாவீரர் குடும்பங்களிற்கு உதவிகளை செய்யுங்கள்…!!!
 இனியொரு விதிசெய்வோம்…! என்று இனியும் நீங்கள் திருந்தாவிடில்இ நீங்கள் மானிடர்களே அல்ல…!! திருந்துங்கள்…!!!
 மாவீரர்களை விற்காதீர்கள்…!
விற்பனர்களே…!! மாவீரர்களை விற்காதீர்கள்…!!!
-       அலெக்ஸ் இரவி

ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக


அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.
வடமாகாண விவசாயிகளுக்காக இந்தியா வழங்கும் உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை
அனைவருக்கும் வணக்கம்!....
எமது தேசமெங்கும் இரத்த ஆறு கொட்டிப்பாய்ந்த கொடிய வரலாறு ஒழிந்து முடிந்து, சமாதான நதி பெருக்கெடுத்து பாயும் காலம் இது!...
நாம் விரும்பும் சமாதானம் என்பது சகல மக்களும் அனுபவித்தே தீர வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அந்த வகையில் அரசியலுரிமை சுதந்திரத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில்....
இதே சம காலத்தில் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்ற உண்மையை மக்களாகிய உங்களுக்கு உறுதியாக மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்றைய நாளை நாம் கருத வேண்டும்.
இது சாதாரண நாள் அல்ல. நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம் என்பதற்கு கட்டியம் கூறும் அர்த்தமுள்ள நாள் இன்றைய நாள்.
ஆகவேதான் இன்றைய இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கௌரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண  தூதுவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார்.
இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான தூதுவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள்.
அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர்.
அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தூதுவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம்கிருஸ்ணா அவர்கள்.
உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.
அவரை ஈழத்தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.
எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.
துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.
எமது மக்களில் பலர் இறந்து போன தங்களது உறவுகளை நினைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எனக்கு புரிகின்றது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று, சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.
மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது.
தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில், எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம்.
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
கடந்த காலங்களில் உங்களுக்கு அழிவுகளை பெற்று தந்த தவறான வழிமுறைகளை நீங்கள் உணர்ந்து, தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொண்டு செயற்பட முன்வருவீர்களேயானால் நாம் கடந்த இருபது வருடங்களில் சந்தித்திருந்த அழிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் நாம் கட்டி எழுப்பி விடலாம்.
இது போன்ற நிகழ்வுகளும் திட்டங்களும் இங்கு நடந்து கொண்டிருப்பதும்,  நீங்கள் பயனாளிகளாக வந்து உங்களுக்கான உதவிகளை பெற்று கொண்டிருப்பதும், மிகவும் மகிழ்ச்சிகரமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விடயங்களாகும். நாம் கடைப்பிடித்து வருகின்ற இணக்க அரசியல் செயற்பாட்டின் மூலம் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவன் நடுக்கடலில் வீழ்ந்து விட்டான் என்பதற்காக அவன் கடலை திட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையோடு கரையேற  முயற்சிக்க வேண்டும். கையில் கிடைக்கின்ற ஏதாவது ஒன்றை முதலில் கெட்டியாக பிடித்துக்கொண்டு கரையேற முயற்சிக்க வேண்டும். அது போலவே எமது பிரச்சினைகளையும் நாம் அணுக வேண்டும்.
யாருடன் பேசி நாம் எமது மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் இணைந்துதான் எதையும் சாதிக்க முடியும்.
நாம் கட்டம் கட்டமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றோம். அது நிச்சயம் நடக்கும். நாங்கள் அதை நடாத்திக் காட்டுவோம்.
எமது மக்களுடைய மீள் குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மீண்டும் மக்கள் குடியிருப்பாக மாற்றியமைத்தல்  போன்ற எல்லா பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக நிறைவேறி வருவதை நீங்கள் கண்டு வருகின்றீர்கள்.
இவைகள் எல்லாம் நாங்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்திருப்பதாலும், அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதாலும்  நடந்து கொண்டிருக்கும் காரியங்களே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.
இது போலவே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எமக்கு இன்னமும் அதிகமான அரசியல் பலம்  கிடைத்திருந்தால் நாம் இன்னமும் விரைவாக அவைகளை நிறைவேற்றியிருப்போம்.
நேற்றைய தினம் எமக்குள் பொது உடன்பாடு கண்டு செயற்பட்டு வரும் பல்வேறு கட்சிகளும் இணைந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பானது மிகவும் திருப்திகரமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்ற கரமானதாகவும் அமைந்திருந்தது.
ஆகவே எமது மக்களின் விடிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது முரண்பாடுகளை மறந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த நிகழ்வின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.
இதே நேரத்தில் இந்த நாட்டில் நிலவியிருந்த சகல வன்முறைகளும் இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எமது சமூகம் ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக முழுமையாக மாறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.
நேற்றிரவு 2.00 மணியளவில் நான் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி கொடிகாமம் பகுதி ஊடாக வந்துகொண்டிருந்த போது யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து எனக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருந்தது.
தமது அலுவலகத்தின் அருகில் யாரோ சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் வந்து நிற்பதாகவும் தம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்குமாறும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நான் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்திருந்ததோடு அந்த நள்ளிரவு வேளையில் நானே நேரடியாக தினக்குரல் அலுவலகம் நோக்கி சென்று தினக்குரல் ஊழியர்களுடன் பேசி நிலைமைகளை அவதானித்து உரிய நடவடிக்கையினையும் எடுத்திருந்தேன்.
இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களில் எந்த தரப்பினரும் ஈடுபடுவதை தவிர்த்து இன்று உருவாகியிருக்கும் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எமது விருப்பங்களை வெளிப்படையாகவே ஏற்று கருத்துச் சொல்லி வருகின்றார். அது மட்டுமன்றி  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அபிவிருத்தி, அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.
நடக்கும் என்று நம்பிக்கையோடு செயற்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று கூறி நாம் விலகி இருப்போமேயானால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.
எமக்கு பக்க பலமாக, தமிழ் மக்களுக்கு உறுதுணையாக, எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் வி;டயத்தில் எமது அரசாங்கத்திற்கும், எமக்கும் துணையாக எமது நட்பு நாடாகிய இந்தியா இருக்கின்றது.
அதற்கு அடையாளமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.
அதே போல் நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு உறவுப்பாலமாக செயலாற்றுவதோடு இன்று இந்த மண்ணையும் மக்களையும் நோக்கி வர விரும்பியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம். கிருஸ்ணா அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இன்று கைகுலுக்கி நேச சக்திகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் பெரிதும் சாதகமான ஒரு விடயமாகும்.
ஆகவே இலங்கை இந்திய நட்புறவு வளர வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகின்றேன்.
இதே வேளையில் எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை புரிந்து வருகின்ற இந்திய அரசுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் முடிக்கின்றேன்.

13வது திருத்தப்படி தீர்வு! யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா!

இலங்கையின் 13வது அரசியலமைப்புத் திருத்த்தின் அடிப்படையில் ஒர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையே ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும், இத்தகைய பேச்சுவார்த்தையொன்று எல்லா சமூகங்களினதும் பங்களிப்புடன் விரைவில் ஆரம்பமாகும் என நம்புவதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைதூதரகம் மற்றும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கிருஷ்ணா யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார்.
இவ் வைபவத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு செயலர் நிருபாமா ராவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் மற்றும் யாழ்மாவட்ட பா.உகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய கிருஷ்ணா இலங்கையின் ஆயுத போராட்டத்தின் முடிவு பிரச்சினையை புரிந்துணர்வுடன் அணுகி, உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வுக்கான அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள இறுதி யுத்தத்தையடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா வழங்கிய அவசர உதவிகள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்தின்போது தேவைப்பட்ட அவசர உதவிகள் என்பவை பற்றி குறிப்பிட்ட அவர், வடபகுதியின் அபிவிருத்திக்கான பல்வேறு வேலை திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான உழவு இயந்திரங்கள், விதை தானியங்கள் என்பனவற்றையும் கிருஷ்ணா வழங்கியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியில் இந்திய உதவியோடு மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டத்திற்கான அடிகல்லையும் அவர் நாட்டி வைத்தார்.
அதன் பின்னர் மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் ரயில் பாதையை அமைப்பதற்கான வேலை திட்டத்தையும் எஸ்.எம்.கிருஷ்ணா ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

இனங்களிடையே மீண்டும் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சில குழுக்களே சிங்கள மக்களை யாழ். குடாநாட்டுக்கு குடியேற அனுப்புகின்றன!

2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூபா 214 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இவ்வருடம்(2010) பாதுகாப்புச் செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 13 பில்லியன் அதிகரிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.ஆனால் இவ்வருட (2010 ஆம் ஆண்டிற்கான) நிதி ஒதுக்கீட்டில் ரூபா 201 பில்லியனும் 2009 ஆம் ஆண்டுக்கான ரூபா 177 பில்லியனும் மட்டுமே பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 75 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு 62 பில்லியனும் கல்வி அமைச்சிற்கு 31 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஏன் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எமக்குத் தெரியவில்லை.தற்பொழுது யுத்தம் முடிவுறுத்தப்பட்டு சமாதான சூழல் நிலவும் நிலையில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்றிட்டத்தில் இவ்வாறான பெரிய தொகை பாதுகாப்புச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடாது.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பே ஆகும்.ஆனால்,இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மக்களது வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கக்கூடிய ஆக்கபூர்வமான முன்மொழிவுகள்/கருத்திட்டங்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. நுகர்வோர் பலமாக வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள். சாதாரணமானதும் எளிமையானதும் அதிக செலவற்றதுமான சோறு, கறி ஆக்கி உண்பதே ஒரு குடும்பத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இன்று ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தின் போது உற்பத்திப் பொருட்களது விலைகள் அதிகரிக்கப்படுகின்றமையே வழமையாக இருந்தது.ஆனால்,இந்த வரவுசெலவுத் திட்டத்தால் விலையுயர்வு தொடர்பில் எதுவும் செய்யமுடியாதிருப்பது தெரிகின்றது. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கடந்த பின்பும் இலங்கையில் நுகர்வோர் மாதாந்தம் தாம் விரும்பியவாறு கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர்.வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அவர்களது மாத வருமானத்தின் மூலம் செலவினத்தை ஈடுசெய்ய முடிவதில்லை.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை அதிகரித்த வாழ்க்கைச் செலவினத்தாலும் குறைந்த வருமானத்தினாலும் மக்களது கொள்வனவு வலுவானது 60% த்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியற் திணைக்களத்தின் கூற்றுக்கமைய செப்டெம்பர் மாதத்திற்கான செலவுப்பொதி ரூபா 39,721,62 என்பதுடன் அரசதுறைப் பணியாளர் ஒருவரது மிகக்குறைந்த மாதாந்தப்படி ரூபா 16,980 உம் தனியார் துறைப்பணியாளர் ஒருவரது படி ரூபா 6,750 உம் ஒரு தோட்டத்தொழிலாளியின் நாளாந்தப்படி ரூபா 290 உம் ஆகக் காணப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டில் இதே மாதாந்த செலவுப்பொதி ரூபா 24,344.00 எனக் கணிப்பிடப்பட்டிருந்தது.இதிலிருந்து 2006 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையில் மாதாந்த செலவுப்பொதி ரூபா 14,377.62 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.இதற்கிடையில் 2009 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியினுடைய ஆண்டறிக்கையின்படி ஓர் இலங்கையரின் சராசரி மாதாந்த வருமானம் ரூபா 17,109.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள இப்புள்ளி விபரங்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் இலங்கைக் குடிமக்களால் எதிர்கொள்ளப்படும் பொறுப்புகளை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
உயர்பாதுகாப்பு வலயம்
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப்பிரகடனம் கொண்டு வரப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் எப்பொழுது கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சர் எனக்கோ அல்லது இந்தக் கௌரவ சபைக்கோ உரிய விளக்கம் கொடுப்பாரா? இவ்வுயர் பாதுகாப்பு வலயப் பிரகடனங்கள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டனவா?உண்மையிலே வடக்கிலே இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனத்திற்கு எந்த சட்ட அடிப்படையும் இப்போது இல்லை.வடக்கின் 30% பகுதியான வலிகாமம் வடக்கு படையினருடைய ஆதிக்கத்திலுள்ளதுடன் அவை உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.48 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த வலிகாமம் வடக்கில் 28 கிராம சேவகர் பிரிவுகள் படையினரின் ஆதிக்கத்திற்குட்பட்டுக் காணப்படுவதுடன் யாரும் சென்று மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.12 கிராம சேவகர் பிரிவுகளிலேயே மக்கள் முழுமையாக குடியமர்ந்துள்ளனர் என்பதுடன் 05 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் பகுதியாகவே குடியமர்ந்துள்ளனர்.
பலாலி விமான நிலையம்,பலாலி ஆசிரியர் கலாசாலை,மயிலிட்டி மீன்பிடித்துறை,மயிலிட்டி இருதய சிகிச்சை வைத்தியசாலை,காங்கேசன்துறை துறைமுகம்,காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம்,மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம்,தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை,தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை,தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி ஆகியவை உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதியினுள்ளேயே அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.வலிகாமம் வடக்கு, மண்டைதீவு,யாழ்ப்பாணத்திலிந்து கொழும்புத்துறை வரையான பகுதி, கரம்பகம்,எழுதுமட்டுவாள் வடக்கு,தெற்கு,நாகர்கோவில் மற்றும் மறவன்புலோ ஆகிய பகுதிகளும் உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பகுதியினுள்ளேயே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 100,000 பேரும் தென்மராட்சியிலிருந்து இடம்பெயர்ந்த 100,000 பேரும் மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு உயர் பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பிரகடனத்தின் காரணமாக அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நாங்கள் தொடர்ந்த அடிப்படை உரிமைமீறல் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் அண்மையில் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், ஜேர்மனிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென்று ஏதும் இல்லையென்றும் கண்ணிவெடி அகற்றப்படவேண்டிய இடங்களே காணப்படுகின்றன என்றும் கூறியிருந்ததை இங்கு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப்பெண்மணி இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறிவரும் துர்ப்பாக்கிய நிலையைவிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இனிமேலாவது அவர் வாயைத் திறக்குமுன்பு சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.ஒருவருடைய சொந்த இடத்தில் சென்று மீளக்குடியமர விடாது மறுப்பது அவருடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
இராணுவத்தினரை வெளியேற்றுதல்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் படையினர் வடக்கில் நிலைகொண்டிருந்தனர்.அவர்கள் இன்றும் அங்கேயே தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.சீன அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கிலே இவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என ஒரு பத்திரிகைச் செய்தியின் மூலமாக அறிகிறேன்.ஆசியாவிலேயே இலங்கை மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடõகவே காணப்படுகின்றது.இயல்புநிலையும் இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலையுமே இப்பொழுது தமிழர்களது தேவையாக உள்ளது.1990 ஆம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு அமைவாக படையினர் பின்னே சென்றுகொண்டு வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கவேண்டும்.
சிறைச்சாலைகள்
அளவுக்கதிகமான கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.உதாரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 145 ஆகும்.ஆனால்,ஏறக்குறைய 550 பேர் தற்போது அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடித் தன்மையைக் குறைப்பதற்காகத் தூர இடங்களில் மேலும் சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், அடுத்தவருடம் இதற்கான முதலீட்டுத் தொகையை விடுவிப்பதற்கு திறைசேரி நிராகரித்துள்ளதாக நான் அறிகின்றேன்.
போதிய நிதியின்மையால் வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியவில்லை.இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடன்தொகை அந்த அளவிற்குப் போயுள்ளது என்பதுடன் நாட்டினுடைய வருமானம் அலுவலர்களுக்கான சம்பளங்களைக் கொடுப்பதற்கே போதுமானதாக உள்ளது. இந்நாட்டுக் குடிமகனது தலைக்கான கடன்தொகை 150,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.ஆதலால் வெளிநாடுகளின் முதலீட்டை உள்நாட்டில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர உயர் வட்டிவீதத்தில் வெளிநாடுகளில் கையேந்திக் கடன் வாங்குவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்.
தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல்
செலவினங்களைக் குறைக்கும்போது நாம் அவற்றின் உயர்ஸ்தானத்தில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும்.இலங்கை அரசை நடத்துவதற்கு 98 அமைச்சர்களுக்கு என்ன தேவைப்பாடு உள்ளது என எனக்குப் புரியவில்லை.720 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட ஜப்பான் நாட்டிலே ஆக 20 பேர் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.இலங்கையைப் போன்ற ஒரு நாட்டினை முகாமை செய்வதற்கு 20 அமைச்சர்களைக் கொண்டமைந்த ஓர் சிறிய அமைச்சரவை தாராளமாகப் போதுமானது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மில்லியன் கணக்கான தொகையினை களியாட்டங்களிலேயே செலவுசெய்து வருகின்றது.அண்மையில் பல மில்லியன் ரூபா செலவில் நடத்தப்பெற்ற திரைப்படக் களியாட்ட விழா இதற்கு ஓர் நல்ல உதாரணமாகும்.
எமது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றபோது அவருடன் 37 பேர் கூடச் சென்றிருந்தனர்.இவர்களுக்கு அங்கு என்ன தேவை இருந்தது?அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான தேவையற்ற செலவினங்களை இயன்றளவு குறைத்துக்கொள்ள வேண்டும் இதேவேளை, அண்மையில் 350 சிங்களக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தனர் என்ற செய்திபற்றிக் குறிப்பிடவிரும்புகின்றேன்.பின்னர் அவர்கள் நாவற்குழிக்குச் சென்று அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கிறார்கள்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதொடர்பில் சில விசாரணைகளை நடத்தியிருந்ததும் அதன்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்ததாகவோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் அல்லர் என்பது தெரியவந்துள்ளது.
எங்களுக்கிடையில் கலகத்தை உண்டுபண்ண முனையும் சில குழுக்களே இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றன.உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களாயின் அவர்கள் அங்கு மீள்குடியேற்றப்படல் வேண்டும்.ஆனால்,இவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த சில முஸ்லிம்கள் ஒரு காலத்தில் விரட்டப்பட்டவர்கள்.ஆனால்,இப்போது அவர்கள் முன்னர் குடியிருந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுகிறார்கள்.பயங்கரவாத தடைச்சட்டத்தையும் அவசர கால ஒழுங்கு விதிகளையும் நீக்கவேண்டும் என இந்த அரசாங்கத்தை வினயமுடன் வேண்டுகிறேன்.மேலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல தமிழ் அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென இத்தருணத்தில் மிக உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.