தினத்தந்தி :‘16 வயதினிலே’ மூலம் இயக்குநராக அறிமுகம்
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்
நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக