புதன், 10 ஜூன், 2026

அரபு நாட்டு - இலங்கை பணிப்பெண்களின் உயிரிழப்புக்கள் தொடர்கதையா?

May be an image of one or more people, dais and text that says "EXIT-S3 3 Lim"

ராதா மனோகர் :  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலஸ்தீன் பலஸ்தீன் என்று மூச்சு விடும் எலைட் மனிதர் உரிமையாளர்கள் ஒருபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இப்படி வரும் பிரேத பெட்டிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை 
இந்த பெட்டிகளின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க எந்த எஞ்சியோவும் பணம் தாராது 
இந்த பெட்டிகளுக்காக எந்த வெளிநாடுகளும் மனித உரிமை சுற்றலா வாய்ப்பு தராது 
இந்த பெட்டிகளுக்காக எந்த நாடும் எந்த ஸ்காலர்ஷிப்பும் தராது 
இந்த பெட்டிகளுக்காக பேசினால் எந்த தொலைக்காட்சியும் மைக்கோடு வந்து உங்களை மொய்க்காது 
இந்த பெட்டிகள் எந்த ஊடகத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான செய்திகள் அல்ல 


இது வரை ஆண்டுக்கு இப்படி எத்தனை பெட்டிகள் வருகின்றன என்ற விபரம் கூட எவரிடமும் இருக்காது 
இந்த பெட்டிக்களில் வருவோர்க்கு உயிரோடு இருந்த காலங்களில் வேறு எந்த வாய்ப்பையும் அளிக்காத அரசியல்வாதிகள் கொஞ்சம் கூட வெட்கமோ அறமோ இன்றி இன்றுவரை கோடிகளில் வீடுகள் கோடிகளில் கார்கள் கோடிகளில் ஆடம்பரம் என்று வாழ்கிறார்கள் 
இந்த பெட்டிகளை உருவாக்கியதில் தனி சிங்களம் தனி தமிழ் என்று ஆங்கிலத்தை புறந்தள்ளிய இனவாத தலைவர்களின்  பங்குதான் அதிகம் 
பெட்டிகளுக்கு வீட்டு பணிப்பெண்கள் என்ற அடிமை பெண் வியாபாரத்தில் பொருட்களாக விற்பனையாவதை தவிர வேறெந்த தகுதியும் வாய்ப்பு  இருக்கவில்லை 
அவை மறுக்கப்பட்டன- யாரால் ஆங்கிலம் என்ற அரிய வாய்ப்பை இலங்கை மக்களிடம் இருந்து பறித்த ஆக்ஸ்பார்ட்  புகழ் கல்விமான் பண்டாரநாயக்காவில் இருந்து கடைக்கோடி கிராமத்தில் இன்றுவரை ஆங்கிலத்தை  ஒரு எதிரியாக கருதும் கேவலம் கேட்ட மதவாதிகள் வரை இந்த பெட்டிகள் தயாரிப்பாளர்கள்தான் 
அந்த காலத்தில் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த யாழ்ப்பாணத்தவர்களை பிரிட்டிஷ் அரசு மலேசியாவில் ஸ்டேஷன் மாஸ்டர்கள்  ஆசிரியர்கள் கணக்குபிள்ளைகள் என்று பணியமர்த்தினார்கள் அவர்களின் சந்ததி இன்று கொடிகட்டி பறக்கிறது 
மறுபுறத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களை ரப்பர் தோட்ட்ங்களுக்கு கூலியாளாக பணியமர்த்தினார்கள்  இன்றுவரை  குடியும் சினிமா மோகமும் ரவுடி கட்டை பஞ்சாயத்துமாக சிறப்புறுகிறார்கள்.
இலங்கை மனித உரிமை பிரச்சனைகளில் தலையாய பிரச்சனை மத்திய கிழக்கு நாடுகளில் அடிமை பெண்களாக  செல்வதுதான் 
இந்த பெட்டிகள் கொண்டுவரும் அந்நிய செலாவணியை  ஆடம்பர கார்களுக்கும் இதர ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு  வாரி வாரி வழங்கி விட்டு கமிஷன் பார்ப்பதை எப்போது நிறுத்த போகிறீர்கள்?
இந்த பெட்டிகள் கொண்டுவரும் பில்லியன் டாலர்களை வைத்து கார்னிவெல் நடத்திவிட்டு 
அரிசிக்கும் மாவுக்கும் சில மில்லியன் டாலர்களை கடனாக கேட்டு அலையும் புத்திசாலிகள் உலகிலேயே நம் நாட்டில்தான் காணமுடியும் 
என்ன எழுதினாலும் ஒன்றும் புரியாத கூட்டம் ஒருபுறம் 
புரிந்தாலும் என் வீட்டுக்கு டாலர்கள் வருவதால்  இவை தேவைதான் என்று பொருளாதார வகுப்பெடுக்கும் அயோக்கிய கூட்டம் ஒருபுறம் 
ம்ம்ம் நல்லா வருவீங்க    

கருத்துகள் இல்லை: