நக்கீரன் : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவருடைய அலுவலகத்தில் வைத்து சந்திப்பு மேற்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களாகவே ப.சிதம்பரம் திருமாவளவனை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்படுத்துவதற்கான திட்டம் ப.சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக காங்கிரசை வலுப்படுத்தத் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து அடுத்தடுத்த தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவனிடம் ப.சிதம்பரம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக