மாலை மலர் : கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை கூறி மாணவிகளை பாகிஸ்தானுக்கு போகுமாறு அந்த ஆசிரியர் கூறி இருக்கிறார்.
உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் பேசியதாக கூறப்படுகிறது.
மாணவிகள் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று கூறப்படுகிறது.
கன்னடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர், மாணவிகளிடம், "பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். இந்த நாடு இந்துக்களுக்கானது," என்று கூறியுள்ளார்.
"நாங்கள் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அவர் மீது துறை ரீதிலியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை வெளியான பிறகு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பள்ளி கல்வித் துறை அலுவலர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
26 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்த ஆசிரியர் உருது பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக