செவ்வாய், 5 செப்டம்பர், 2023

உதயநிதியை ஒரு திராவிட தலைவராக முழு இந்தியாவுக்கு அறிமுகம் செய்ய ..

 ராதா மனோகர் : டைம்ஸ் நவ் . இந்தியா டுடே . ரிப்ளிக் டிவி .என் டி டி வி  போன்ற வடஇந்திய தொலைக்காட்சிகள் திரு உதயநிதியை ஒரு திராவிட தலைவராக முழு இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும் வேலையை முழு மூச்சாக செய்கின்றன.
இது ஒரு புறம் இருக்க,
மறுபுறம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சனாதனம் என்பதை கேள்விக்கு உரியதாக்கி அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன.
வெறும் பாஜகவின் தேர்தல் அரசியலுக்காக,
சனாதன தர்மம் என்பதை ஏன் ஒரு விவாத பொருளாக்க வேண்டும்?
இந்த விடயத்தை கிளறாமல் இருந்திருக்கலாமே என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்
பாஜகவினரோ உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சே வரும் தேர்தலில் தங்களுக்கு வாக்குகளை மீண்டும் அள்ளித்தரும் என்று நம்புகிறார்கள்.
 அந்த அளவு உக்கிரமாக அமில வார்த்தைகளை வீசுகிறார்கள்..
பிறவி சனாதனவாதிகளோ உண்மையில் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று தோன்றுகிறது

உண்மையில் திரு உதயநிதி பேசியதை விட இந்த விடயம் வடநாட்டு ஊடகங்களில் இவ்வளவு பிரமாண்டமான ஒரு புயலை கிளம்பியதை பார்த்து பயந்து போயுள்ளார்கள் என்றெண்ணுகிறேன்

சனாதனத்தை பற்றி கேள்வி கேட்பதே பாவகாரியம் என்பது போல மக்களை நம்பவைத்த தங்களின் அத்தனை பித்தலாட்டங்களும்,
 தங்கள் கண்முன்னே நொறுங்கி விழுவதை இப்போது பார்க்கிறார்கள்.
வடநாட்டு சங்கிகளுக்கு எது எக்கேடு கெட்டாலும் உதயநிதியின் பேச்சை வைத்து வாக்குகளை அள்ளலாம்  என்பது மட்டும்தான் குறி.

பாஜகவின் தேர்தல் இலாபத்திற்காக சனாதன பர்னிச்சரை அக்கு வேறு ஆணிவேராக விவாதங்கள் என்ற பெயரில்  பிரித்து மேய்வது இதுவரை இவர்கள் காணாத காட்சி.
இந்த மேய்தல் தென்னாட்டில் தாராளாமாக  நடந்திருக்கிறது
ஆனால் முழு இந்திய அளவில் பெரிய அளவில் சனாதனம் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயப்படுவது  இதுதான் முதல் தடவை.
இந்திய போர்கள் எல்லாமே ஆரிய திராவிட போர்தான் என்று நேரு அவர்கள் தனது சுயசரிதையில் எழுதியதை போல,
இன்று நடக்கும் சனாதனம் - டெங்கு விவாதங்கள் ஆரிய திராவிட மோதல்தான்.
சனாதனத்தை அடித்து நொறுக்க வந்த  ஒரு அவதாரமாக (அவாள் பாஷையில்) உதயநிதி இந்திய மேடையில் இன்று பேசப்படுகிறார்!

கருத்துகள் இல்லை: