மாலை மலர் : புதுடெல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு நாளை (7-ம் தேதி) ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
மறுநாள் (8-ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர், அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். 9-ம் தேதி பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன்பின், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு 10-ம் தேதி இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
புதன், 6 செப்டம்பர், 2023
ராகுல் காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக