வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..விரைவில் ..சென்னை மேயர் பிரியாவின் அறிவிப்பு

 tamil.oneindia.com - Jeyalakshmi C : மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..விரைவில் நடைமுறைக்கு வரும் சென்னை மேயர் பிரியாவின் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்
அதன்படி அந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தண்டையார் பேட்டை மண்டலத்தில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 2969 மாணவிகள், ராயபுரம் மண்டலத்தில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவிகள், திரு.வி.நகர் மண்டலத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 3160 மாணவிகள், அண்ணா நகர் மண்டலத்தில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1721 மாணவிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 35 பள்ளிகளைச் சேர்ந்த 898 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 2699 மாணவிகள், அடையாறு மண்டலத்தில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 2203 பேர் என்று மொத்தம் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், 6ஆம் வகுப்பு மாணவிகள் 3642 பேர், 7ம் வகுப்பு மாணவிகள் 3810 பேர், 8ஆம் வகுப்பு மாணவிகள் 3711 பேர், 9ஆம் வகுப்பு மாணவகள் 3487 பேர் என்று மொத்தம் 159 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.

English summary

The Chennai Corporation plans to provide martial arts training to 14,650 female students studying in the Chennai Municipal Schools. Mayor Priya had announced that under the Nirbhaya scheme in the Chennai Corporation budget, sanitary napkins and martial arts training would be provided to girls and accordingly the scheme would be implemented soon.

கருத்துகள் இல்லை: