வெள்ளி, 17 ஜூன், 2022

போட்டா போட்டியை ஆரம்பித்த உச்ச நடிகர்.. திடீரென அந்த படத்தை இப்படி கொண்டாட இதுதான் காரணமா?

 tamil.filmibeat.com : சென்னை: சில மாதங்களுகு முன் உச்ச நடிகரின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படம் பல ஆண்டுகளை கடந்ததை கூட அப்படி கொண்டாடாத நிலையில், தற்போது திடீரென இப்படி கொண்டாட அந்த போட்டி மனப்பான்மை தான் காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஒரு பக்கம் பாஸ் நடிகர் பல வருடங்கள் கழித்து தனக்கு கிடைத்த வெற்றியை பெரியளவில் கொண்டாடி அடுத்தடுத்த படங்களுக்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கவும் இயக்குநர் லேட் செய்து வரும் நிலையில், கிடைத்ததை வைத்து மீண்டும் டிரெண்டிங்கில் இடம் பிடிக்க தேவையான வேலைகளை உச்ச நட்சத்திரம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.


பகத் பாசில் அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு... நடிகர் சிவகார்த்திகேயன்! பகத் பாசில் அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு... நடிகர் சிவகார்த்திகேயன்!

டிரெண்டிங்கில் உச்ச நட்சத்திரம்
ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியிலும் திடீரென தனது பெயரை டிரெண்டிங்கில் கொண்டு வந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மாய பிம்பத்தை உருவாக்க உச்ச நடிகர் முயற்சித்துள்ளதாக சினிமா துறையிலேயே சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவரது இந்த மூவுக்கான காரணமும் சரியான ரீதியில் இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். புரமோஷன் எல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டால் அடுத்து உருவாக உள்ள தனது படத்திற்கான வரவேற்பு முந்தைய படங்களின் நிலைமை போல ஆகிவிடுமே என்கிற எண்ணம் தானாம்.

போட்டா போட்டி
சபாஷ் சரியான போட்டி தனக்கு கிடைத்துள்ளது என பாஸ் நடிகரின் வெற்றியை பார்த்து மிரண்டு போன உச்ச நட்சத்திரம் தானும் களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே பழைய படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வெகு சிறப்பாக கொண்டாட ஏகப்பட்ட ஏற்பாடுகளை தனது டீமை வைத்து நடத்தி இருக்கிறார் உச்ச நட்சத்திரம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

லேட் பண்ணும் இயக்குநர்
அந்த இயக்குநர் செம ஸ்பீடில் படம் எடுப்பார் என நம்பி அவரை புக் செய்த உச்ச நட்சத்திரத்துக்கு அவர் இன்னும் பாதி கதையே பண்ணல என்கிற விஷயம் தெரிந்தவுடன் செம ஷாக் ஆகி உள்ளார். இனி அவரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்கிற நிலையில், தான் அந்த பிரம்மாண்ட இயக்குநரை அழைத்து இப்படியொரு டிரெண்டிங்கை உருவாக்கி உள்ளாராம் உச்ச நட்சத்திரம்.

பெரிய பிளான்
இதுமட்டுமல்லாமல், இன்னும் ஒரு பிரம்மாஸ்த்திரத்தையும் உச்ச நடிகர் கையில் எடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் அடுத்த படத்தின் மீது பெரியளவில் இதுவரை நம்பிக்கை இல்லாத நிலையில், அதற்கு அடுத்த படத்தின் அறிவிப்பையும் விரைவில் அவர் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதற்கான வேலைகளையும் உச்ச நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதாக தற்போது சீக்ரெட்டான தகவல்கள் கசிந்துள்ளன. அந்த பிரம்மாண்ட இயக்குநருடனே கூட்டு வைக்க உள்ளாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: