செவ்வாய், 14 ஜூன், 2022

3 மாத குழந்தை மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து உயிரிழப்பு : தாய் கண்முன்னே நடந்த கொடூரம் .. திருவண்ணாமலையில்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தை மீது விழுந்த ஸ்பீக்கர் பாக்ஸ்: தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!

கலைஞர் செய்திகள் : திருவண்ணாமலையில், ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பிச்சனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் சிறுவனும், பிறந்து 3 மாதமே ஆன சுபஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பரணி, குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் ஹாலில் படுக்கவைத்து விட்டு தனது முதல் மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் சுபாஸ்ரீ மீது விழுந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பரணி, உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: