சனி, 18 ஜூன், 2022

மோடி ஆட்சியில் ஸ்விஸ் வங்கியில் ரூ.30,500 கோடி முதலீடு செய்த இந்தியர்கள் .. 50% உயர்ந்த கருப்பு பணம்..

 கலைஞர் செய்திகள் : கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் 50 சதவிகிதம் உயர்ந்து 3.83 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி, பிரதமராகும் முன் இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு எப்படியாவது அதை இந்தியாவுக்கு கொண்டுவந்து வந்து சேர்ப்பேன் என பிரச்சாரம் செய்திருந்தார்.
பா.ஜ.க. ஆதரவாளர்களும் இதை முன்வைத்து அப்போது ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பெரும் பிரச்சாரங்களை செய்து வந்தனர். இந்த நிலையில் மோடி பிரதமராகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள கிளை நிறுவனங்கள், மற்ற நிதி நிறுவனங்கள் ஆகியவை சேமித்து வைத்திருக்கும் பணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.


மோடி ஆட்சியில் 50% உயர்ந்த கருப்பு பணம்.. ஸ்விஸ் வங்கியில் ரூ.30,500 கோடி முதலீடு செய்த இந்தியர்கள்

ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணமானது இந்திய மதிப்பில் சுமார் 30,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்விஸ் வங்கிகளில் பத்திரங்கள் உள்ளிட்டவையின் மூலம் இந்தியர்கள் முதலீடு செய்வதும் வைப்பு தொகை அதிகரித்திருப்பதும் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மோடி ஆட்சியில் 50% உயர்ந்த கருப்பு பணம்.. ஸ்விஸ் வங்கியில் ரூ.30,500 கோடி முதலீடு செய்த இந்தியர்கள்

கடந்த ஆண்டு இதன் மதிப்பு 2.55 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டின் இறுதியில், 504 மில்லியனாக இருந்த இந்தியர்களின் வைப்பு தொகை 2021ம் ஆண்டில் 602.03 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கருப்பு பணத்தை மீட்டு வருவேன் எனக் கூறிய மோடியின் ஆட்சி காலத்தில் கருப்பு பணம் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளதும் முன்பை விட கருப்பு பணம் அதிக அளவில் ஸ்விங் வங்கிகளில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: