வியாழன், 16 ஜூன், 2022

இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927

ராதா மனோகர்
: இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
 சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது  
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம்   c4 July 1884 – 12 March 1970)
Subramaniam  Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election.  As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
இந்த பள்ளிக்கூடங்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது .
இதை ஏற்றுக்கொள்ள மறுத்து  இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய இன்னொரு வழக்கறிஞரான திரு மு.சு. ராசரத்தினம் அவர்கள்,
சுன்னாகத்தில் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்  அந்த அமைப்பின் சார்பாக திராவிடன் என்ற மாத பத்திரிகையையும் வெளியிட்டார்  
இப்பத்திரிகை தங்கு தடையின்று நான்கு ஆண்டுகள் வெளிவந்தது.
ஜாதி பேதம் இல்லாது எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கற்று கொடுப்பதற்காக திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடத்தையும் சுன்னாகத்தில்   நிறுவினார்.
திராவிடன் பத்திரிகையில் சமூக நலன் சார்ந்த பல கட்டுரைகள் செய்திகள் அறிவுரைகள் இடம் பெற்றிருந்தன .
அதில் வெளியான பல முற்போக்கு  கருத்துக்கள் அக்காலத்தில் மிகவும் துணிச்சலான விடயங்களாக இருந்ததை காணலாம் .
இந்த தரவுகள் அடிப்படையில் நோக்கும்போது  சமூக அரசியல் தளத்தில் முதல் முதலாக அங்கு உருவான அரசியல் இயக்கம் திராவிட இயக்கம்தான் என்பது மிக தெளிவாக தெரிகிறது
இந்திய சுதந்திர இயக்கம் பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் கூட அவையெல்லாமே ஒரு தெய்வீக தோற்றம் போன்ற புனித வழிபாடு  என்ற அளவிலேயே காட்சி அளித்தது.
எந்த இடத்திலும் அது ஒரு அரசியல் முன்னெடுப்பு என்ற கருத்தே எங்கும் காணப்படவில்லை
நீக்கமற நிறைந்திருந்த தென்னாடுடைய சிவனும் முருகனும் ஒரு புறமாகவும் .
கிறிஸ்வ மிஷனரிகளின் பரலோகத்து பிதாவின் மகிமையை போற்றும் விதமான செய்திகள் மறுபுறமுமாகவும் இருந்த காலங்கள் அவை.
சைவர்களின் கல்வி ஜாதி சேற்றுக்குள் சிக்கியது போல  கிறிஸ்த்தவ மிஷனரிகளின் கல்வி ஜாதி  சேற்றுக்குள் சிக்கவில்லை.
இவ்விரண்டு மதங்களில் சிக்கியிருந்த மக்களின் ஒரு சமூக கலாச்சார அறிவியல் புரட்சியாக திராவிட கருத்தியல் வழக்கறிஞர் திரு சு . ராசரத்தினம் அவர்களால் முன்னெடுக்கபட்டது  இவர் மட்டுமல்ல இவரோடு பலர் துணையாக இருந்திருக்கிறார்கள்
 இலங்கையின் முதல் இடது சாரி இயக்கமான லங்கா சமசமாஜி கட்சி 1935 டிசம்பர் 18 ஆம் உதயமானது .
இலங்கை கம்யூனிஸ்டு கட்சி  1943 ஜூலை 3 ஆம் திகதி உதயமானது  
திரு போன் கந்தையா திரு ஆ வைத்திலிங்கம் திரு நா சண்முகதாசன், திரு மு.கார்த்திகேசன் போன்ற தமிழர்கள் இதில் இயங்கினார்கள்  
இதே காலக்கட்டங்களில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம். திராவிடர் கழகம் போன்றவை பெருமளவு வளர்ச்சி பெற்றன
தமிழ்நாட்டில் இடது சாரி இயக்கங்கள் முழு  மூச்சுடன் இயங்கினார்கள் .
ஆனாலும் கோட்பாடு அடிப்படையில் திராவிட இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஊடுருவிய அளவுக்கு இடதுசாரி இயக்கங்களுக்கு ஊடுருவ முடியவில்லை
வெறும் பொருளாதார வர்க்க பேதத்தை மட்டுமே  மக்களின் பிரச்சனையாக  கருதிய மாக்சியத்திற்கு ஆரிய ஜாதீய அமைப்பின் இயங்கியல் பற்றிய தெளிவு இன்மையால் அது போதியளவு நகர முடியாமல் போய்விட்டது
ஆரிய ஜாதி கட்டுமானத்தின் கோட்பாடு அத்திவாரத்தை  புடுங்கி எறிந்த திராவிட கோட்பாடு அங்கு வெற்றி அடைந்ததில் வியப்பில்லை.
ஆனால் இலங்கையில் இடதுசாரிகள் சைவ கிறிஸ்தவ அரசியலுக்கு மாற்றாக இடது சாரி அரசியலை முன்னெடுத்ததில் ஓரளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது .
அதனால் மக்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் தோன்றுகிறது .
சைவ கிறிஸ்தவ அரசியல் சக்திகள் இடது சாரிகளுக்கு ஊக்கமும் கொடுத்தார்கள்.  
ஆனால் அவர்கள்  ஈ இருக்குக்ம் இடம் கூட தர ,முடியாது என்று துடைத்து எறிந்தது திராவிட அரசியலைத்தான் .
திராவிடத்தின்  சுயமரியாதை சமூக நீதி பகுத்தறிவு பற்றிய   பயம்  காரணமாக இருக்கலாம்
உள்ளூர ஜாதி கட்டுமானத்தின் மீதான பிடிப்பு அவர்களுக்கு இருந்திருக்கலாம்
அதனால்  அந்த ஜாதியத்தின் இருப்பையே கேள்விக்கு உரியதாக்கிய திராவிட கருத்துக்கள் வேப்பங்காய் ஆனதில் வியப்பில்லை
1927 ஆம் ஆண்டே  யாழ்ப்பாணத்தில் அழுத்தமாக கால் பதித்த திராவிட இயக்கமானது  பின்பு வந்த இடதுசாரி இயக்கத்தாலும் தமிழ் தேசிய இயக்கத்தாலும் காணாமல் ஆக்கப்பட்டு விட்டது போலத்தான் தெரிகிறது
தமிழ்நாட்டில் பெற்ற தோல்வியை யாழ்ப்பாணத்தில் சரி செய்துவிட்டார்கள் போலும்.
இன்னொரு புறத்தில் தென்னிலங்கையில் மலையகத்திலும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக காலூன்றிய இடதுசாரிகள் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஏறக்குறைய சரி பாதி இடங்களை பெற்றார்கள்  
அந்த தமிழர்களின் வாக்குப்பலத்தில் பல சிங்கள இடது  சாரி தலைவர்கள் வெற்றி பெற்றார்கள்  
இலங்கை ஒரு கம்யூனிஸ்ட்டு நாடு என்ற அபாயத்தின் வாசலில் இலங்கையை கொண்டு போய் நிறுத்தினார்கள்
என் எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா லெஸ்லி குணவர்தன பீட்டர் கெனமன் சிங்கள இடதுசாரிகள் இவர்கள் எக்கச்சக்கமான மலையக இந்திய வம்சாவளி  மக்களின் வாக்குகளை பெற்றிருந்தார்கள்
அடுத்த தேர்தலில் இலங்கை கம்யூனிஸ்ட் நாடாவது உறுதி என்ற நிலைமை இருந்தது.
இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்புக்கு இது வழி கோலியது  
அமெரிக்கா  பிரிட்டன் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் என்பதை விட இவை கம்யூனிஸ்டுகளின் வாக்குகளாகவே தெரிந்தது.

கருத்துகள் இல்லை: