திங்கள், 13 ஜூன், 2022

இலங்கைக்கு எப்போது ஒளிமயமான எதிர்காலம்? கண்ணுக்கெட்டிய தூரத்தில் ... .

 Freddy Abraham  :   இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் மாலைதீவைச் சேர்ந்த மொஹமட் நஷீட், சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை தொடர்புகொண்டபோது தற்பொழுதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழ இலங்கை உறுதியான திட்டங்கள் வகுக்கும் வரை அது தொடர்பில் பேசவேண்டாம் என்று கூறியுள்ளார்.
 இலங்கையிடம் உள்ள விற்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஒரு பட்டியலை அனுப்பினால் அதனைப் பரிசீலனை செய்வதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆட்சியாளர் ஷேய்க் மொஹமட் பின் அவர்கள் கூறியுள்ளார்.
 மில்லியன் கணக்கான டொலர்களை உதவியாக வழங்கிய பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் மேலதிக உதவிகளைக் கோருவது ஏன் என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
 சீனா 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
 ஜப்பான் இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்துள்ளது.


 உலக வங்கி இலங்கைக்கு புதிய கடன் வசதிகள் எவற்றையும் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது.
 எம்.சி.சி விடயத்தில் இலங்கையின் போக்கினால் அமெரிக்க உதவிகளையும் இலங்கை இழந்துள்ளது.
 ஐரோப்பிய யூனியனும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இல்லை. எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி பிளசையும் இலங்கை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே.
ஏரோபிளாட் விமானத்தை தடுத்து வைத்த சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முன்னணியில் திகழும் ரஷிய நாட்டுடனும் இலங்கை முறுகலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் ஒளிமயமான எதிர்காலம் இன்னும் இலங்கையின் கண்களுக்குத் தெரியத் தொடங்கவில்லை என்பதே நிஜம். இலங்கைக்கு இப்பொழுது தேவையான விடயம் ஒரு முறைமை மாற்றமும், அதற்கு தடையாக உள்ள அரசியல்வாதிகளை அகற்றுவதுமேயன்றி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தம்மிக்க பெரேராவோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளா விட்டால் நாட்டின் நிலை எதிர்காலத்தில் மேலும் மோசமடையலாம்

கருத்துகள் இல்லை: