சனி, 18 ஜூன், 2022

தருமபுரி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்; விளக்கம் கேட்டு கடிதம்

நக்கீரன் - இளையராஜா :  தர்மபுரி அருகே, தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம்  அளிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், வியாழக்கிழமை (ஜூன் 16), சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் கடிஹம்  அனுப்பி உள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகையில், ''ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாக புகார் வந்ததன்பேரில் அங்கு விசாரணை நடத்தினோம். அங்கு, பள்ளிக் கல்வித்துறையின் அனுமதியின்றி, ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது உண்மை எனத் தெரிய வந்தது.

அரசின் அனுமதியின்றி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேட்டிருக்கிறோம். இது பற்றிய முழு விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

 

கருத்துகள் இல்லை: