சனி, 18 ஜூன், 2022

தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டாடக் கிடைத்த குப்பையே விக்ரம்.

May be an image of 1 person and beard

Poppu Purushothaman  : அது அப்படி ஒன்றும் சொல்லிக் கூடியதில்லை என்று தெரிந்தாலும் எழுத ஒரு நியாயம் வேண்டும் என்பதற்காகவே மனசை எடுத்து நீதி தேவதையின் தராசில் வைத்து விட்டுப் பார்த்தேன்.
கேஜிஎப், RRR பார்த்து நாமென்ன சொம்பைகளாடா என்று கொதித்துக் கொண்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டாடக் கிடைத்த குப்பையே விக்ரம்.
இதுக்கு முன்னாடி கமல் செய்ததெல்லாம் எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவதற்காக நடத்திய நாடகமாம்.
இப்போத்தான் கிளர்ந்தெழுந்து வருகிறாராம்.
கலர்க்கலரா கைக்கிக் கிடைக்கிற காய்ஞ்ச புல்லை வைச்சிக் கூட மாலை கட்றாய்ங்கப்பா.


வி.சே இன் கொணஷ்டைகளும், பகத் பாசிலின் கெட்டித்தனமான உடல் மொழியும் இல்லையென்றால் இவர்கள் போடும் துப்பாக்கிச் சண்டை தீபாவளிப் பட்டாசுக்குக் காட்டும் ஜர்க்குக் கூட ஒர்த்தாகாது.
நடனங்களுக்குப் பெயர் பெற்ற நாயகன் இந்தப் படத்தில் பாக்கியராஜுக்கே டப் கொடுப்பது வரவேற்கத் தகுந்த முன்னேற்றம்.
இந்த ட்ரக்கு, கண்டைனர், போதைப் பொருள் திரும்பத் திரும்பச் சொன்னிங்களே ஒரு டீ ஸ்பூன் அளவுக்காச்சும் காட்டுனிங்களாடா.
அறுபத்தினாலு பேர்கொண்ட குடும்பத்தை அதிலும் பாவம் படிப்பறிவு கூட இல்லாத அப்பாவிகளை மூணு பொண்டாட்டிகளை வைச்சிக் கட்டிக் காப்பத்தினவனை அனாவசியமா மொத்தமா கூண்டோட கொன்னு போட்டீங்களேடா?
அழுவுற சத்தம் சத்தம் கேட்டாலே தாங்காத கொழந்தை தலையில இம்மாம் பெரிய அடைப்பானப் போட்டு அடைக்கிறிங்களே நீங்கல்லாம் வெளங்குவிங்களா?
ஒரு கொழந்தையப் பொம்ம மாரிதி அப்பப்பக் காட்டுனதுக்குப் பதிலா ஒரு பொம்மையக் கொழந்தயப் போலக் காட்டிருந்தாக் கூட முணுக்ன்னா கசியிற எங்க செண்டிமெண்டெ பேரல் பேரலா வடிச்சிக் கொடுத்திருப்போமே.
மானாங்காணியா சுட்டுக்கிட்டே இருக்கிற கமல் பால்க் காய்ச்ச அடுப்பைப் பத்த வைக்கும் போது துப்பாக்கிப் பதில் லைட்டரைட் டுபுக்கினது ஏமாற்றமாத்தான் இருந்துச்சி.
அனிருத் நமக்குக் காதும் அதுல பறையும் இருக்குன்றது தெரியாம வயித்துக்குள்ளாற ட்ரம்ஸ்க்  குச்சிய உட்டு ஆட்டிட்டே இருக்காப்ல.
வி.சே க்கு மேலே ஒரு பாஸ் ரோலக்ஸ் சூர்யா இருக்கற மாரிதி கமலுக்கு மேலே ஒரு நேர் நேர் தேமா ச்சே நேர்மையான ஆப்பீசர் விஜய் இருக்கிற மாரிதி காட்டியிருந்தா அவர் விசிறிகளும் தேட்டரில் விசிலடிச்சிப்பாங்க. கலெக்சன் இன்னும் எகிறி இருக்கும்.
எனக்குப் பக்கத்து சீட்டில் கட்டிட காண்ட்ராக்ட் தொடர்பான இடைநிலை ஊழியர் இவருக்கு வரும் போனுக்குப் பொறுப்பான பதில் சொல்லிக் கொண்டே அணே ரொம்ப நாளைக்கப்புறம் வீட்டம்மாவ சினிமாக்குக் கூட்டிட்டு வந்தேன் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோணே சாயந்திரம் வந்திர்ரேன் என்று பத்து முறையாவது ரெக்கார்டெட் டயலாக்கை உணர்ச்சிகரமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டிடக் கலைஞருக்கு உள்ள பொறுப்புணர்வும் உணர்வுக் கூறும் உங்கிட்ட எதிர்பாக்கிறது தப்பா சென்றாயன்ஸ்.
நீர்ச்சத்து வறண்ட அவரது இளம் மனைவி வாயடைப்பான் இல்லாத குழந்தையை புருசன் கையில் திணித்து விட்டு ஹாயாகப் பாப்கார்ன் கொறித்தபடி விரிந்த கண்களோடு அகன்ற திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னிக்காவது கிடைக்கும் சந்தோசம் இந்தப் பிள்ளைக்காச்சும்   கிடைச்சதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படம் முடிந்து எழுந்தால் அந்தச் சோளப் பொறி டப்பா பாதி அப்படியே கிடக்க மீதி கால்வாசி இருக்கையில் இறைந்து கிடந்தது. அதிலேயுமாடா வினை வைப்பீங்க.

வண்டி எடுக்கும் போது அவன் கொடுத்த துண்டுச் சீட்டுக்குப் பதிலாக ஐடி கார்டை எடுத்து நீட்டினேன். பார்க்காமலே மிரண்டு போய் வழி விட்டான். அந்தத் தம்பியும் படத்தைப் பலமுறை பார்த்திருப்பான் தானே.
வணிகப் படமே எடுங்க லோகேஷ். எங்க பாக்கெட் காசைத் துப்பாக்கியால் சுட்டுட்டு எடுத்துட்டுப் போய்ட்டிங்கன்னா அடுத்த வாட்டி கொடுக்க நாங்க இருக்க மாட்டோமேன்றது என் வருத்தமெல்லாம். மற்றபடி உங்க மேல எந்தக் கோவமும் இல்லே கணக்குராஜ்.

கருத்துகள் இல்லை: