சனி, 18 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழு வழக்கு அப்டேட்!

 மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கை வரும் திங்கள்கிழமை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க கேட்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அவிலிபட்டியை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 16ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் மூலம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை.


இந்த சூழலில் சூரியமூர்த்தி இன்று மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற இருப்பதால் தன்னுடைய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் வரும் ஜூன் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.  -பிரியா

கருத்துகள் இல்லை: