வெள்ளி, 18 டிசம்பர், 2020

பெங்களூரு கெஸ்ட் ஹவுசில் பெண் டி எஸ் பி மர்ம மரணம் . 4 பேர் அதிரடி கைது..

Hemavandhana -tamil.oneindia.com : பெங்களூரு: கெஸ்ட் வீட்டிற்கு விருந்தில் கலந்து கொள்ள சென்ற, டிஎஸ்பி லட்சுமி, ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி ரூமுக்குள் போய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதில், 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

பெங்களூரு நகர சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக வேலை பார்த்து வந்தவர் லட்சுமி... 32 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு தேர்வில், தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்திம் இரவு, பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சாப்பிட சென்றார்.. சாப்பிட்டு முடித்ததும், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி, ஒரு ரூமுக்குள் சென்றார்.. ஆனால், ரொம்ப நேரமாக அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் சடலத்தை மீட்டு, தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 லட்சுமியை பொறுத்தவரை மிக நேர்மையான அதிகாரியாம்.. ஒருவேளை மிக நேர்மைதான் லட்சுமியின் மரணத்துக்கு காரணமா? அல்லது பணி நெருக்கடியா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒரு டிஎஸ்பியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுகுறித்து மேலும் சிலதகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்யாணம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குருபாலஹட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்... கேஏஎஸ் அதிகாரியான இவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்... இவரது மகள்தான் லட்சுமி.. முதலில் இன்ஜினியரிங் படித்துள்ளார்.. பிறகுதான், 2014ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவருடன் காலேஜில் ஒன்றாக படித்தவர் நவீன்... 2 பேரும் அப்போதிருந்தே காதலித்துள்ளனர்... ஆனால், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. இருந்தாலும், அவரவர் வீட்டில் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர். பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகரில் இவர்கள் வசித்து வந்தனராம்.

மது விருந்து நாகர்பாவி மெயின் ரோடு விநாயகா லே அவுட் பகுதியில், இவரது உறவினரும் நண்பருமானவர் விருந்துக்கு அழைத்திருக்கிறார்.. அது மது விருந்தாம்.. அதில், பிரஜ்வல், மனோ என்ற மனோகர் உள்பட 5 பேர் இவருடன் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்... எல்லாருமே சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது அதுவரை அனைவருடனும் சேரில் உட்கார்ந்து சகஜமாக பேசி கொண்டிருந்த லட்சுமி, திடீரென்று எழுந்து மாடியில் உள்ள ரூமுக்கு போய் கதவை சாத்தி கொண்டாராம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று முதலில் நண்பர்கள் நினைத்துள்ளனர்.


தற்கொலை ரொம்ப நேரமாக வராததால்தான், கதவை உடைத்து கொண்டு உள்ளே போயிருக்கிறார்கள்.. அந்த ரூமில் இருந்த ஜன்னல் கம்பியில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்... இது தொடர்பாக லட்சுமியின் அப்பா கொடுத்த புகாரின் பேரில் நண்பர் மனோகர், பிரஜ்வல் உள்பட 4 பேரை அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


அமைச்சர் இதுகுறித்து ஹாவேரியில் பேசிய உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, "போலீஸ் துறையில் போலீசார் தற்கொலை அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை... ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி மர்மமான முறையில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது... எனவே இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை: