சனி, 19 டிசம்பர், 2020

நெல்சன் சேவியர் வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டரா? தொடர்ந்து வெளியேறப்போகும் விஜயன், சுகிர்தா?


 நீண்ட நாட்களாகவே நெல்சன் சேவியரின் அரசியல் கருத்துக்கள் மத்திய மாநில பாஜகவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி அழைப்பதையும் தவிர்த்து வந்துள்ளார்கள் என்று தெரிகிறது . குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்து வரும் கருத்துக்களையும் சங்கிகள் அவ்வளவாக ரசிக்கவில்லையாம் ..  

அத்துடன் சம்பள பாக்கியும் உண்டாம் . அதாவது வழிக்கு வா அல்லது வெளியே போ என்பது போன்ற கெடுபிடி போல் தெரிகிறது.   சங்கிகளோடு ஒத்து போகாமையால் இவர் மீது அரசின் நெருக்கடிகள் வரவும் வாய்ப்புண்டு .. அவர்களின் வழக்கம் அதுதானே?  ஊடகவியலாளர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை விஜயன்  மீதும் சுகிர்தா மீதும் கூட விரிவு படுத்த படலாம் என்ற சந்தேகம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. 

அடுத்த வெளியேற்றம் அவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

 Balamurugan S : · ஆக்கப்பூர்வமான, கூர்மையான, அவசியமான கேள்விகளை முன் வைத்து பதில்களை பெறும் வகையில் விவாதத்தை நகர்த்தி.... விருந்தினர் கோபப்படும் போது சிறு புன்னகையில் அதனை சரி செய்பவர்.... நெல்சன்சேவியர். Nelson Xavier நியூஸ்7 தொலைக்காட்சி விவாத்தில் ரஜினி, கமல், விஜய் அரசியல், அன்புமணி செங்கோட்டையன் பிரச்சனை, ஐஐடியில் மாட்டுக்கறி விவகாரம், வானதி சீனிவாசனுடனான.... என்று பல விவாதங்களில் அடுத்ததடுத்த கேள்விகளால் அசரவைத்தவர்.

 அதுவும் ரஜினி, விஜய் அரசியல் தொடர்பான விவாதம் என்று நினைக்கிறேன்.... என்னிடம் கேள்வியை முன் வைத்து தொடங்கப்பட்ட விவாதம் 8-10 நிமிடங்கள் வரை சென்றது.... கொடுக்கும் பதில்களிலிருந்து கேள்வியை சரசரவென்று கேட்டு விவாதத்தை சூடாக்கினார்.... அந்த விவாதம் Youtube ல் 6லட்சத்தை கடந்தது... என்று அங்கே பணிபுரியும் தம்பிகள் பெருமிதமாய் சொன்ன போது.... எனக்குள் அத்தனை உற்சாகம்....  ஒரு விவாதத்தில் "ரஜினி அரசியலுக்கு வரணும்னுதான் நாங்க விரும்புறோம்...." என்று நான் சொன்ன போது "பாலா நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா... கபாலி படத்துல "ம் நல்லா சாப்டுங்க..." அப்படின்னு ரஜினி சொல்றது மாதிரி இருக்கே..." என்று சிரித்துக்கொண்டே நெல்சன் சொன்னதை அப்படி ரசித்தேன்...

நெல்சன் ஒருங்கிணைக்கும் விவாதங்களில் Comfortable ஆன கேள்விகள் இருக்காது... Challenging ஆ தான் இருக்கும்.... . முன் தயாரிப்பு இல்லாமல் பேச முடியாது...
தமிழ்நாட்டின் உணர்வை உள்வாங்கி கேள்விகளை தொடுக்கும் பத்திரிக்கையாளன் நெல்சன் இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துகள்...

கருத்துகள் இல்லை: