செவ்வாய், 15 டிசம்பர், 2020

ரஜனியின் "மக்கள் சேவை கட்சி" ! .. சின்னம் ஆட்டோ..

மாலைமலர் : நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை: ரஜினிகாந்த் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளித்துள்ளார்.            இதைத்தொடர்ந்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.       234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளது.      ரஜினி பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: